மதுரம் சந்தோஷம்
மதுரம் சந்தோஷம் | |
---|---|
பிறப்பு | வேலூர் |
பணியிடங்கள் | ஜான்ஸ் ஹாப்கின்ஸ் புளூம்பெர்க் பொது சுகாதாரப் பள்ளி |
கல்வி கற்ற இடங்கள் | ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் |
மதுரம் சந்தோஷம் (Mathuram Santosham) ஓர் அமெரிக்க இந்திய மருத்துவர். இவர், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மாநிலங்களில் ஒன்றான மேரிலாந்திலுள்ள பால்ட்டிமோர் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் புளூம்பெர்க் பொது சுகாதாரப் பள்ளியின் பேராசிரியராகவும் தலைவராகவும் உள்ளார். நீரிழப்பைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படும் ஒரு வகை திரவ மாற்றான வாய்வழி மறுசீரமைப்பு சிகிச்சை மற்றும் குழந்தைப் பருவ தடுப்பூசிகள் குறித்த தனது பணிகளுக்காக சந்தோஷம் மிகவும் பிரபலமானவர். மேலும் இவர், பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்துகிறார்.
ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்
[தொகு]தமிழ்நாட்டின் வேலூரில் ஜான் வில்பிரட் சந்தோஷம் மற்றும் புளோரா செல்வநாயகம் ஆகியோருக்கு இவர் பிறந்தார். இவரது தந்தை இந்திய இராஜதந்திர சேவையின் ஒரு பகுதியாக இருந்தார். இவருக்கு எட்டு வயது வரை சரியான வகுப்பறைக் கல்வி கிடைக்கவில்லை. [1] பன்னிரெண்டாவது வயதில், இவர், ஐக்கிய இராச்சியத்தின் கிளாஸ்கோவுக்குச் சென்றார். அங்கு இவர் ஓர் உறைவிடப் பள்ளியில் பயின்றார். அந்த இளம் வயதிலேயே, தான் ஒரு மருத்துவர் ஆக வேண்டுமெனெ நினைத்தார். மேலும் இவரது ஆசிரியரான மிஸ் கிராண்ட் இவருக்கு வழிகாட்டினார். பாண்டிச்சேரியில் உள்ள ஜவகர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவம் பயின்றார். தனது கல்லூரியின் இறுதி ஆண்டில், இவரது தாயார் ஒரு குறிப்பிடத்தக்க பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இறந்தார். 1970இல் பட்டம் பெற்ற பிறகு, சந்தோஷம் பால்ட்டிமோர் சென்றார். அங்கு தேவாலய மருத்துவமனையில் ஒரு பயிற்சித் திட்டத்தில் சேர்ந்தார். இந்தப் பயிற்சியினால் ஏமாற்றமடைந்த இவர் பின்னர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு இவருக்கு அமெரிக்க மருத்துவரான பிராட்லி சாக் என்பவர் வழிகாட்டினார். அங்கு இவர் பொது சுகாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்
ஆராய்ச்சியும் தொழிலும்
[தொகு]1980களின் முற்பகுதியில், இவர் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர் மற்றும் அலாஸ்கா தொல்குடி சமூகங்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டினார். [2] இவரது ஆராய்ச்சி தென்மேற்கு பழங்குடியினரின் பாரம்பரியத்திலிருந்து கற்றுக் கொள்ளவும், பயிற்சி மற்றும் அதிகாரமளித்தல் மூலம் பழங்குடியினரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முயன்றது. தொற்று நோய்கள், போதைப் பொருள் பயன்படு, எயிட்சு]] மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் தொல்குடி சமூகங்களுக்கு மிகவும் முக்கியமான சுகாதார பிரச்சினைகளென இவர் கருதினார். [1] [3] இந்தப் பணியின் ஒரு பகுதியாக, வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீரிழப்புக்கு சிகிச்சையளிக்க வாய்வழி மறுசீரமைப்பு சிகிச்சையை (இப்போது பெடியலைட் என அழைக்கப்படுகிறது) கொண்டு வந்தார். [4] அந்த காலத்தில், மருத்துவ சமூகம் பெடியலைட்டின் செயல்திறன் குறித்து சந்தேகம் கொண்டிருந்தது. சந்தோஷம் சிகிச்சையை மறுசீரமைத்தார். பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை அடையாளம் காண்பதில் பெற்றோருக்கு ஆதரவாக சேவைகள் வழங்கும் தொழிலாளர்கள் குழுவுக்கு பயிற்சி அளித்தார். போர்ட் அப்பாச்சி இந்தியப் பகுதிகளில் இவர் ஒரு வெற்றிகரமான ஆராய்ச்சி சோதனையை நிறுவினார். இது பெடியலைட்டின் தாக்கத்தை நிரூபித்தது. மேலும், நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் தங்கள் நோய்காலம் முழுவதும் உணவை சாப்பிட்டால் அவர்கள் விரைவாக முன்னேறுவார்கள் என்பதைக் காட்டியது. [5] இந்த சிகிச்சையானது ஐம்பது மில்லியன் உயிர்களைக் காப்பாற்றியது என்று பின்னர் மதிப்பிடப்பட்டது. 1991 ஆம் ஆண்டில் இவர், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அமெரிக்க சுகாதார மையத்தை நிறுவினார். அதை இவர் பதினைந்து ஆண்டுகள் இயக்கியுள்ளார்.
