மருதூர் அரங்கராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மருதூர் அரங்கராசன் (பிறப்பு: திசம்பர் 9, 1952) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். ச. அரங்கராசன் எனும் இயற்பெயருடைய இவர் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரியின் முதல்வர். ஆராய்ச்சி தொடர்பான 7 நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய "யாப்பறிந்து பாப்புனைய" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதூர்_அரங்கராசன்&oldid=2204886" இருந்து மீள்விக்கப்பட்டது