போளூர் கோயில், கோழிக்கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போளூர் கோயில், கோழிக்கோடு என்பதானது இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஒரு காலத்தில் ஜாமோரின் தலைநகராக இருந்த இப்பகுதியின் பழமையான கோயில்களில் ஒன்றான சுப்பிரமணியர் கோயிலாகும். [1] இந்தக் கோயில் கோழிக்கோட்டிலிருந்து 12 கி.மீ.தொலைவிலும், பரம்பில் பஜார், முழிக்கல் ஆகிய இடங்களிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ள குருவட்டூர் ஊராட்சியில் போளூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

பொரளத்திரி மன்னர் இந்த இடத்தின் ஆதிக்கம் செலுத்தியதால் இவ்வூர் இப்பெயரைப்பெற்றது. இக்கோயிலில் போளூரப்பன் எனப்டுகின்ற சுப்ரமணியர், கணபதி, வேட்டக்கொருமகன், அய்யப்பன், தேவி ஆகியோர் உள்ளனர். மூலவர் சுப்ரமணியசுவாமி மேற்கு நோக்கி தியான அல்லது எழுதுவது போன்ற நிலையில் உள்ளார்.

திருவிழாக்கள்[தொகு]

சுப்ரமணிய சுவாமி பிறந்த நாளான தைப்பூசத்தை மக்கள் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இவ்விழா இக்கோயிலில் மகரம் மாதத்தில் நடைபெறுகின்ற முக்கியமான திருவிழாவாகும். கோயிலுக்கு வெளியில் ஒரு சர்ப்ப காவு உள்ளது. சர்ப்ப பூசை ஆண்டுக்கு ஒரு முறை செய்யப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Welcome to Kerala window". பார்க்கப்பட்ட நாள் 2015-09-21.