வட அமெரிக்காவில், பூர்வீக அமெரிக்கர்கள் தடுப்பூசி-தடுக்கக்கூடிய நோய்களால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ரோட்டா வைரசு, இன்புளூயன்சா வகை பி மற்றும் நிமோகோகல் தடுப்பூசி உள்ளிட்ட பல குழந்தை பருவ தடுப்பூசிகளுக்கான செயல்திறன் சோதனைகளை சந்தோஷம் வழிநடத்தினார். [6] இந்த தடுப்பூசிகளை பரப்ப சந்தோஷம் பூர்வீக அமெரிக்க சமூகங்களுடன் நெருக்கமாக பணியாற்றினார். பூர்வீக நவாஜோ மக்களின் குழந்தைகளில் ஹீமோபிலஸ் இன்புளூயன்சா வகை பி குழந்தைத் தடுப்பூசி பற்றிய இவரது செயல்திறன் ஆய்வுகள் வட அமெரிக்காவில் வைரசை அகற்றுவதற்கு காரணமாக அமைந்தன. பின்னர் இவர் 37 மில்லியன் டாலர் தடுப்பூசிகள் மற்றும் நோய்த் தடுப்புக்கான உலகளாவிய கூட்டணியின் முன்முயற்சியைத் தொடங்கினார். இது வளரும் நாடுகளில் இணைந்த தடுப்பூசியைப் பயன்படுத்த முயன்றது. [7] [8] ஆய்வு தொடங்கியபோது, கூட்டணியின் ஆதரவுக்கு தகுதியான நாடுகளில் 20% மட்டுமே தடுப்பூசியை அறிமுகப்படுத்தியிருந்தன. [9] 2014 ஆம் ஆண்டளவில், கூட்டணி தகுதி வாய்ந்த நாடுகளில் 95% க்கும் அதிகமானோர் தங்கள் தேசிய நோய்த்தடுப்பு திட்டங்களில் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளனர். தடுப்பூசி 2020 க்குள் ஏழு மில்லியன் உயிர்களைக் காப்பாற்றியிருக்கும் என்று தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டணி மதிப்பிட்டுள்ளது.
விருதுகள்
[தொகு]- ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதற்காக 1988 திராஷர் ஆராய்ச்சி நிதி விருது [10]
- 2006 நிமோகாக்காஸ் மற்றும் நிமோகோகல் நோய் பற்றிய சர்வதேச சிம்போசியம் பாப் ஆஸ்திரிய சொற்பொழிவாளர்
- தொழில் சேவைக்கான 2008 இந்திய சுகாதார சேவை இயக்குநர்கள் விருது [11]
- 2011 சபின் தடுப்பூசி நிறுவனம் ஆல்பர்ட் சபின் தங்கப் பதக்கம் விருது [12]
- 2013 இராதா பதக் மனிதாபிமான விருது [13]
- 2014 உடல்நலம் மேம்படுத்துவதற்கான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு [14]
தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீடுகள்
[தொகு]- Baqui, Abdullah H; El-Arifeen, Shams; Darmstadt, Gary L; Ahmed, Saifuddin; Williams, Emma K; Seraji, Habibur R; Mannan, Ishtiaq; Rahman, Syed M et al. (2008). "Effect of community-based newborn-care intervention package implemented through two service-delivery strategies in Sylhet district, Bangladesh: a cluster-randomised controlled trial". The Lancet 371 (9628): 1936–1944. doi:10.1016/s0140-6736(08)60835-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:0140-6736. பப்மெட்:18539225.
