மன்யதா தத்
மன்யதா தத் Manyata Dutt | |
|---|---|
தனது பிறந்தநாளின் போது 2017-ல் | |
| பிறப்பு | தில்நவாசு சேக் 22 சூலை 1978[1] மும்பை, மகராட்டிரம், இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| பணி |
|
| அமைப்பு(கள்) | சஞ்சய் தத் தாயரிப்பு நிறுவனம் (முதன்மை செயல் அலுவலர்) |
| வாழ்க்கைத் துணை | சஞ்சய் தத் (தி. 2008) |
| பிள்ளைகள் | 2 |
மன்யதா தத் (Manyata Dutt)(பிறப்பு தில்நவாசு சேக்; 22 சூலை 1978), மன்யதா என்று அழைக்கப்படுபவர், இந்தியத் தொழிலதிபர், முன்னாள் நடிகை மற்றும் சஞ்சய் தத் தயாரிப்பு நிறுவனத்தின் தற்போதைய முதன்மை செயல் அலுவலர் ஆவார். இவர் 2008-ல் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை மணந்தார்.[1] பிரகாஷ் ஜாவின் 2003-ல் வெற்றி பெற்ற கங்காஜலில் குத்தாட்டப் பாடல் மூலம் இவர் மிகவும் பிரபலமானவர்.[1][2][3]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]
மன்யதா தத் ஒரு முஸ்லீம் குடும்பத்தில்[4] 22 சூலை 1978 அன்று மும்பையில் பிறந்தார்.[1][3] இவர் துபாயில் வளர்ந்தவர் ஆவார்.[3] இவர் திரையுலகில் சாரா கான் என்று அழைக்கப்பட்டார்.[1] 2008-ல் கமல் ரஷித் கானின் தேஷ்ட்ரோஹியில் இவர் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஜாவால் இவருக்கு "மன்யாதா" என்ற திரைப் பெயர் இடப்பட்டது.[1] ஆனால் இவரின் தந்தை இறந்தவுடன் நட்சத்திரமாக வேண்டும் என்ற இவரது விருப்பம் முடிவுக்கு வந்தது. குடும்ப வணிகத்தின் பொறுப்பைக் கவனிக்கத் தொடங்கினார்.
மன்யதா 7 பிப்ரவரி 2008 அன்று கோவாவில் சஞ்சய் தத்தை மணந்தார்.[5] இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இவர்களுக்கு 21 அக்டோபர் 2010 அன்று ஷாஹ்ரான் என்ற ஆண் குழந்தை இக்ரா என்ற பெண் குழந்தை என இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர்.[6][7]
தொழில்
[தொகு]திருமணத்திற்கு முன்பும், தத்தை சந்திப்பதற்கு முன்பும், நடிகை நிமித் வைஷ்ணவ் இணையாக லவ்வர்ஸ் லைக் அஸ் போன்ற இந்தித் திரைப்படங்களில் நடித்தார்.[8] பின்னர் படத்தின் உரிமையை சஞ்சய் தத் ரூ. 20 லட்சம் கொடுத்துப் பெற்றார்.[8]
கங்காஜல் திரைப்படத்தில் "அல்ஹத் மஸ்த் ஜவானி" என்ற குத்தாட்டப் பாடல் மான்யதா தத் நடித்துப் படமாக்கப்பட்டுள்ளது.
பெருமை
[தொகு]சஞ்சய் தத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சூன் 29, 2018 அன்று வெளியிடப்பட்ட ராஜ்குமார் கிரானி இயக்கிய வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான சஞ்சுவில், இவரது பகுதியை நடிகை தியா மிர்சா நடித்துள்ளார். ரன்பீர் கபூர் சந்சய் சத் வேடத்தில் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Singh, Harneet (29 January 2009). "From performing item numbers to becoming Mrs. Dutt: Manyata". The Indian Express. Retrieved 30 May 2016.Singh, Harneet (29 January 2009). "From performing item numbers to becoming Mrs. Dutt: Manyata". The Indian Express. Retrieved 30 May 2016.
- ↑ "Sanjay Dutt told me never give up, says wife Manyata". The Times of India. Retrieved 30 May 2016.
- ↑ 3.0 3.1 3.2 Lalwani, Vickey (5 December 2010). "From Manyata to Mrs Dutt!". Mumbai Mirror. Retrieved 30 May 2016.Lalwani, Vickey (5 December 2010). "From Manyata to Mrs Dutt!". Mumbai Mirror. Retrieved 30 May 2016.
- ↑ "Sanjay Dutt and Manyata's marriage is valid, rules court". Zee News. 28 May 2008. Retrieved 30 May 2016.
- ↑ Rao, Girish. "Sanjay Dutt weds>Manyata". Rediff. Retrieved 30 May 2016.
- ↑ "Manyata Dutt delivers twins". The Times of India. 21 October 2010. Retrieved 30 May 2016.
- ↑ "Sanjay Dutt's twins watch 'Policegiri' with their mom Manyata". News 18. 3 July 2013. Retrieved 30 May 2016.
- ↑ 8.0 8.1 Shah, Kunal M. (29 February 2008). "Bride and prejudice". Mumbai Mirror. Retrieved 30 May 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- Manyata Dutt at IMDb
- Manyata Dutt at Bollywood Hungama