போனோ நா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போனோ-நா
கார்கோனில் போனோ-நா ஒன்றுகூடல் திருவிழாவின் கடைசி நாள்
அதிகாரப்பூர்வ பெயர்போனோ-நா
பிற பெயர்(கள்)சோபோ சருப்லா[1][2]
கடைபிடிப்போர்பரோக்பா மக்கள்
வகைபரோக்பா மக்கள், கலாச்சாரம்
முக்கியத்துவம்சமூகத்திற்கு நல்ல பயிர்கள் மற்றும் செழிப்பினை தந்த மினாரோ கடவுள்களுக்கும் தெய்வங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா
கொண்டாட்டங்கள்பரோக்பா புராணம், அண்டவியல் மற்றும் வரலாற்று நிகழ்வைப் பற்றிய ஹிம்னல் கதைப்பாடல்களைப் பாடுதல். மினாரோ இவர்களின் தெய்வங்களிலிருந்து பிரிந்ததற்காக துக்கம் கொண்டாடுதல்.
அனுசரிப்புகள்பண்டைய பாடல்களைக் கேட்பதற்கும் கொண்டாடுவதற்கும் பரோக்பா மக்கள் சமூகம் லாசங்ராவில் கூடுகிறது. மினாரோ மற்றும்

மினாரோவின் பண்டைய தெய்வங்களை வணங்கிறார்கள்.

நாட்டுப்புற இசையுடன் பாரம்பரிய நாட்டுப்புற நடனம் நடைபெறும்.
நாள்அக்டோபர்-நவம்பர்[3]
நிகழ்வு3 ஆண்டுகள் 2 முறை
மூலம் தொடங்கப்பட்டதுஅங்குதோவின் மூன்று அசாதாரண மகன்கள், கலோ, மெலோ மற்றும் துலோ ஆவர். இவர்கள் கில்கிட்டின் அரசனிடமிருந்து படுகொலை தாக்குதலை எதிர்கொண்ட பின்னர் தப்பி வேறு இடம் செல்லத் திட்டமிட்டனர். இச்சகோதரர்கள் கலோ, மெலோ மற்றும் துலோ தப்பிச் சென்று முறையே ஹனூ, தா மற்றும் கனோக் ஆகிய இடங்களில் குடியேறினர். இச்சகோதரர்கள் ஒரு வருடாந்திர திருவிழாவை நடத்த முடிவு செய்தனர். இதன் பின்னர் போனோ-நா தொடங்கியது.
தொடர்புடையனபரோக்பா மக்கள்

போனோ-நா (Bono na) அல்லது போனோ நாஹ் என்பது பரோக்பா மக்களால்[4] கொண்டாடப்படும் பண்டைய பாரம்பரிய திருவிழாவாகும். இது இந்தியாவின் லடாக் ஆரியப் பள்ளத்தாக்கு நிலப்பரப்பு, தா மற்றும் கார்கோன் கிராமங்களுக்கிடையே ஒரு வருட இடைவெளியில் அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெறும் திருவிழாவாகும்.[5] இது மக்களும் மினாரோ நிலத்தில் பயிர்கள் நன்கு செழிப்புடன் இருக்க இவர்களின் குல தெய்வங்களுக்கும் கடவுள்களுக்கும் நன்றி தெரிவிக்கும் திருவிழாவாகும்.[6]

இலாபா என்ற மனிதருடன் திருவிழா தொடங்குகிறது.[7] இலாபா மூதாதையர் கீதத்தை இசைக்க ஆணையிடுகிறது. இலாபாவினுள் கடவுள்களின் ஆவி இறங்கி இத்திருவிழாவினை தொடங்குகிறது.[8]

இலாபா மலையில் காணப்படும் உயரமான பாறை ஒன்றில் ஒற்றைக் காலில் 24 மணிநேரம் தியானம் செய்கிறார். இவரது தியானத்தின் போது, வெறும் மூன்று கைப்பிடி பார்லி மாவு மட்டுமே சாப்பிடுவார். தியானம் முடிந்ததும், கிராம மக்கள் அவரைச் சுற்றி ஒன்றுகூடி, பல்லவிகள் பாடி, நாட்டுப்புற நடனம் ஆடி, இலாபாவைக் கடவுளாகக் கருதி வழிபடுகிறார்கள்.[9] மினாரோவின் பழங்கால சடங்கை நிறைவேற்ற இவர் பூசாரியாக பணியாற்றுகிறார்.[10]