- Baqui, Abdullah H; El-Arifeen, Shams; Darmstadt, Gary L; Ahmed, Saifuddin; Williams, Emma K; Seraji, Habibur R; Mannan, Ishtiaq; Rahman, Syed M et al. (2008). "Effect of community-based newborn-care intervention package implemented through two service-delivery strategies in Sylhet district, Bangladesh: a cluster-randomised controlled trial". The Lancet 371 (9628): 1936–1944. doi:10.1016/s0140-6736(08)60835-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:0140-6736. பப்மெட்:18539225.
- Kumar, Vishwajeet; Mohanty, Saroj; Kumar, Aarti; Misra, Rajendra P; Santosham, Mathuram; Awasthi, Shally; Baqui, Abdullah H; Singh, Pramod et al. (2008). "Effect of community-based behaviour change management on neonatal mortality in Shivgarh, Uttar Pradesh, India: a cluster-randomised controlled trial". The Lancet 372 (9644): 1151–1162. doi:10.1016/s0140-6736(08)61483-x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0140-6736. பப்மெட்:18926277.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Herndon, Jonathan; Health, JH Bloomberg School of Public. "At Home on the Reservation". Johns Hopkins Bloomberg School of Public Health (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-19.
- ↑ "IHS Director recognizes Johns Hopkins Center for American Indian Health Director with award | 2011 Press Releases". Newsroom (in ஆங்கிலம்). 2011-06-28. பார்க்கப்பட்ட நாள் 2020-07-19.
- ↑ Benham, Barbara; Health, JH Bloomberg School of Public. "Mathuram Santosham Receives 2014 Fries Prize for Improving Health". Johns Hopkins Bloomberg School of Public Health (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-19.
- ↑ "Dr. Mathuram Santosham Receives 2014 Albert B. Sabin Gold Medal Award | Sabin". www.sabin.org. பார்க்கப்பட்ட நாள் 2020-07-19.
- ↑ "Profile of Mathuram Santosham's life and work published | Center for American Indian Health". caih.jhu.edu. Archived from the original on 2020-07-20. பார்க்கப்பட்ட நாள் 2020-07-19.
- ↑ "Mathuram Santosham". Rota Council (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-07-20. பார்க்கப்பட்ட நாள் 2020-07-19.
- ↑ "Dr. Mathuram Santosham Receives 2014 Albert B. Sabin Gold Medal Award | Sabin". www.sabin.org. பார்க்கப்பட்ட நாள் 2020-07-19."Dr. Mathuram Santosham Receives 2014 Albert B. Sabin Gold Medal Award | Sabin". www.sabin.org. Retrieved 2020-07-19.
- ↑ "Mathuram Santosham, M.D., M.P.H., Joint Appointment in Pediatrics". Johns Hopkins Medicine (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-19.
- ↑ Benham, Barbara; Health, JH Bloomberg School of Public. "Mathuram Santosham Receives 2014 Fries Prize for Improving Health". Johns Hopkins Bloomberg School of Public Health (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-19.Benham, Barbara; Health, JH Bloomberg School of Public. "Mathuram Santosham Receives 2014 Fries Prize for Improving Health". Johns Hopkins Bloomberg School of Public Health. Retrieved 2020-07-19.
- ↑ "Mathuram Santosham". Rota Council (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-07-20. பார்க்கப்பட்ட நாள் 2020-07-19."Mathuram Santosham" பரணிடப்பட்டது 2020-07-20 at the வந்தவழி இயந்திரம். Rota Council. Retrieved 2020-07-19.
- ↑ "IHS Director recognizes Johns Hopkins Center for American Indian Health Director with award | 2011 Press Releases". Newsroom (in ஆங்கிலம்). 2011-06-28. பார்க்கப்பட்ட நாள் 2020-07-19."IHS Director recognizes Johns Hopkins Center for American Indian Health Director with award | 2011 Press Releases". Newsroom. 2011-06-28. Retrieved 2020-07-19.
- ↑ "2015 Albert B. Sabin Gold Medal Award | Sabin". www.sabin.org. Archived from the original on 2020-07-19. பார்க்கப்பட்ட நாள் 2020-07-19.
- ↑ chaicounselors1355 (2013-11-02). "CHAI Annual Awards – Winners Announced". CHAI (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-19.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Mathuram Santosham Receives 2014 Fries Prize for Improving Health | CDC Foundation". www.cdcfoundation.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-19.