மலாய் (உணவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலாய் (Malai , இந்தி: मलाई, உருது: ملائی) என்பது ஒரு வகை உறைந்த பாலேடு ஆகும். இது இந்திய துணைக் கண்டத்தின் உணவு வகைகளில் இனிப்புகளைச் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இது பசு அல்லது எருமையின் முழுப் பாலை சுமார் 80  °C (180 °F) வரை சூடாக்கி பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து குளிரவைத்து தயாரிக்கப்படுகிறது. குளிர வைக்கும்போது பாலில் உள்ள கொழுப்பு மற்றும் உறைந்த புரதங்களின் தடிமனான மஞ்சள் நிற அடுக்காக அதன் மேற்பரப்பில் உருவாகிறது. இது பின்னர் அகற்றப்படுகிறது.[1]

கொழுப்பை அகற்றவே சுடவைத்து, குளிரவைக்கும் செயல்முறை செய்யப்படுகிறது. மலாயில் சுமார் 55% வெண்ணைய் தான் உள்ளது. பசுவின் பாலைவிட எருமையின் பாலில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால், அது மலாய் உற்பத்தி செய்ய சிறந்ததாக கருதப்படுகிறது. சிறப்பான முறையில் மலாய் தயாரிக்க, 5 முதல் 12% வரை கொழுப்பு உள்ளடக்கம் கொண்ட எருமை பால் கொதிக்கவைக்கப்பட்டு பின்னர் 4  °C (39 °F) வரும்வரை ஆறவைக்கப்படுகிறது. அதேபோல, 3 முதல் 5% வரையிலான கொழுப்புள்ள பசும்பாலைக் கொதிக்கவைத்து பின்னர் ஆறவைத்து மலாய் தயாரிக்கப்படுகிறது.

பயன்பாடுகள்[தொகு]

சென்னா மற்றும் பன்னீர் கலவைக்குள் உறிக்கிடக்கும் ரசமலாய் உருண்டைகள்

மலாய் கோஃப்தா உருண்டைகள் மற்றும் மலாய் பேடா , ரசமலாய் மற்றும் மலாய் குல்பி [2]போன்ற பல்வேறு வடஇந்திய இனிப்பு உணவுகளைத் தயாரிக்க மலாய் ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளது. வறுத்த கோஃப்தா உருண்டைகள் உருளைக்கிழங்கு மற்றும் பன்னீர் [3] கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அதில் காய்கறிகள் சேர்க்கப்படும் போது சுவை இன்னும் அதிகமாகிறது. இதற்கு ஒரு உதாரணம், பச்சை பட்டாணியை முக்கிய பொருளாக வைத்து செய்யப்படும் மேத்தி மாதர் மலாய் ஆகும்.[2]


மேற்கோள்கள்[தொகு]

  1. Gupta, Mamta. "Butter Making at Home". பார்க்கப்பட்ட நாள் 16 May 2012.
  2. 2.0 2.1 "Cream Glossary - Recipes with Cream - Tarladalal.com". www.tarladalal.com.
  3. "malai kofta recipe, how to make malai kofta recipe - malai kofta curry recipe". 4 May 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாய்_(உணவு)&oldid=3655342" இலிருந்து மீள்விக்கப்பட்டது