மடகாசுகர் வாலாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மடகாசுகர் வாலாட்டி
அண்டாசிபே-மந்தாடியா தேசிய பூங்காவில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பசாரிபார்மிசு
குடும்பம்:
மோட்டாசில்லிடே
பேரினம்:
மோட்டாசில்லா
இனம்:
மோ. பிளவிவென்ட்ரிசு
இருசொற் பெயரீடு
மோட்டாசில்லா பிளவிவென்ட்ரிசு
ஹார்ட்லாப், 1860[2]

மடகாசுகர் வாலாட்டி (Madagascar wagtail)(மோட்டாசில்லா பிளவிவென்ட்ரிசு) என்பது மோட்டாசில்லிடே குடும்பத்தில் உள்ள ஒரு வாலாட்டிக் குருவிச் சிற்றினம் ஆகும். இது மடகாசுகரில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரி ஆகும்.

விளக்கம்[தொகு]

பெரினெட் காப்பகத்தில்

மடகாசுகர் வாலாட்டி பெரிய, நேர்த்தியான மற்றும் மெல்லிய வாலாட்டி குருவி ஆகும். இது சாம்பல் மேல் பகுதியினையும், வெள்ளை மார்பகத்தினையும் மஞ்சள் வயிற்றையும் கொண்டுள்ளது. மார்பகத்தின் குறுக்கே கருப்பு பட்டை காணப்படும். நீண்ட வாலின் மையத்தில் அடர் வண்ணம் காணப்படும். வெள்ளை நிற வெளிப்புற வால் இறகுகளையும் கொண்டுள்ளது. குறுகிய வெள்ளை நிற இறகுகள் தலைப்பகுதியில் காணப்படுகிறது. இளம் பறவைகளில் வெள்ளை நிற மார்பக பட்டை மற்றும் மங்கலான இறகுகளும் உள்ளன. உடல் நீளம் 19 cm (7.5 அங்) ஆகும்.

பரவல்[தொகு]

மடகாசுகர் வாலாட்டி மடகாசுகர் தீவில் மட்டுமே காணக்கூடியது.[3] இத்தீவு முழுவதும் காணப்படுகின்றது. இத்தீவின் கிழக்கு மற்றும் மத்திய பீடபூமியில் காணக்கூடியது. இது வடக்கு மற்றும் மேற்கில் குறைவாகவும், தெற்கில் அரிதாகவும் உள்ளது.[4]

வாழ்விடம்[தொகு]

மடகாசுகர் வாலாட்டி பொதுவாக ஆறுகள், ஏரிகள் மற்றும் கடற்கரைகள் போன்ற நீரைச் சுற்றியும், திறந்த பகுதிகளான நெற்பயிர்கள் மற்றும் தோட்டங்களிலும் காணப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 2,500 மீட்டர்கள் (8,200 அடி) ) வரையிலான பகுதிகளில் காணப்படுகிறது.

உயிரியல்[தொகு]

மடகாசுகர் வாலாட்டியின் உணவில் முக்கியமாகச் சிறிய முதுகெலும்பில்லாத உயிரினங்கள், குறிப்பாகப் பூச்சிகள் மற்றும் சிலந்திகள் உள்ளன. இது தரையில் நடந்து அல்லது ஓடுவதன் மூலம் உணவு தேடுகிறது, வழக்கமான வாலாட்டி பாணியில் இதன் வாலை மேலும் கீழும் ஆட்டும். இரையைப் பிடிக்க திடீரென்று காற்றில் சில மீட்டர்கள் மேலே பறந்து செல்லும். ஆகத்து மற்றும் நவம்பர் மாதங்களுக்கிடையில் இனப்பெருக்கம் செய்கிறது. இரட்டை அடைகாக்கும் தன்மை கொண்டது. முதல் அடைகாப்பில் பொரித்த குஞ்சுகள் பெரும்பாலும் தங்கள் இரண்டாவது குஞ்சுகளுக்கு உணவளிப்பதன் மூலம் பெற்றோருக்கு உதவுகின்றன.[4] இதன் கூடு கிண்ண வடிவிலானது. இது தரையில் அடர்த்தியான பசுமையான பகுதியில், மரக்கிளையின், பாறை பிளவு, கட்டிடத்தின் கூரையின் கீழ் தண்ணீருக்கு அமைக்கின்றன.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Motacilla flaviventris". IUCN Red List of Threatened Species 2016: e.T22718375A94578121. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718375A94578121.en. https://www.iucnredlist.org/species/22718375/94578121. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. "Madagascar Wagtail Motacilla flaviventris Hartlaub, 1860". Avibase. Denis Lepage. பார்க்கப்பட்ட நாள் 22 October 2016.
  3. Sinclair, Ian; Langrand, Olivier (1998). Birds of the Indian Ocean Islands. Struik. பக். 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-86872-035-7. https://books.google.com/books?id=v7orZe55T5EC&q=%22Madagascar+wagtail%22. [தொடர்பிழந்த இணைப்பு]Sinclair, Ian; Langrand, Olivier (1998).
  4. 4.0 4.1 Tyler, Stephanie (2020). "Madagascar Wagtail (Motacilla flaviventris)". in Del Hoyo, Josep; Elliott, Andrew; Sargatal, Jordi et al.. Madagascar Wagtail (Motacilla flaviventris). Lynx Edicions. doi:10.2173/bow.madwag1.01. http://www.hbw.com/species/madagascar-wagtail-motacilla-flaviventris. பார்த்த நாள்: 22 October 2016. Tyler, Stephanie (2020).
  5. Morris, Pete (1998). Birds of Madagascar: A Photographic Guide. Yale University Press. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மடகாசுகர்_வாலாட்டி&oldid=3654735" இலிருந்து மீள்விக்கப்பட்டது