மயில்வாகனம் நிமலராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மயில்வாகனம் நிமலராஜன் யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கிய முன்னணி ஊடகவியலாளர் ஆவார்.2000 அக்டோபர் 19 அன்று, இவர் இலங்கை இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் ஆயுததாரி ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.[1]

ஊடகவியலாளராக வாழ்க்கை[தொகு]

போர் சூழல் நிலவிய யாழ்ப்பாணத்தில் இருந்து நிமலராஜன் பல செய்தி நிறுவனங்களுக்கு செய்திகளை வழங்கி வந்தார். அவற்றுள் பிபிசியின் தமிழ், சிங்கள சேவைகளும், வீரகேசரி நாளேடு, ராவய நாளேடு என்பன முக்கியமானவையாகும். நிமலராஜன் யாழ்ப்பாணத்தில் இருந்து நடுநிலையான செய்திகளை வழங்கி வந்த வெகு சிலரில் ஒருவராவார்.[2]

தாக்குதல்[தொகு]

கொலையாளிகள் அவரது வீட்டின் யன்னல் ஊடாக துப்பாக்கியால் சுட்டனர். நிமலராஜன் தான் எழுதிக் கொண்டிருந்த கட்டுரை மேலேயே தனது உயிரை விட்டார். கொலையாளிகள் வீட்டு வளாகத்தை விட்டு வெளியேறும் போது கைகுண்டு ஒன்றை வீட்டுக்குள் வீசி விட்டு சென்றனர். இத்தாக்குதல் யாழ்ப்பாண நகர மத்தியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்துள் இராணுவ ஊரடங்கு சட்டம் இயங்கும் வேலையில் நடைபெற்றது.[2] இத்தாக்குதலில் மயில்வாகனத்தின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் (65), தாய் லில்லி மயில்வாகனம் (62), மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா (11) ஆகியோரும் கடுமையான காயங்களுக்கு உள்ளானார்கள்.[1]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 தமிழ்நெட் செய்தி குறிப்பு
  2. 2.0 2.1 CPJ செய்தி குறிப்பு