மறைஞான சம்பந்தர்
Appearance
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி மறைஞானசம்பந்தர் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தர் சிறியனவும் பெரியனவுமான பல நூல்களை இயற்றிய புலவர்.[1] களந்தை என்னும் ஊரில் பிறந்தவர். இவரது காலம் 16ஆம் நூற்றாண்டு ஆகும். இவர் கமலாலய புராணம் செய்த ஆண்டு 1546 (கலி 4647)
இவரது ஆசிரியர்
[தொகு]- இவரது முதலாம் ஆசிரியர் களந்தை ஞானப்பிரகாச பண்டாரம். இந்த ஞானப்பிரகாச பண்டாரத்தின் ஆசிரியர் களந்தை சத்தியநாத பண்டாரம்.
- மறைஞான சம்பந்தர் காளத்தி சென்று வாழ்ந்தபோது கண்ணப்ப பண்டாரம் என்பவர் இவரது ஆசிரியர்
இவரது போக்கு
[தொகு]- இவர்களை மறைஞான சம்பந்தர் தம் நூல்களில் வணங்கவில்லை
- நால்வருக்கு வணக்கம் சொன்ன வழக்கத்தை மாற்றி காரைக்கால் அம்மையார், திருமாளிகைத் தேவர் ஆகியோருக்கு வணக்கம் சொல்கிறார்.
இவருக்கு வழங்கிய பெயர்கள்
[தொகு]- சிதம்பரத்தில் குகை மடத்தில் வாழ்ந்தபோது இவர் தன் புலன்களை அடக்குவதற்கு உதவியாகத் தன் கண்களைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தார். இதனால் இவரைக் ‘கண்கட்டி பண்டாரம்’ என மக்கள் அழைத்தனர்.
- திரு மறைஞான பம்பந்தர்
- தேசிகர்
- காளத்தி மறைஞான பம்பந்தர்
- சிதம்பரம் மறைஞான பம்பந்தர்
- குகைமடம் மறைஞான பம்பந்தர்
என்றெல்லாம் இவர் குறிப்பிடப்படுகிறார்.
மறைஞான சம்பந்தர் நூல்கள்
[தொகு]மறைஞான சம்பந்தர் பலவகையான நூல்களைப் பெரியனவும் சிறியனவுமாக எழுதியிள்ளார்.
சாத்திரப் பெருநூல்கள்
[தொகு]சிறு நூல்கள்
[தொகு]விரதங்கள் பற்றிக் கூறும் நூல்களுக்குக் 'கற்பம்' எனப் பெயரிட்டுள்ளனர். இன்னின்ன விரதங்கள் இருந்தால் இன்னின்ன பலன் கிடைக்கும் எனவும் இந்த நூல்களில் கூறப்பட்டுள்ளன.
- மகா சிவராத்திரி கற்பம் - இது 39 குறள் வெண்பாக்களால் ஆனது. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி விரதம் பற்றிகை கூறிவது.
- மாத சிவராத்திரி கற்பம் - இது 14 குறள் வெண்பாக்களால் ஆனது. மாதந்தோறும் வரும் சிவராத்திரி விரதம் பற்றிக் கூறுவது.
- சோமவாரச் சிவராத்திரி கற்பம் - இது 17 குறள் வெண்பாக்களால் ஆனது. மாதந்தோறும் வரும் சோமவார நன்னாளில் செய்யவேண்டிய பூசை முறைகளைக் கூறுவது.
- சோமவாரக் கற்பம் - இது 216 குறள் வெண்பாக்களால் ஆனது. எட்டெட்டு விளையாட்டு மதுரை ஈசனுக்கு உரியது என்றும், காசி, காளத்தி, ஆரூர் வழிபட்டால் பெறும் பயன்கள் பயன்கள் பற்றியும் கூறுகிறது.
- திருக்கோயிற் குற்றம் - இது எண்சீர் விருத்தம் இரண்டு மட்டும் கொண்ட நூல். இவற்றைச் கோயில்களில் செய்யக்கூடாது என்று சொல்லி 32 குற்றங்களை இது குறிப்பிடுகிறது.
புராணம்
[தொகு]- அருணகிரிப் புராணம்
கிடைக்காத நூல்கள்
[தொகு]- பரமத திமிரபானு
- இறைவனூறுபயன்
வடமொழி நூல்
[தொகு]- ஆன்மாத்த பூஜா பத்ததி
இவர் எழுதிய நூல்ளுக்கு இவர் கூறும் கருத்து
- இவர் தம் நூல்களை நாத்திகர்களுக்குச் சொல்லவோ, காட்டவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறார்.[2]
நூலமைதி
- விருத்தம் – சிவ தருமோத்திரம், அருணகிரி புராணம், கமலாலய மான்மியம்
- பிற பெரும்பாலும் குறள் வெண்பா
ஒப்புநோக்குக
[தொகு]கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005