மகால் விரைவு தொடருந்து
மதுரை-சென்னை எழும்பூர் மகால் அதிவேக விரைவு தொடருந்து ( கும்பகோணம் வழி) | |
---|---|
கண்ணோட்டம் | |
வகை | விரைவு தொடருந்து |
முதல் சேவை | ஏப்ரல் 25, 2010 |
நடத்துனர்(கள்) | தெற்கு ரெயில்வே |
வழி | |
தொடக்கம் | மதுரை சந்திப்பு |
இடைநிறுத்தங்கள் | 9 |
முடிவு | சென்னை எக்மோர் சந்திப்பு |
ஓடும் தூரம் | 561 km (349 mi) |
சேவைகளின் காலஅளவு | வாரமிருமுறை |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டி, இரண்டாம் வகுப்பு ஈரடுக்கு மற்றும் மூன்றடுக்கு பெட்டிகள், முன்பதிவு கொண்ட படுக்கை மற்றும் அமரும் வசதி கொண்ட பெட்டிகள் |
இருக்கை வசதி | வசதி உண்டு |
படுக்கை வசதி | வசதி உண்டு |
உணவு வசதிகள் | வசதி இல்லை |
தொழில்நுட்பத் தரவுகள் | |
சுழலிருப்பு | Standard Indian Railway coaches |
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
வேகம் | 55.64 km/h (35 mph) |
மதுரை சந்திப்பு - சென்னை எக்மோர் விரைவு தொடருந்து அல்லது மகால் விரைவு தொடருந்து கும்பகோணம் சந்திப்பு வழித்தடத்தில் தெற்கு ரெயில்வே துறையால் இயக்கப்படும் இந்திய ரெயில்வே துறைக்கு சொந்தமான தொடருந்தாகும். இந்த வண்டி மதுரை சந்திப்பில் இருந்து திருச்சிராப்பள்ளி சந்திப்பு தஞ்சாவூர் சந்திப்பு, கும்பகோணம் சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, சிதம்பரம், விழுப்புரம் சந்திப்பு வழியாக சென்னை எக்மோர் சந்திப்பு நிலையத்தை சென்று அடைகிறது.
மதுரை சந்திப்பு முதல் சென்னை எக்மோர் சந்திப்பு வரை இயக்கப்படும் தொடர் வண்டி 22624 என்ற எண்ணிலும் மறு மார்க்கமாக சென்னை எக்மோர் முதல் மதுரை சந்திப்பு வரை இயக்கப்படும் தொடர்ந்து 22623 என்ற எண்ணிலும் வாரம் இருமுறை இயங்கி வருகிறது.
பெயர்க்காரணம்
[தொகு]தமிழ் நாட்டின் மதுரை மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நாயக்கர் கால கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் நாயக்கர் மகால் வரலாற்று சின்னத்தை பெருமைப்படுத்தும் விதமாக விதமாக இந்த தொடருக்கு மகால் விரைவு தொடருந்து என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இழுவை இயந்திரம்
[தொகு]இவ்விரு நிலையங்களுக்கும் இடையே உள்ள இருப்புப்பாதையில் மின்சார இழுவை வசதி இன்னமும் அமல்படுத்தப் படாத படாத காரணத்தால் பொன்மலை ரயில்வே பணிமனையால் பராமரிக்கப்படும் WDM 3A என்ற டீசல் இழுவை இயந்திரம் பயன்படுத்தி இந்த தொடர்வண்டி இயக்கப்படுகிறது .
பயணத்திட்டம்
[தொகு]மகால் விரைவு தொடருந்து கீழ்க்கண்ட வழிமுறையில் இயக்கப்பட்டு வருகிறது.
