பீஷம் சாஹ்னி
பீஷம் சாஹ்னி | |
---|---|
பிறப்பு | இராவல்பிண்டி, பாக்கித்தான் | 8 ஆகத்து 1915
இறப்பு | 11 சூலை 2003 தில்லி, இந்தியா | (அகவை 87)
தொழில் | எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர் |
காலம் | 1955–2003 |
கையொப்பம் | |
பீஷம் சாஹ்னி (Bhisham Sahni; 8 ஆகத்து 1915 – 11 சூலை 2003) ஓர் இந்தி மொழி எழுத்தாளரும், நாடக ஆசிரியரும், நடிகரும் ஆவார். பாக்கித்தான் நாட்டின் இராவல்பிண்டியில் பிறந்த இவர் பாக்கித்தான் பிரிவினையின் அவலங்கள் குறித்து எழுதிய தமசு (இருள்) என்ற புதினம் மிகவும் புகழ் பெற்றதாகும். இது ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், சப்பான், குசராத்தி, மலையாளம், காஷ்மீரி, மணிப்புரி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. தொலைக்காட்சித் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. இவர் 1998ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான இந்திய அரசின் பத்ம பூசண் விருதினைப் பெற்றார்.[1] நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய இவரது தமசு நூலுக்கு 1975ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. மேலும் 1979-ல் சிரோமணி எழுத்தாளர் விருது, உத்தரப்பிரதேச மாநில அரசின் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் புகழ்பெற்ற இந்தி நடிகர் பல்ராஜ் சாஹ்னியின் இளைய சகோதரர் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.