கே. எஸ். ராஜா
கே. எஸ். ராஜா K.S.Rajah | ||
---|---|---|
பிறப்பு | பதுளை, இலங்கை | 8 பெப்ரவரி 1942|
இறப்பு | 3 செப்டம்பர் 1994 கொழும்பு | (அகவை 52)|
தொழில் | ஊடகவியலாளர் | |
இனம் | இலங்கைத் தமிழர் | |
குறிப்பிடத்தக்க மதிப்பு(கள்) | பிரபல வானொலி அறிவிப்பாளர் |
கனகரத்தினம் சிறிஸ்கந்தராஜா அல்லது கே.எஸ்.ராஜா (K. S. Raja) (8 பெப்ரவரி 1942 - 3 செப்டம்பர் 1994[1]) முன்னர் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பிரபலமாக இருந்த வானொலி அறிவிப்பாளர் ஆவார்.[1] இவர் பொதுவாக மின்னல் வேக அறிவிப்பாளர் எனவும் அழைக்கப்பட்டிருந்தார். வானொலி அறிவிப்பில் முதலில் வேகத்தை கொண்டு வந்தவர் இவர்.
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]ராஜாவின் இயற்பெயர் ஸ்ரீஸ்கந்தராஜா. இவர் இலங்கையின் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த நடுத்தர வகுப்புக் குடும்பத்தில் இலங்கையின் மலையகத்தில் பதுளையில் பிறந்தார்.[2] யாழ்ப்பாணம் கொட்டடியில் வளர்ந்தார். தந்தை ஒரு மருத்துவர். தாயார் ஆசிரியை. தமக்கைமார் நால்வரும் மருத்துவர்கள்.[3] 1966 இல் கொழும்பு ரோயல் கல்லூரியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அங்கு அவர் மாணவர் பேரவைத் தலைவராக இருந்து செயற்பட்டார். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்திலும், பின்னர் இலண்டன் பல்கலைக்கழகத்திலும். கணிதம் மற்றும் வேதியியலில் பட்டம் பெற்றார்.[3] இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர், வானொலி ஆர்வத்தின் காரணமாக இலங்கை வானொலியில் பணியில் சேர்ந்தார்.[3]
இலங்கை வானொலியில்
[தொகு]இவர் இலங்கை வானொலியில் முன்னணி அறிவிப்பாளராக இருந்தபோது பல வானொலி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து நடத்தி வந்தார். இவரின் நிகழ்ச்சிகளுக்கு கடல் கடந்து தென்னிந்தியாவிலும் ரசிகர்கள் இருந்தனர்.[4]
படுகொலை
[தொகு]1983 கறுப்பு யூலைக்குப் பிறகு இந்தியா சென்ற இவர் அப்போது அங்கு இயங்கி வந்த ஈழ இயக்கங்களுள் ஒன்றான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இணைந்து செயற்பட்டார். 1987 ஆம் ஆண்டில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தமது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார். இந்நிலையில் இவர் 1994 செப்டம்பர் 3 அன்று[5] இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது.
கொலை பற்றிய கருத்துக்கள்
[தொகு]ஈழ இயக்கங்களுள் ஒன்றான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் உறுப்பினரான ரி. மதிவாணன் என்பவர் தெற்காசிய ஊடக சேவை (South Asian Media Service - SAMS)க்கு அளித்த பேட்டியில் கே. எஸ். ராஜா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் கொலை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.[6] இது குறித்து ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வினவிய போது அவர் இக்குற்றச்சாட்டை நேரடியாக மறுக்காமல் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலைச் செய்யப்பட்டதாக கருதப்படும் சந்தர்ப்பங்களை எடுத்துக் காட்டினார்.[7]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tombstone Inscription[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ராமகிருஷ்ணன் (1980களின் ஆரம்பத்தில்). "இலங்கை வானொலி கே. எஸ். ராஜா பேட்டி". தினமலர்.
- ↑ 3.0 3.1 3.2 சாகும் வரை அறிவிப்பாளராகவே இருக்க விரும்புகிறேன்..!, விகடன் பொக்கிஷம், 1986, பி.இளங்கோவன், ஆர்.தேன்மொழி
- ↑ "Radio Rage". The Hindu. 25 August 2003. Archived from the original on 19 ஆகஸ்ட் 2010. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2006.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "கே. எஸ். ராஜா என்ற மகா ஆகிருதி". வண்ன வானவில். செப்டம்பர் 2012. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_2012.09.
- ↑ "Armed EPDP is a Threat to Peace". tamilcanadian.com. Archived from the original on 28 September 2011.
- ↑ "Ask Douglas Devananda questions series". lacnet.org. Archived from the original on 23 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2006.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help)
வெளியிணைப்புகள்
[தொகு]- கே.எஸ்.ராஜா நினைவலைகள் பரணிடப்பட்டது 2006-12-23 at the வந்தவழி இயந்திரம்
- கே. எஸ். ராஜா வரும்போதே பரபரப்பு
- வானொலிக் குரல்கள் பரணிடப்பட்டது 2006-10-28 at the வந்தவழி இயந்திரம்
- மதுரக் குரல் மன்னன் கே. எஸ். ராஜா
- Sri Lanka mission report பரணிடப்பட்டது 2007-09-26 at the வந்தவழி இயந்திரம்
- Nine recommendations for improving media freedom in Sri Lanka – RSF
- Media in Sri Lanka பரணிடப்பட்டது 2008-05-01 at the வந்தவழி இயந்திரம்
- Free Speech in Sri Lanka பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்