மதய் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மதய் பள்ளிவாசல்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்வட கேரளம், கண்ணூர் மாவட்டம், பழயங்காடி
சமயம்சுன்னி இசுலாம் - சூபியிசம்
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டிடக்கலை வகைபள்ளிவாசல்
கட்டிடக்கலைப் பாணிஇந்தோ சரசனிக் பாணி (தற்போதைய கட்டுமானம்)
நிறைவுற்ற ஆண்டு2006 (தற்போதைய கட்டுமானம்)
1124 AD (H. 518) (பழைய கட்டுமானம்)
அளவுகள்

மதய் பள்ளிவாசல் ( மலையாளம் : മാടായി പള്ളി, மதய் பள்ளி; பழயங்காடி மசூதி) என்பது வடக்கு கேரளத்தின் கண்ணூர் மாவட்டம், பழயங்காடியில் உள்ள பள்ளிவாசல் ஆகும். இது கேரளத்தின் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றாகும். இதுகுறித்த உள்ளூர் தொன்மக்கதைகள் கி.பி 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையவை. இது மாலிக் இப்னு தினாரால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும் பள்ளிவாசலுக்கு தேவையான பளிங்குகற்களை மக்காவிலிருந்து இப்னு தினார் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. [1] பழயங்காடி / பயங்காடியைச் சுற்றியுள்ள பல பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்றாகும். இது குப்பம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, இது வளபட்டணம் ஆறு அதன் கழிமுகத்தில் இணைகிறது.

இந்த பள்ளிவாசல் சுப்பிரமணியருக்கு கட்டபட்ட முன்னாள் இந்து கோவிலாகும். பள்ளிவாசலின் தூண்களிலும் அடித்தளச் சுவர்களில் உள்ள இந்து கல்வெட்டுகளை இன்னும் காணலாம். கோலாத்திரி மன்னரின் உதவியுடன் மதாய் மசூதி கட்டப்பட்டது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pilgrim's progress". The Hindu (30 June 2003).
  2. Husain Raṇṭattāṇi. Mappila Muslims: A Study on Society and Anti Colonial Struggles Other Books, Calicut (2007)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதய்_பள்ளி&oldid=3008376" இருந்து மீள்விக்கப்பட்டது