உருத்திராக்க விசிட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உருத்திராக்க விசிட்டம் என்பது தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தர் இயற்றிய நூல்.
இது 108 வெண்பாக்கள் கொண்டது.
இது உருத்திராக்க மாலையில் இருக்கவேண்டிய 108 மணிகளின் எண்ணிக்கை போலும்.

அத்துடன் தொடக்கத்திலிலுள்ள பாயிரப் பகுதியில் 15 பாடல்கள் உள்ளன.

உருத்திராக்க மரம் வளர்ப்பது,
உருத்திராக்க மணி முங்களின் எண்ணிக்கை,
முக எண்ணிக்கைப் பலன்,
அணியும் முறை,
அணிந்து செபம் செய்யும் முறை,
பலன்

முதலான செய்திகள் இதில் கூறப்பட்டுள்ளன.
இந்தச் செய்திகளை இவர் ஆகமங்களிலிருந்தும், கந்தபுராணத்திலிருந்தும் திரட்டியதாகக் குறிப்பிடுகிறார்.

  • இந்த நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருத்திராக்க_விசிட்டம்&oldid=1767908" இலிருந்து மீள்விக்கப்பட்டது