உள்ளடக்கத்துக்குச் செல்

மச்சிவாரா போர்

ஆள்கூறுகள்: 30°55′N 76°12′E / 30.91°N 76.2°E / 30.91; 76.2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மச்சிவாரா போர் (அ) மாச்சீவாடா போர்
நசிருதீன் உமாயூன் போர் நடவடிக்கை பகுதி
நாள் 15 மே 1555
இடம் மாச்சீவாடா
30°55′N 76°12′E / 30.91°N 76.2°E / 30.91; 76.2
முகலாயர்கள் வெற்றி
பிரிவினர்
முகலாயப் பேரரசு சூர் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
நசிருதீன் உமாயூன்
பைராம் கான்
சக்கர் கான்
நசீப் கான்
தார்தார் கான்
பலம்
15,000-20,000[1] 30,000
இழப்புகள்
அறியப்படவில்லை அறியப்படவில்லை

மச்சிவாரா போர் அல்லது மாச்சிவாடா போர் (Battle of Machhiwarra) முகலாயப் பேரரசிற்கும் சூர் பேரரசிற்கும் இடையே நடைபெற்றது.

பின்னணி

[தொகு]

இஸ்லாம் ஷா சூரி மரணத்திற்குப் பிறகு, சூர் பேரரசு ஒரு உள்நாட்டுப் போரில் ஈடுபட்டது, அங்கு அரியணைக்கான பல்வேறு போட்டியாளர்கள் மேலாதிக்கத்திற்காக ஒருவருக்கொருவர் போராடினர். நசிருதீன் உமாயூன் காபூலில் இருந்து ஒரு இராணுவத்தை அணிதிரட்டியபோது, சிக்கந்தர் சா சூரி இப்ராஹிம் சா சூரி எதிரான தனது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இவர் 1555 பிப்ரவரியில் ரோடாசு கோட்டை மற்றும் லாகூர் ஆகிய இடங்களைக் கைப்பற்றினார். இவரது படைகளின் மற்றொரு பிரிவு தீபால்பூர் மற்றும் ஜலந்தரைக் கைப்பற்றியது. இவர்களின் படைப்பிரிவில் ஒன்று சிர்ஹிந்தை நோக்கி முன்னேறியது.[2]

போர்

[தொகு]

சிக்கந்தர் அவர்களைத் தடுக்க நசீப் கான் மற்றும் டார்டார் கான் ஆகியோரின் கீழ் 30,000 பேரைக் கொண்ட படையை அனுப்பினார், ஆனால் அவர்கள் மாச்சிவாடாவில் முகலாய இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டனர், இது முகலாயர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சிர்ஹிந்துக்கு வழியைத் திறந்தது.[3]

பின் விளைவு

[தொகு]

உமாயூன் சுர் நிலங்களில் தனது படையெடுப்பைத் தொடர்ந்தார், அதைத் தொடர்ந்து சிர்ஹிந்த் போரில் வெற்றி பெற்றதால் உமாயூன் முகலாயப் பேரரசை மீண்டும் நிறுவ முடிந்தது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Begum, Gulbadan (1902). The History of Humāyūn (Humāyūn-nāmah). Royal Asiatic Society. p. 260.
  2. Majumdar, R.C. (ed.) (2007).
  3. Majumdar, R.C. (ed.) (2007).
  4. "Battles for India at Sirhind". Times of India Blog (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-03-18. பார்க்கப்பட்ட நாள் 2022-10-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மச்சிவாரா_போர்&oldid=4067879" இலிருந்து மீள்விக்கப்பட்டது