இப்ராகிம் சா சூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்ராகிம் சா சூரி
சுர் பேரரசின் சுல்தான்
ஆட்சிக்காலம்ஜனவரி 1555 - பெப்ரவரி 1555
முன்னையவர்முகமது அடில் சாஅ
பின்னையவர்சிக்கந்தர் சா சூரி
இறப்பு1567/1568
மரபுசூர் (பஷ்தூன் பழங்குடியினர்)
அரசமரபுசூர் (பஷ்தூன் பழங்குடியினர்)
மதம்சுன்னி இசுலாம்

இப்ராகிம் சா சூரி (Ibrahim Shah Suri) சுர் வம்சத்தின் ஐந்தாவது ஆட்சியாளர். ஆவார். இது வட இந்தியாவின் இடைக்காலத்தின் இருந்த பிற்கால பஷ்தூன் வம்சமாகும்.

ஆட்சி[தொகு]

கி.பி.1555 இல் ஆக்ராவின் ஆளுநராக இருந்த இவர். தில்லி சுல்தானுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார். கிளர்ச்சியை அடக்க அடில் சா தனது இராணுவத்தை அனுப்பினார், ஆனால் இவர் அடிலின் இராணுவத்தை தோற்கடித்து தில்லி நோக்கி அணிவகுத்தார். தில்லியைக் கைப்பற்றிய பிறகு, இவர், இப்ராகிம் சா சூரி என்ற அரச பட்டத்தை ஏற்றுக்கொண்டார் . ஆனால் அதே ஆண்டில், சிக்கந்தர் சா சூரி ஆக்ராவிலிருந்து 32 கிமீ தொலைவிலுள்ள பரா என்ற இடத்தில் இப்ராகிமின் படைகளைச் சந்தித்து தோற்கடித்தார். பின்னர், சிக்கந்தர் தில்லி மற்றும் ஆக்ரா இரண்டையும் கைப்பற்றினார்.[1]

பிற்கால நாட்கள்[தொகு]

தில்லி மற்றும் ஆக்ராவை இழந்த பிறகு, இப்ராகிம் அடில் சாவுடன் தனது சண்டையைத் தொடங்கினார். ஆனால், முதலில் கல்பிக்கு அருகில் மற்றும் அடுத்து கானுவாவுக்கு அருகில் என இரண்டு முறை ஹெமு தலைமையிலான அடிலின் இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டார். இப்ராகிம் பயனா கோட்டையில் தஞ்சம் புகுந்தார், ஆனால் அது ஹெமுவின் படையால் முற்றுகையிடப்பட்டது. ஹெமுவை அடில் திரும்ப அழைத்தபோது இவருக்கு சிறிது ஓய்வு கிடைத்தது. பின்னர், இப்ராகிம் நூர்பூர் இராச்சியத்தின் பக்த் மாலுடன் இணைந்து ஒரு மலைக்கோட்டையைக் கட்டினார். அங்கிருந்து படைகளைத் திரட்டிக் கொண்டு குர்தாஸ்பூரில் முகலாயர்களைத் தாக்கினார். ஆனால் முகலாயர்கள் மவு கோட்டை முற்றுகையை நீடித்தவுடன் ஒரிசாவில் தஞ்சம் பெற வேண்டியிருந்தது, அங்கு 1567-68 இல் இறந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Majumdar, R.C. (ed.) (2007). The Mughul Empire, Mumbai: Bharatiya Vidya Bhavan, வார்ப்புரு:Listed Invalid ISBN, pp.94-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்ராகிம்_சா_சூரி&oldid=3843633" இலிருந்து மீள்விக்கப்பட்டது