போவின் மரபணுத்தொகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல் 1 டொமினெட் 01449, போவின் மர்பணுத்தொகை திட்டத்தின் மூலம் ஹியர்ஃபோர்ட்

பெண் ஹியர்போர்ட் பசுவின் மரபணுத்தொகையானது (Bovine genome) 2009இல் வெளியிடப்பட்டது.[1] இது மாட்டின மரபணுத்தொகை வரிசை முறையிடுதல் ஆராய்தல் கூட்டமைப்பு, தேசிய சுகாதார நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க வேளாண்மைத் துறை தலைமையிலான ஆராய்ச்சியாளர்களின் குழுவால் வரிசைப்படுத்தப்பட்டது.[2] இது கால்நடை வளர்ப்பினை மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக அமைந்தது. இந்நேரத்தில் வரிசைப்படுத்தப்பட்ட மிகப்பெரிய மரபணுக்களில் இதுவும் ஒன்றாகும்.[3]

மரபணுத்தொகுப்பு[தொகு]

மாட்டின மரபணுத்தொகையின் அளவு 3 ஜிகா பைட் ஆகும் (3 பில்லியன் நியுக்ளியோடைடு இணைகள்). இதில் ஏறக்குறைய 22,000 மரபணுக்கள் உள்ளன. இவற்றில் 14,000 மரபணுக்கள்பாலூட்டி இனங்களில் பொதுவாகக் காணப்படுபவை. மாட்டின மரபணுக்களில் 80 சதவிகிதம் மனிதர்களின் மரபணுக்களை ஒத்துள்ளன. பசுக்கள் மனிதர்களைவிட கொறிணிகளுடன் அதிக தொடர்புடையன. மனிதர்களும் கொறிணிகளும் சூப்பராபிரைமேட்டுகளின் வழியினைச் சார்ந்தவை). இவை நாய்கள் மற்றும் கொறிணிகளுடன் சுமார் 1,000 மரபணுக்களைப் பகிர்ந்துகொள்கின்றன. ஆனால் இந்த மரபணுக்கள் மனிதர்களில் அடையாளம் காணப்படவில்லை.[4]

மரபணுக்களின் டி. என். ஏ. வேறுபாடுகள், கால்நடைகளுக்கிடையே எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும், இந்த வேறுபாடுகள் ஒருமைப் பண்பு வகைமையில் எவ்வாறு கால்நடையின் பொருளாதார மதிப்பில் பால், இறைச்சி, தோல் முதலிய பண்பில் பங்குகொள்கின்றன என்பதும் ஆய்விற்குரியது. தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கத்தை மேம்படுத்துவதற்கும், சில கால்நடை பண்புகளை விவசாயிகளின் நலனுக்காக மாற்றுவதற்கும் புதிய கண்ணோட்டத்திற்கு வழிவகை செய்துள்ளது.[5] [6]

குழு[தொகு]

போவின் ஜீனோம் சீக்வென்சிங் அண்ட் அனாலிசிஸ் கன்சோர்டியம் மரபணுவை வரிசைப்படுத்தும் பணியினை 300 ஆராய்ச்சியாளர்களுடன் 25 நாடுகள் பங்களிப்புடன் ஆறு வருடமாக செய்தது. இதனை ஐக்கிய அமெரிக்காவின், தேசிய நல கழகம் மற்றும் அமெரிக்க விவசாயத் துறை முன்னின்று நடத்தியது.[2]

மேலும் காண்க[தொகு]

  • கால்நடைகள்
    • ஹெர்ஃபோர்ட் கால்நடைகள்
  • டி.என்.ஏ
  • மரபணு
    • சர்வதேச ஹாப்மேப் திட்டம்
    • வரிசைப்படுத்தப்பட்ட யூகாரியோடிக் மரபணுக்களின் பட்டியல்
    • போவின் மரபணுவில் கலப்பு SINE டிரான்ஸ்போசன்கள்
    • போவின் மரபணு தரவுத்தளம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Science Podcast, 04/24/09 includes advances in livestock research including the sequencing of the cattle genome and insights into the history of sheep domestication". Science. 24 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-04-26.
  2. 2.0 2.1 Elsik, C.G. # (2009). Bovine Genome Sequencing and Analysis Consortium. "The genome sequence of taurine cattle: a window to ruminant biology and evolution". Science 324 (5926): 522–528. doi:10.1126/science.1169588. பப்மெட்:19390049. 
  3. Lewin, H.A. (2009). "It's a bull's market". Science 324 (5926): 478–479. doi:10.1126/science.1173880. பப்மெட்:19390037. 
  4. "Cow genome unraveled in bid to improve meat, milk". Associated Press. 2009-04-23 இம் மூலத்தில் இருந்து 2012-03-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120320174646/http://informsciencenetwork.com/genetics/cow-genome-unraveled-bid-improve-meat-milk-427669a. பார்த்த நாள்: 2009-04-23. 
  5. Gill, V. (23 April 2009). "Cow genome 'to transform farming'". BBC News. பார்க்கப்பட்ட நாள் 2009-04-25.
  6. Gibbs, R.A. # (2009). Bovine HapMap Consortium. "Genome-wide survey of SNP variation uncovers the genetic structure of cattle breeds". Science 324 (5926): 528–532. doi:10.1126/science.1167936. பப்மெட்:19390050. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போவின்_மரபணுத்தொகை&oldid=3716472" இலிருந்து மீள்விக்கப்பட்டது