மகதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகதா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
மலக்கோசிடுரக்கா
வரிசை:
உள்வரிசை:
குடும்பம்:
ஜிகேர்சினுசிடே
பேரினம்:
மகதா

என்ஜி & தே, 2001
மாதிரி இனம்
மகதா அதோனிசு என்ஜி & தே, 2001
சிற்றினம்
  • மகதா அதோனிசு என்ஜி & தே, 2001
  • மகதா கெலயா பாகிர் & என்ஜி , 2005
  • மகதா அயோரா என்ஜி & தே, 2001
  • மகதா இலாகுனா பாகிர் & என்ஜி , 2005
  • மகதா ஓர்னாடிபிசு (உரூக்சு, 1915)
  • மகதா ரெஜினா பாகிர் & என்ஜி , 2005

மகதா (Mahatha) என்பது இலங்கையில் காணப்படும் நன்னீர் நண்டு பேரினமாகும். வாழ்விட இழப்பு காரணமாக ஆறு சிற்றினங்களில் நான்கு சிற்றினங்கள் மிக அருகிய இனமாக உள்ளன.[1] மேலும் இரண்டு செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் எனப் பட்டியலிடப்பட்டுள்ளன.

சிற்றினங்கள்[தொகு]

மகதா அதோனிசு[தொகு]

மகதா அதோனிசு என்பது பரவலாகக் காணப்படும் சிற்றினமாகும். இது மகாவலி ஆற்றுப்படுகை, நக்கிள்சு மலைத்தொடர் மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாகக் கருதப்படுகிறது.

மகதா கெலயா[தொகு]

மகாதா கெலயா என்பது கொழும்பு - அப்புத்தளை பிரதான வீதியில் களுபகனவிற்கு அருகில் உள்ள பகுதிகளிலிருந்து மட்டுமே அறியப்படுகிறது. இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் மிக அருகிய இனமாகக் கருதப்படுகிறது. கேலயா என்ற குறிப்பிட்ட சிற்றினப்பெயரானது இலங்கையில் வசிப்பவரைக் குறிக்கும் சிங்கள வார்த்தையிலிருந்து வந்ததாகும்.[2]

மகாதா அயோரா[தொகு]

மகதா அயோரா துன்கிந்த அருவிக்கு அருகில் உள்ள பகுதியில் மட்டுமே காணப்படும் மிக அருகிய இனம் ஆகும்.

மகதா இலாகுனா[தொகு]

மகதா இலாகுனா காலிக்கு அருகில் உள்ள பகுதியிலிருந்து மட்டுமே அறியப்படுகிறது. இது மிக அருகிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தச் சிற்றினம் கண்டுபிடிக்கப்பட்ட ஆழமான துளை போன்ற பகுதியினை குறிப்பிட இலத்தின் மொழியில்"துளை" எனப்பொருள்படும் ’இலாகுனா’ என்ற இலத்தின் சொல் பயன்படுத்தப்பட்டது.[2]

மகதா ஓர்னாடிபிசு[தொகு]

மகதா ஓர்னாடிபிசு முதன் முதலில் 1915-ல் உரூக்சால் பாராதெல்பூசா ஓர்னாடிபிசு என விவரிக்கப்பட்டது.பின்னர் இது சிலோந்தெல்பீயூசா இன்பிஅதிசிமா போத் 1970 என விவரிக்கப்பட்டது. இலங்கையின் ஈர மண்டலத்தில் பரவலாக காணப்படும் இந்தச் சிற்றினம் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகக் கருதப்படுகிறது.

மகதா இரெசினா[தொகு]

மகதா இரெசினா இலங்கையில் புந்தாலுயோ அருகில் உள்ள பகுதிகளிலிருந்து மட்டுமே அறியப்படுகிறது. இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் மிக அருகிய இனமாகக் கருதப்படுகிறது. இரெசினா எனும் சிற்றினப் பெயரின் இலத்தின் சொல்லான regina என்பது இலத்தீன் மொழியில் "இராணி" எனும் இதன் "அரச தோற்றத்தை" குறிக்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. International Union for the Conservation of Nature and Natural Resources; Ministry of Environment and Natural Resources (2007). The 2007 Red List of Threatened Fauna and Flora of Sri Lanka. கொழும்பு, Sri Lanka. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-955-8177-63-1. 
  2. 2.0 2.1 2.2 Mohomed M. Bahir; Peter K. L. Ng (2005). "Descriptions of ten new species of freshwater crabs (Crustacea: Brachyura: Parathelphusida: Ceylonthelphusa, Mahatha, Perbrinckia) from Sri Lanka". Raffles Bulletin of Zoology Suppl. 12: 47–75. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s12/s12rbz047-075.pdf. பார்த்த நாள்: 2022-10-27. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகதா&oldid=3846885" இலிருந்து மீள்விக்கப்பட்டது