மனு பண்டாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனு பண்டாரி
மனு பண்டாரி
பிறப்பு3 ஏப்ரல் 1931 (1931-04-03) (அகவை 92)
பான்பூரா, மத்தியப் பிரதேசம்
வாழ்க்கைத்
துணை
ராஜேந்திர யாதவ்

மனு பண்டாரி (Manu Bhandari) (பிறப்பு: ஏப்ரல் 3, 1931) ஒரு இந்திய எழுத்தாளர் ஆவார். 1950களின் பிற்பகுதி - 1960களின் முற்பகுதி வரை தனது படைப்புகளில் தீவிரமாக இருந்தார். ஆப்கா பாந்தி, மகாபோஜ் ஆகிய இரண்டு இந்தி புதினக்களுக்காக இவர் மிகவும் பிரபலமானவர். நிர்மல் வர்மா, ராஜேந்திர யாதவ், பீஷம் சாஹ்னி, கமலேஷ்வர் போன்ற எழுத்தாளர்களால் தொடங்கப்பட்ட இந்தி இலக்கிய இயக்கமான "நய் கஹானி" இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக அவர் அடிக்கடி புகழப்படுகிறார். 1950 களில் தொடங்கி, புதிதாக சுதந்திர இந்தியா நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் போன்ற சமூக மாற்றங்களைச் சந்தித்தது. இது பண்டாரி உட்பட 'நய் கஹானி' இயக்கத்தின் ஒரு பகுதியினரால் வழங்கப்பட்ட புதிய விவாதங்கள், புதிய கருத்துக்கள் மற்றும் புதிய பார்வைகளைக் கோரியது. விவரிப்புகள் மற்றும் கதைகள் பெரும்பாலும் பாலினங்கள், பாலின சமத்துவமின்மை மற்றும் சமத்துவம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவைக் கையாண்டன.

சுதந்திரத்திற்குப் பிந்தைய எழுத்தாளர்களில் பண்டாரியும் ஒருவர். பெண்களை ஒரு புதிய ஒளியின் கீழ், சுதந்திரமான மற்றும் அறிவார்ந்த நபர்களாக சித்தரிக்கிறார். கடந்த காலங்களில் பெண்கள் தொடர்ந்து சந்தித்த போராட்டங்களையும் சிரமங்களையும் பண்டாரி தனது கதைகளின் பொருள் மூலம் எடுத்துக்காட்டுகிறார். பாலியல், உணர்ச்சி, மன மற்றும் பொருளாதார சுரண்டல் இந்திய சமுதாயத்தில் பெண்களை மிகவும் பலவீனமான நிலையில் வைத்திருந்தது. இவரது கதைகளில் பெண் கதாபாத்திரங்கள் வலுவான, சுயாதீனமான நபர்களாக சித்தரிக்கப்படுகின்றன. பழைய பழக்கங்களை உடைத்து, ஒரு புதிய பெண்ணின் உருவத்தை உருவாக்குகின்றன.

சுயசரிதை[தொகு]

பண்டாரி, மத்தியப் பிரதேசத்தின் பான்பூராவில்1931 ஏப்ரல் 3 அன்று பிறந்தார். பின்னர், ராஜஸ்தானின் அஜ்மீரில் பெரும்பாலும் வளர்ந்தார். இவரது தந்தை சுக்சம்பத் ராய் பண்டாரி, ஒரு சுதந்திர போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியும், ஆங்கில அகராதியை இந்திக்கும், மராத்திக்கும் முதன் முதலில் தயாரித்தவரும் ஆவார். [1] பண்டாரி தனது பெற்றோருக்கு ஐந்து குழந்தைகளில் இளையவர் (இரண்டு சகோதரர்கள், மூன்று சகோதரிகள்). அஜ்மீரில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் இந்தி மொழி மற்றும் இந்தி இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1946ஆம் ஆண்டில், தனது ஆசிரியர் ஷீலா அகர்வாலின் ஆதரவுடன் ஒரு வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்ய உதவினார். அதன் பின்னர் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்துடன் தொடர்பு கொண்டதற்காக இவரது இரண்டு சகாக்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். [2] இவர் ஆரம்பத்தில் கொல்கத்தாவில் இந்தியில் விரிவுரையாளராக பணிபுரிந்தார். ஆனால் பின்னர் பல்கலைக்கழகத்தில் உள்ள மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் இந்தி இலக்கியம் கற்பிக்க தில்லிக்கு திரும்பினார்.

குடும்பம்[தொகு]

இவர் இந்தி எழுத்தாளரும் ஆசிரியருமான ராஜேந்திர யாதவின் மனைவியாவார். [3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனு_பண்டாரி&oldid=3359837" இலிருந்து மீள்விக்கப்பட்டது