மங்களூர் ரொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

மங்களூர் ரொட்டி
மங்களூர் ரொட்டி
தொடங்கிய இடம்மங்களூர்-உடுப்பி, கருநாடகம்
பகுதிகருநாடகம்
முக்கிய சேர்பொருட்கள்வாழைப்பழம், அனைத்து வகையான மாவு

மங்களூர் ரொட்டி (Mangalore buns) என்பது இந்தியாவின் கருநாடகாவின் உடுப்பி - மங்களூர் பகுதியில் மங்களூர் உணவு அல்லது உடுப்பி உணவு வகைகளிலிருந்து உருவாகும் நன்கு வறுத்த ரொட்டி ஆகும்.[1][2] இந்த ரொட்டிகள் குறைவான இனிப்புடன், மென்மையான பஞ்சுபோன்ற உப்பிக் காணப்படும். அனைத்து வகையான மாவு மற்றும் வாழைப்பழம் முக்கிய பொருட்களாக இருக்கும்.[3] பொதுவாகக் காரமான தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் உடன் இது பரிமாறப்படுகிறது. இவை எந்த துணை உணவும் இல்லாமலும் சாப்பிடப்படுகின்றன.[4][5] இந்த ரொட்டியானது கேழ்வரகு மற்றும் சோளம் ஆகியவை சேர்த்தும் தயாரிக்கப்படுகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dhanyata M Poovaiah (2020-10-10). "Some fried delights from Karnataka". Deccan Herald.
  2. "Have you had these seven iconic Mangalore dishes?". The Indian Express. 2016-04-18.
  3. Anila Kurian (2020-01-05). "What are Bengaluru's favourite street foods". Deccan Herald.
  4. "Mangalorean Buns – Fried Banana Bread". Goan Imports. 2015-06-20.
  5. "Mangalore Buns (Banana Puris) - KonkaniFoodRecipes.com". www.konkanifoodrecipes.com.
  6. Shalini Rajani (2020-07-06). "Millet Mangalore Buns are perfect for the monsoons; here's how you can make them". The Indian Express.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்களூர்_ரொட்டி&oldid=3856629" இலிருந்து மீள்விக்கப்பட்டது