ஹொசபேட்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹோஸ்பேட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஹொசபேட்டை
ಹೊಸಪೇಟೆ
Hospet
நகரம்
அடைபெயர்(கள்): இரும்பு நகரம், விஜயநகரத்தின் பின் பக்க கதவு
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகம்
மாவட்டம்விஜயநகர மாவட்டம்
தோற்றுவித்தவர்கிருஷ்ணதேவராயர்
பெயர்ச்சூட்டுநாகலாபுரம்
அரசு
 • வகைநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்54.81 km2 (21.16 sq mi)
ஏற்றம்479 m (1,572 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்206,159
 • தரவரிசைஇந்திய அளவில் 224-ஆவது இடம்; கர்நாடகா மாநில அளவில் 13-ஆவது இடம்
 • அடர்த்தி4,048.68/km2 (10,486.0/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்583 201, 02, 03, 23, 25
தொலைபேசி குறியிடு எண்08394
வாகனப் பதிவுKA-35

ஹொசபேட்டை (Hospet) இந்திய மாநிலமான, மத்திய கர்நாடகத்தில் உள்ள விஜயநகர மாவட்டத்திலுள்ள நகராட்சி மன்றம் ஆகும்.[1] இந்நகரம் துங்கபத்திரை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஹோஸ்பேட் நகரத்தின் பெயரை 1 நவம்பர் 2014 முதல் ஹொசப்பேட்டே (Hosapete) என பெயர் மாற்றம் செய்து கர்நாடக அரசு அறிவித்துள்ளது.[2]

ஹொஸ்பெடை நகரம் இந்தியாவின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றான ஹம்பியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும், பெங்களூரிலிருந்து 330 கிலோ மீட்டர் தொலைவிலும், பெல்லாரி நகரத்திலிருந்து 60 கிலொ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. ஹொஸ்பெட்டை நகரம் விஜயநகரப் பேரரசின் தலைநகராக விளங்கியது. ஹொஸ்பேட்டை இரும்பு கனிமங்களும், இரும்பாலைகளும் கொண்டது.

மக்கள் தொகையியல்[தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஹொஸ்பெட்டை நகரத்தின் மொத்த மக்கள் தொகை 2,06,159 ஆகும். எழுத்தறிவு 80% ஆகும். ஆறு வயதிற்குட்டவர்களின் விழுக்காடு 12% ஆகும். [3]

ஹொஸ்பெட்டை நகர சமயத்தினர்
சமயம் சதவீதம்
இந்துக்கள்
71%
இசுலாமியர்கள்
20%
கிறித்தவர்கள்
3.3%
சமணர்கள்
5%
பிறர்†
0.7%
Distribution of religions
சீக்கியர்கள் (0.2%), பௌத்தர்கள் (<0.2%)உட்பட

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொசபேட்டே&oldid=3691633" இருந்து மீள்விக்கப்பட்டது