மனோஜ் பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெனரல்
மனோஜ் பாண்டே
ஜெனரல் மனோஜ் பாண்டே
29வது தலைமை தரைப்படைத் தளபதி
பதவியில் உள்ளார்
பதவியில்
30 ஏப்ரல் 2022
குடியரசுத் தலைவர்ராம் நாத் கோவிந்த்
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்மனோஜ் முகுந்த் நரவானே
43வது துணை தரைப்படைத் தளபதி
பதவியில்
1 பிப்ரவரி 2022 – 30 ஏப்ரல் 2022
முன்னையவர்சண்டி பிரசாத் மொகந்தி
பின்னவர்பி. எஸ். இராஜு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 மே 1962 (1962-05-06) (அகவை 61)[1]
நாக்பூர், மகாராட்டிரம்
விருதுகள் பரம் விசிட்ட சேவா பதக்கம்
அதி விசிட்ட சேவா பதக்கம்
Military service
பற்றிணைப்பு இந்தியா
கிளை/சேவை இந்தியத் தரைப்படை
சேவை ஆண்டுகள்டிசம்பர் 1982 – தற்போது வரை
தரம் இராணுவ ஜெனரல்
அலகுபாம்பே பொறியாளர்கள் அணி
இந்திய இராணுவப் பொறியாளர்கள் அணி
கட்டளைகிழக்கு கட்டளை அதிகாரி
அந்தமான் நிக்கோபார் கட்டளைப் பிரிவு
IV நான்காம் படையணி
8-வது தரைப்படையின் மலை அணி
52வது தரைப்படை பிரிகேட்
117வது பொறியாளர்கள் ரெஜிமெண்ட்
படைச் சேவை எண்IC-40716F

ஜெனரல் மனோஜ் பாண்டே (General Manoj Chandrashekhar Pande) (பிறப்பு:6 மே 1962) PVSM, AVSM, மனோஜ் முகுந்த் நரவானே பணி ஓய்வுக்குப் பின்னர் இவர் 30 ஏப்ரல் 2022 அன்று பிற்பகலில் இந்திய தரைப்படைத் தலைவராக பதவியேற்றார். இந்தியத் தரைப்படையின் பொறியாளர்கள் பிரிவிலிருந்து, இந்திய இராணுவத் தலைமைத் தளபதியாக தேர்ந்தெடுக்கப்படும் முதல் நபர் இவராவர்.[2][3] முன்ன்ர் இவர் இந்தியத் தரைப்படையின் துணைத் தலைவராக 1 பிப்ரவரி 2022 முதல் செயலாற்றினார்.[4][5]

நாக்பூர் நகரத்தில் பிறந்த மனோஜ் பாண்டே தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் இந்திய தேசிய இராணுவக் கல்லூரியில் பயின்றவர். 1982ஆம் ஆண்டில் தற்போது பொறியாளர் படையணி அழைக்கப்படும் பாம்பே இஞ்சினியர்ஸ் குரூப் படைப்பிரிவில் செகன்ட் லெப்டிணன்ட் பதவியில் சேர்ந்தார்.

2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர் அந்தமான் நிகோபார் படைப்பிரிவின் தலைமை கட்டளைத் தளபதி ஆக நியமிக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு கிழக்கு பிராந்திய தலைமை கட்டளைத் தளபதியாக பணியாற்றிய இவர் 2022ஆம் ஆண்டு சனவரி மாதம் இராணுவத்தின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Government appoints Lt Gen Manoj C Pande as next Chief of Army Staff". Press Information Bureau. 18 April 2022.
  2. Who is General Manoj Pande, India's new army chief?
  3. ஜெனரல் மனோஜ் பாண்டே: இந்திய ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்பு
  4. Lieutenant General Manoj Pande appointed new Army Chief
  5. Lt Gen Manoj Pande, India's New Army Chief
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோஜ்_பாண்டே&oldid=3780511" இலிருந்து மீள்விக்கப்பட்டது