இதைத் தொடர்ந்து, இவர் நியமன விழா மைதானத்தில் வழிபாட்டாளர்களின் கூட்டத்தை வழிநடத்துகிறார். கிராம மக்கள் இலாபாவை வரவேற்கிறார்கள். அனைவரும் மகிழ்ச்சியுடன் நாட்டுப்புற நடனம் மற்றும் கதைப்பாடலைப் பாடுகிறார்கள்.[11]

மினாரோ மொழியில் பதினெட்டுப் பாடல்களைக் கொண்டது போனோ-னாவின் பாடல். போனோ-னாவின் பாடல் இரண்டு முக்கிய காரணங்களுக்காகப் புனிதமாகக் கருதப்படுகிறது. முதலாவதாக, இது மினாரோ புராணத்தின் கடைசி எச்சம் மற்றும் இவற்றின் அண்டவியல் தத்துவங்களைக் கொண்டுள்ளது. இரண்டாவதாக, இது மினாரோ மக்களின் வரலாற்றினை நினைவு கூறுகின்றது. கில்கித்திலிருந்து தற்போதைய டா ஹனு பகுதிக்கு இவர்கள் இடம்பெயர்ந்த இடப் பெயர்களின் பட்டியலை இந்தப் பாடல்கள் விளக்குகிறது.[12][13] இந்நிகழ்வின் கடைசி நாளில், இலாப்ஸ்கியல் கதைப்பாடல் பாடப்படுகிறது. இது இவர்கள் உடல் ரீதியாக வாழ்ந்து வெளியேறும் தெய்வங்கள் குறித்தது. நடனக் கலைஞர்கள் தங்கள் தொப்பிகளைக் கழற்றி, தலையில் ஒரு கழுத்துப்பட்டையினை அணிந்துகொண்டு தங்கள் தெய்வங்களை விட்டுப் பிரிந்த துக்கத்தினைக் கொண்டாடுகிறார்கள். இறுதியாக, நடனக் கலைஞர்கள் தங்கள் தெய்வங்களைத் தரிசனம் செய்யத் தொலைதூர இடத்திற்குச் செல்வதன் மூலம் திருவிழா நிறைவடைகிறது.[14][15]

தோற்றம்[தொகு]

தாவின் பெரியவர்கள், தங்கள் மூதாதையர்கள் முதலில் ஐரோப்பாவிலிருந்து வந்ததாகவும்,[16] கில்கித்தின் கிழக்கே உள்ள பூர் பள்ளத்தாக்கில் குடியேறியதாகவும் கூறினர். அங்குதோவின் மூன்று அசாதாரண மகன்கள், கலோ, மெலோ மற்றும் துலோ, பணக்காரர் ஆனார்கள். கில்கித்தின் அரசனிடமிருந்து கொலை தாக்குதலை எதிர்கொண்ட பிறகு, சகோதரர்கள் கலோ, மெலோ மற்றும் துலோ ஆகியோர் தங்களுக்குப் பிடித்த இடத்தில் குடியேற முடிவு செய்தனர். மெலோவின் மகன் தோபமாரோ மற்றும் துலோ ஆகியோர் கனோக்கில் தங்க முடிவு செய்தனர். துலோ, கில் சிங்கே மகன் மற்றும் மெலோ நிர்தாவில் குடியேறினர்.

