உள்ளடக்கத்துக்குச் செல்

மனோஜ் முகுந்த் நரவானே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனோஜ் முகுந்த் நரவானே
முப்படைகளின் தலைமைப் படைத்தலைவர் (தற்காலிகம்)
தற்காலிகம்
பதவியில்
15 டிசம்பர் 2021
குடியரசுத் தலைவர்ராம் நாத் கோவிந்த்
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்பிபின் இராவத்
27வது இந்தியத் தரைப்படை தலைமைத் தளபதி
பதவியில் உள்ளார்
பதவியில்
31 டிசம்பர் 2019
குடியரசுத் தலைவர்ராம் நாத் கோவிந்த்
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்பிபின் இராவத்
40வது இந்தியத் தரைப்படையின் துணை தலைமைத் தளபதி
பதவியில்
1 செப்டம்பர் 2019 – 31 டிசம்பர் 2019
குடியரசுத் தலைவர்ராம் நாத் கோவிந்த்
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்தேவராஜ் அன்பு
பின்னவர்சத்திந்தர் குமார் சைனி[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 ஏப்ரல் 1960 (1960-04-22) (அகவை 64)[2]
புனே, மகாராட்டிரம், இந்தியா
துணைவர்வீணா நரவானே
Military service
பற்றிணைப்பு இந்தியா
கிளை/சேவை இந்தியத் தரைப்படை
சேவை ஆண்டுகள்சூன், 1980– 30 ஏப்ரல் 2022
தரம் ஜெனரல்
அலகு7வது சீக்கிய லைட் தரைப்படை
கட்டளை
  • கிழக்கு மண்டல கட்டளை அதிகாரி
  • இராணுவப் பயிற்சி கட்டளை அதிகாரி
  • 2வது கூர்க்கா படையணி
  • அசாம் ரைபிள்ஸ்
  • 106வது தரைப்படை அணி
  • இராஷ்டிரிய ரைபிள்ஸ்
இராணுவச் சேவை எண்IC-38750H
விருதுகள்

ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே (Manoj Mukund Naravane) (பிறப்பு: 22 ஏப்ரல் 1960) 27வது இந்தியத் தரைப்படைத் தலைவர் ஆவார். மேலும் இவர் தற்காலிகமாக 15 டிசம்பர் 2021 முதல் முப்படைகளின் தலைமைப் படைத்தலைவராகவும் உள்ளார்.[3] நரவானே சீக்கிய லைட் படையணியின் 7வது பட்டாலியனில் சூன் 1980இல் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இவர் பிபின் இராவத் ஓய்வுக்கு பிறகு 31 டிசம்பர் 2019 அன்று இந்தியத் தரைப்படைத் தலைவராக பதவியேற்றார். இவர் முன்னர் கிழக்கு மண்டல கட்டளை அதிகாரி, இராணுவப் பயிற்சி கட்டளை அதிகாரி, 2வது கூர்க்கா படையணி, அசாம் ரைபிள்ஸ், 106வது தரைப்படை அணி மற்றும் இராஷ்டிரிய ரைபிள்ஸ் படையணிகளில் கட்டளை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். இவர் 30 ஏப்ரல் 2022 அன்று பணி ஓய்வு பெற்றார்.

பெற்ற பதக்கங்கள்

[தொகு]
  1. பரம் விசிட்ட சேவா பதக்கம்
  2. அதி விசிட்ட சேவா பதக்கம்
  3. விசிட்ட சேவா பதக்கம்
  4. சேனா பதக்கம்

குடும்பம்

[தொகு]

இவர் புனே நகரத்தில் பிறந்தவர்.[4][5] இவரது தந்தை முகுந்த் நரவானே இந்திய வான்படையில் விங் காமாண்டராக பணியாற்றியவர். இவரது தாய் சுதா அகில இந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றியவர் ஆவார்.[6][7] இவருக்கு வீணா எனும் மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lt Gen SK Saini appointed Vice Chief of Indian Army | Pune News - Times of India".
  2. "Lt Gen Manoj Naravane to succeed Gen Bipin Rawat as next army chief". Hindustan Times. 16 December 2019.
  3. Bhalla, Abhishek (16 December 2021). "Old system till new CDS appointed: Gen Naravane as senior-most service chief fills in for Gen Bipin Rawat". India Today. https://www.indiatoday.in/india/story/old-system-new-cds-army-chief-general-naravane-bipin-rawat-1888316-2021-12-16. 
  4. "Interesting facts about Lieutenant General Manoj Mukund Naravane who is becoming the new army chief". Business Insider. https://www.businessinsider.in/india/news/interesting-facts-about-lieutenant-general-manoj-mukund-naravane/articleshow/72830204.cms. 
  5. टीम, एबीपी माझा वेब (16 December 2019). "महाराष्ट्राचे सुपूत्र मनोज नरवणे होणार लष्करप्रमुख". marathi.abplive.com.
  6. "Pune: Studious and humble, recall next Army chief's classmates and teacher". The Times of India (in ஆங்கிலம்).
  7. "Lt Gen MM Naravane, other two military chiefs have two things in common". Hindustan Times (in ஆங்கிலம்). 18 December 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோஜ்_முகுந்த்_நரவானே&oldid=3494251" இலிருந்து மீள்விக்கப்பட்டது