வண்டி எண் | நிலையக் குறியீடு | புறப்படும் நிலையம் | புறப்படும் நேரம் | புறப்படும் நாள் | சேரும் நிலையம் | சேரும் நேரம் | சேரும் நாள் |
---|---|---|---|---|---|---|---|
22623 | MS | சென்னை எக்மோர் தொடர்வண்டி நிலையம் | 23:50 | ஞாயிற்றுக்கிழமை, வெள்ளிக்கிழமை | மதுரை | 10:00 | மறு நாள் (திங்கள் கிழமை, சனிக்கிழமை) |
22624 | MDU | மதுரை | 21:05 | வியாழக்கிழமை, சனிக்கிழமை | சென்னை எக்மோர் தொடர்வண்டி நிலையம் | 07:15 | அடுத்த நாள் (வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) |
வழித்தடங்கள்
[தொகு]- செங்கல்பட்டு சந்திப்பு
- விழுப்புரம் சந்திப்பு
- திருப்பாதிரிப்புலியூர்
- சிதம்பரம்
- மயிலாடுதுறை
- கும்பகோணம்
- தஞ்சாவூர் சந்திப்பு
- திருச்சிராப்பள்ளி சந்திப்பு
- திண்டுக்கல் சந்திப்பு என ஒன்பது நிறுத்தங்களை கடந்து சேரும் இடத்தை(மதுரை/சென்னை) வந்தடைகிறது.
திருவிழா மற்றும் சிறப்புக் காரணங்களால் சில நேரங்களில் மேல்மருவத்தூர் நிலையத்திலும் நிறுத்தப்படுவது உண்டு.
பயணப் பெட்டிகளின் வடிவமைப்பு
[தொகு]முதல் வகுப்பு ஈரடுக்கு குளிர்சாதன பெட்டி ஒன்று, இரண்டாம் வகுப்பு மூன்றடுக்கு பெட்டிகள் இரண்டு, முன்பதிவு கொண்ட படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் எட்டு, முன்பதிவு வசதி இல்லாத பொதுப் பெட்டிகள் நான்கு, இரண்டாம் வகுப்பு சரக்கு பெட்டிகள் இரண்டு என மொத்தம் பதினேழு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. கிழே வரிசைக்கிரமம் சுட்டப்பட்டுள்ளது.
EN—SLR—UR—UR—S8—S7—S6—S5—S4—S3—S2—S1—B2—B1—HA1—UR—UR—SLR
பயணிகளின் எண்ணிக்கை, விழாக்காலங்கள் போன்றவைகளைப் பொறுத்து ரெயில்வே நிர்வாகத்துறையினர் பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் நிறுத்தங்கள் போன்றவற்றை அவ்வப்போது மாற்றம் செய்து அறிவிப்பார்கள்.
வண்டி எண் 22623
[தொகு]இந்த மகால் விரைவு தொடருந்து வண்டியானது சென்னை எக்மோர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மற்றும வெள்ளிக்கிழமை என வாரம் இரு முறை இரவு 11.50 மணிக்கு இயக்கப்பட்டு செங்கல்பட்டு சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை,கும்பகோணம், தஞ்சாவூர் சந்திப்பு,திருச்சிராப்பள்ளி சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு என ஒன்பது நிறுத்தங்களை மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 10 மணி 10 நிமிடங்களில் மதுரை தொடருந்து நிலையத்தை மறுநாள் காலை 10:00 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 561 கிலோ மீட்டர் ஆகும். இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தெற்கு ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[1]
வண்டி எண் 22624
[தொகு]மறுமார்க்கமாக இந்த 22624 என்ற எண்ணைக் கொண்ட தொடருந்து வண்டியானது மதுரை தொடருந்து நிலையத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை என வாரம் இரு முறை இரவு 09.05 மணிக்கு இயக்கப்பட்டு ஒன்பது நிறுத்தங்களில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 10 மணி 10 நிமிடங்களில் சென்னை எக்மோர் தொடருந்து நிலையத்தை மாலை 07.15 மணிக்கு சென்றடைகிறது. இதன் மொத்த பயண தூரம் 463 கிலோ மீட்டர் ஆகும். இந்த தொடருந்திற்கு 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி தென்மேற்கு ரெயில்வேயினால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது அகல இரயில் பாதைகளில் இயக்கப்படக்கூடியதாகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://erail.in/train-enquiry/22623.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ https://erail.in/train-enquiry/22624.
{{cite web}}
: Missing or empty|title=
(help)