இறுதியாக காலோவும் அவரது மகனும் ஹனுவில் குடியேறினர். பின்னர் கனோக், நிர்தா மற்றும் ஹாங்டாங்ஸ்மின் இடையே ஆண்டுதோறும் திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த விழா "போனோ-நா" திருவிழா என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் ஒரு துகியா எனப்படும் தெங்வங்களுக்கான ஒரு இடத்தை வைத்திருந்தனர். இங்கு இவர்கள் "போனோ-நா" திருவிழாவைத் தொடங்குவதற்கு முன்பு இத்தெய்வங்களுக்காக ஆடு ஒன்றைப் பலியிடுவர்.[17] [18]

மேற்கோள்கள்[தொகு]

  1. (in de) Zeitschrift für Ethnologie. Reimer.. 1982. https://books.google.com/books?id=YqY4AAAAIAAJ. 
  2. Excelsior, Daily (2016-10-12). "5-day Bonona festival of Brokpas concludes". Jammu Kashmir Latest News | Tourism | Breaking News J&K (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-15.
  3. "This festival doesn't entirely depend on the lunar calendar so the date is not set in advance. It could be any date in the period of October – November." "The Bonona Festival of the Himalayan Aryans". The Art Blog by WOVENSOULS.COM (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-05-23. பார்க்கப்பட்ட நாள் 2022-12-15.
  4. (in de) Archiv Für Zentralasiatische Geschichtsforschung. 1983. https://books.google.com/books?id=Kf8NAQAAMAAJ. 
  5. (in de) Zeitschrift für Ethnologie. 1982. https://books.google.com/books?id=YqY4AAAAIAAJ. 
  6. Excelsior, Daily (2016-10-12). "5-day Bonona festival of Brokpas concludes". Jammu Kashmir Latest News | Tourism | Breaking News J&K (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-15. It is a festival of thanks giving to their Gods and Deities for good crops and prosperity to the community
  7. Jina, Prem Singh (1996) (in en). Ladakh: The Land and the People. Indus Publishing. பக். 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7387-057-6. https://books.google.com/books?id=kjhcZgDy-WMC&pg=PA113. 
  8. (in en) Indian Antiquary. Popular Prakashan. 1905. பக். 99–100. https://books.google.com/books?id=5BsoAAAAYAAJ&pg=PA94-IA3. 
  9. Jina, Prem Singh (1996) (in en). Ladakh: The Land and the People. Indus Publishing. பக். 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7387-057-6. https://books.google.com/books?id=kjhcZgDy-WMC&pg=PA113. 
  10. (in en) Indian Antiquary. Popular Prakashan. 1905. பக். 93–101. https://books.google.com/books?id=5BsoAAAAYAAJ&pg=PA94-IA3. 
  11. Jina, Prem Singh (1996) (in en). Ladakh: The Land and the People. Indus Publishing. பக். 95–100. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7387-057-6. https://books.google.com/books?id=kjhcZgDy-WMC&pg=PA113. 
  12. (in en) Indian Antiquary. Popular Prakashan. 1905. பக். 93–111. https://books.google.com/books?id=5BsoAAAAYAAJ&pg=PA94-IA3. 
  13. (in de) Zeitschrift für Ethnologie. Reimer.. 1982. பக். 90. https://books.google.com/books?id=YqY4AAAAIAAJ. 
  14. Achinathang, Tashi Namgail (Achinapa) (2020-12-03) (in en). HISTORY AND CULTURE OF DARD PEOPLE OF LADAKH. Booksclinic Publishing. பக். 35–42. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-946961-0-0. https://play.google.com/store/books/details?id=DGAMEAAAQBAJ. 
  15. (in en) Himalayan Research Bulletin. Nepal Studies Association. 1987. பக். 19. https://books.google.com/books?id=YRFWAAAAYAAJ. 
  16. Kloos, Stephen (28 June 2012). "Legends from Dha-Hanu: Oral Histories of the Buddhist Dards in Ladakh" (PDF). According to the elders in Dha, their Dardic ancestors originally came from Europe and settled in the Pur valley, east of Gilgit. Then Duthamelo Sanaleph, the grandson of Angutheno, moved to Gilgit, and had three sons there: Galo, Melo, and Dulo.
  17. Kloos, Stephen (28 June 2012). "Legends from Dha-Hanu: Oral Histories of the Buddhist Dards in Ladakh1" (PDF).
  18. "The Brokpa's of Ladakh Preserving the immaculateness of Aryan Race". studylib.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போனோ_நா&oldid=3649257" இலிருந்து மீள்விக்கப்பட்டது