மகாராஜா வீர் விக்ரம் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராஜா வீர் விக்ரம் பல்கலைக்கழகம்
Maharaja Bir Bikram University
வகைபொது
உருவாக்கம்2015
வேந்தர்திரிபுரா ஆளுநர்
துணை வேந்தர்சத்தியதியோ போடர்
அமைவிடம், ,
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்mbbuniversity.ac.in

மகாராஜா வீர் விக்ரம் பல்கலைக்கழகம் (Maharaja Bir Bikram University) என்பது இந்தியாவின் திரிபுராவின் அகர்தலாவில் அமைந்துள்ள மாநில பல்கலைக்கழகம் ஆகும்.[1] இது மகாராஜா பிர் பிக்ரம் பல்கலைக்கழக சட்டம், 2015 [2] மூலம் திரிபுரா அரசாங்கத்தால் 2015இல் நிறுவப்பட்டது. திரிபுரா மாநிலத்தில் உள்ள முதலாவது மற்றும் திரிபுரா மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மாநில பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் கவுதம் குமார் பாசு ஆவார்.[3] சத்யடியோ போடார் டிசம்பர் 2019இல் இதன் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். திரிபுராவின் மாநிலத்தின் கடைசி மகாராஜாவான வீர் விக்ரம் கிசோர் தெபர்மா மாணிக்ய பகதூர் நினைவால் இப்பல்கலைக்கழகம் பெயரிடப்பட்டது.

இணைவுப்பெற்ற கல்லூரிகள்[தொகு]

மகாராஜா வீர் விக்ரம் பல்கலைக்கழகத்தில் மூன்று இணைந்த கல்லூரிகள் உள்ளன.[4]

  • மகாராஜா வீர் விக்ரம் கல்லூரி
  • வீர் விக்ரம் நினைவு கல்லூரி
  • திரிபுரா அரசு சட்டக் கல்லூரி

மேலும் காண்க[தொகு]

  1. "List of State Universities as on 29.06.2017" (PDF). University Grants Commission. 29 June 2017. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
  2. "Maharaja Bir Bikram University Act, 2015" (PDF). Tripura Gazette. Government of Tripura. 16 September 2015. Archived from the original (PDF) on 1 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 1 August 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Vice Chancellor". Maharaja Bir Bikram University. Archived from the original on 2018-01-21. பார்க்கப்பட்ட நாள் 1 August 2017.
  4. "Affiliated colleges". mbbuniversity.ac.in. Maharaja Bir Bikram University. பார்க்கப்பட்ட நாள் 31 January 2019.

மேற்கோள்கள்[தொகு]

 


வெளி இணைப்புகள்[தொகு]