மங்கள தேவி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடிபாடுகள் கோயில்
இடிந்த மண்டப்ம்

மங்கள தேவி கோவில் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் விதிஷா மாவட்டத்தில் காக்புர் கிராமத்தில் அழிந்து விட்ட இந்து ஆலயம் ஆகும். இது விதிஷாவிலிருந்து 33 கி.மீ., தூரத்தில் மாநில நெடுஞ்சாலை 19 இல் அமைந்துள்ளது.

கட்டிடக்கலை[தொகு]

இந்தக் கோவில் 10-11 ஆம் நூற்றாண்டில் பரமாரப் பேரரசின் காலத்தில் கட்டப்பட்டது. மங்கள தேவியின் உருவத்தை 1306 ஆம் ஆண்டு நிறுவியுள்ளனர்.[1]

இக்கோயிலில் திரபங்கா என்ற முத்திரையுடன் கூடிய நாககன்னி (நாக வழிபாடு) படிமத்தையும் கொண்டுள்ளது. இசுதானிக சம்பத் முத்திரையுடன் ஒரு தேவதை மற்றும் ஆலிங்கணத்தில் உள்ள மூன்று மனித உருவங்கள் ஆகிய படிமங்களையும் கொண்டுள்ளது.

கோவில் வளாகத்தில் பன்னிரண்டு தூண்கள் சமதளமான மேல்விதானம் கொண்ட மண்டபமும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கள_தேவி_கோவில்&oldid=3503170" இலிருந்து மீள்விக்கப்பட்டது