மஞ்சம்மா ஜோகதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சம்மா ஜோகதி
பிறப்புமஞ்சுநாத ஷெட்டி
18 ஏப்ரல்1964
கல்லுகம்பா, பெல்லாரி, கருநாடகம்
பணி
  • நடனக் கலைஞர்
  • பாடகர்
  • ஆர்வலர்
  • நாடக நடிகை
விருதுகள்இராஜ்யோத்சவ விருது (2010)
பத்மசிறீ (2021)

மஞ்சம்மா ஜோகதி (Manjamma Jogathi) (பிறப்பு மஞ்சுநாத ஷெட்டி ) (18 ஏப்ரல் 1964), ஒரு இந்திய கன்னட நாடக நடிகையாவார். வடகன்னட மாவட்டத்தின் நாட்டுப்புற நடன வடிவமான "ஜோக்தி நிருத்யா"வின் பாடகியும் நடனக் கலைஞருமாவார். 2019 ஆம் ஆண்டில், நாட்டுப்புற கலைகளுக்கான மாநிலத்தின் சிறந்த நிறுவனமான கர்நாடக ஜனபட அகாதமிக்கு தலைமை தாங்கிய முதல் திருநங்கை ஆனார். நாட்டுப்புற கலைத்துறையில் இவர் செய்த பங்களிப்புக்காக 2021 சனவரியில் இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருதை அறிவித்தது.

சுயசரிதை[தொகு]

கருநாடகவின் பெல்லாரி மாவட்டத்தின் கல்லுகம்பா கிராமத்தில் அனுமந்தையா மற்றும் ஜெயலட்சுமிக்கும் மஞ்சுநாத ஷெட்டியாக பிறந்தார். [1] இவர் தாவண்கரேவில் பத்தாம் வகுப்பு வரை படித்தார். 1975 ஆம் ஆண்டில், இவரது பெற்றோர் இவரை ஹோஸ்பேட்டிற்கு அருகிலுள்ள ஹுலிகெம்மா கோவிலுக்கு அழைத்துச் சென்று "ஜோகப்பா" என்று புனிதப்படுத்தினர். இது ஒரு சடங்காகும். இதில் பக்தர்கள் தங்களை கடவுளை மணப்பதாக நம்புகிறார்கள். இதன் பிறகு ஷெட்டி பெண் அடையாளத்துடன் மஞ்சம்மா ஜோகதி என்று அறியப்பட்டார்.

தனது பதினாறு வயதில் இவரது பெண்களைப் போன்ற நடத்தைக்காக இவர் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். மஞ்சம்மா புடவைக் கட்டிக்கொண்டு தெருக்களில் பிச்சை எடுக்க ஆரம்பித்தார். தாவண்கரே பேருந்து நிலையத்தில் 'ஜோக்தி நிருத்யா'வைச் சேர்ந்த ஒரு தந்தை-மகன் என்ற இரட்டையரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்த மஞ்சம்மா, அதைப் பற்றிய மேலும் அறிய அவர்களுடன் சேர்ந்தார். ஒரு வருடம் கற்றல் மற்றும் நிகழ்ச்சிக்குப் பிறகு, குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் அகரிபொம்மன்ன அள்ளியின் காலவ்வா என்பவரின் ஜோகதி நடனக் குழுவிற்கு மஞ்சம்மாவை அறிமுகப்படுத்தினார்.

பணிகள்[தொகு]

ஜோகதி நிருத்யா மற்றும் ஜனபட பாடல்கள், கன்னட மொழி கவிதைகள் போன்ற பல கலை வடிவங்களை இவர் பல்வேறு பெண் தெய்வங்களை புகழ்ந்து தேர்ச்சி பெற்றார்.

இவர் இந்த கலை வடிவங்களில் நிபுணத்துவம் பெற்றார். மேலும், கர்நாடகாவிற்கு உள்ளேயும் வெளியேயும் நூற்றுக்கணக்கான இடங்களில் நிகழ்ச்சியை நடத்தியாதால் மக்களிடையே புகழ் பெற்றார். அழிந்துவரும் கலை வடிவங்கள் பலவற்றின் கவனத்தை ஈர்க்க இவர் உதவினார்.

தொழில்[தொகு]

நாடக அரங்கம்[தொகு]

மஞ்சம்மா, காலவ்வாவின் ஜோகதி நடனக் குழுவில் நிரந்தர நடனக் கலைஞரானார். இது மாநிலம் முழுவதும் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியது. [2] காலவ்வாவின் மரணத்திற்குப் பிறகு, இவர் குழுவின் பொறுப்பை எடுத்துக் கொண்டார். மேலும், நடனத்தை மக்கள் மத்தியில் பிரபலமாக்கினார். ஒரு கலைஞராக, 2010 இல், மஞ்சம்மா கர்நாடக அரசிடமிருந்து இராஜ்யோத்சவ விருதைப் பெற்றார்.

கர்நாடக ஜனபாத அகதாமியின் தலைமை[தொகு]

இவர் முதலில் கர்நாடக ஜனபட அகாதமியின் உறுப்பினராகவும் பின்னர் அதே நிறுவனத்தின் தலைவராகவும் மாநில அரசால் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் மாநிலத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கான சிறந்த நிறுவனத்திற்கு தலைமை தாங்கிய முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றார். [3]

விருதுகள்[தொகு]

  • இந்திய அரசு தனது நான்காவது மிக உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருதை பெற்றார்.
  • 2010 - கர்நாடக அரசிடமிருந்து இராஜ்யோத்சவ விருது [4]
  • மஞ்சம்மாவின் வாழ்க்கை கதை கர்நாடக நாட்டுப்புற பல்கலைக்கழகம் மற்றும் கர்நாடக மாநில மகளிர் பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் அதன் இளங்கலை மாணவர்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளது. [5] [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ಹರಿದ ಉಡದಾರ ನನ್ನನ್ನು ಹೆಣ್ಣಾಗಿಸಿತು!: ಮಂಜಮ್ಮ ಜೋಗತಿ". https://www.prajavani.net/district/bengaluru-city/maneyangaladalli-matukate-manjamma-jogati-705746.html. 
  2. "A place to call home". The New Indian Express. 30 Nov 2020. https://www.newindianexpress.com/cities/bengaluru/2020/nov/30/a-place-to-callhome-2229715.html. 
  3. "Manjamma Jogati first transwoman to head an academy in Karnataka". The Hindu. 16 Oct 2019. https://www.thehindu.com/news/national/karnataka/manjamma-jogati-first-transwoman-to-head-an-academy-in-state/article29715337.ece. 
  4. "Rajyotsava Awards". Official Government Website. பார்க்கப்பட்ட நாள் 16 Jan 2021.
  5. "ಜಾನಪದ ಅಕಾಡೆಮಿ ಅಧ್ಯಕ್ಷೆಯಾಗಿ ನೇಮಕವಾಗಿರುವ ಮೊದಲ ತೃತೀಯ ಲಿಂಗಿ ಜೋಗತಿ ಮಂಜಮ್ಮ!". https://www.kannadaprabha.com/specials/2019/oct/17/in-a-first-a-transwoman-to-head-karnataka-janapada-academy-404139.html. 
  6. "Why you should read about transgender folk artist Manjamma Jogathi's life in this Kannada book". https://www.edexlive.com/beinspired/2020/nov/15/this-book-on-janapada-academys-manjamma-jogathi-will-open-your-eyes-and-ears-to-her-life-and-artform-15772.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சம்மா_ஜோகதி&oldid=3185888" இலிருந்து மீள்விக்கப்பட்டது