பரோக்பா மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரோக்பா
மினரோ [1]
மொத்த மக்கள்தொகை
3,000–4,000[2]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
கீழ் சிந்து நதியின் கீழ் புறம், லடாக்-பல்திஸ்தான்
(தா,ஹனு, பட்டாலிக், திராஸ் கிராமங்கள்
மொழி(கள்)
புரோக்ஸ்காட் மொழி
சமயங்கள்
திபெத்திய பௌத்தம், சியா இசுலாம், இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பிற இந்தோ ஆரிய மக்கள்
பாரம்பரிய உடையில் பராக்பா ஆண்கள்

பரோக்பா மக்கள் (Brokpa) அல்லது (Minaro) மினரோ என அழைக்கப்படும் இந்த இன மக்கள் இந்தியாவின் லடாக் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பல்திஸ்தான் போன்ற பிரதேசங்களில் உள்ள இமயமலையின் தா, ஹனு, பட்டாலிக், திராஸ் போன்ற கிராமங்களில் மட்டுமே காணப்படுகின்றனர். இம்மக்கள் இந்தோ ஆரிய மொழியான சினா மொழியின் கிளை மொழியான புரோக்ஸ்காட் மொழியை (பண்டைய கிரேக்க மொழி) பேசுகின்றனர்.[2][3][4][5] இம்மக்கள் பெரும்பான்மையானக திபெத்திய பௌத்தம், சியா இசுலாம் மற்றும் இந்து சமயங்களைப் பின்பற்றுகின்றனர்..[6][7] 1996ல் புரோக்ஸ்காட் மொழியை பேசுபவர்கள் எண்ணிக்கை 3,000 மட்டுமே எனமதிப்பிடப்பட்டுள்ளது.[8] இம்மக்கள், இந்தியாவில் தங்கிய பேரரசர் அலெக்சாந்தரின் படைவீரர்களின் வழித்தோன்றல்கள் எனக்கூறிக்கொள்கின்றனர்.[9] இவர்கள் பேசும் மொழி இந்தியத் துணை கண்டத்தவர்களுக்கு புரியாது. இருப்பினும் இவர்கள் சினா மொழியின் எழுத்துமுறையைப் பயன்படுத்தி தங்கள் மொழியை எழுதிப்பேசுகின்றனர்.

உணவு[தொகு]

கால்நடைகளை மேய்த்துக் கொண்டு, பகுதி நாடோடி வாழ்க்கை நடத்தும் இம்மக்கள் உள்ளூரில் விளையும் பார்லி, கோதுமை, உருளைக் கிழங்கு, கோசுக்கிழங்கு, முள்ளங்கி மற்றும் வறுத்த கோதுமை மாவு உணவு வகைகளை உண்கின்றனர். மேலும் பால் கலக்காத தேயிலையை சூடாக்கி பருகுகின்றனர். வெண்ணெய் மற்றும் உப்பு சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். இம்மக்கள் திருவிழா மற்றும் சடங்குகளின் போது மட்டும் ஆட்டிறைச்சியை அதிகம் விரும்பி உண்கின்றனர். [10]

பொருளாதாரம், வேலைவாய்ப்ப்பு[தொகு]

பரோக்பா மக்களின் பொருளாதாரம் வேளாண்மை மட்டுமின்றி இந்திய இராணுவத்தையும் நம்பியுள்ளது. எல்லைப்புறச் சாலைகள் அமைப்பில் சாலை போடும் தொழிலாளர்களாகவும் மற்றும் இந்திய இராணுவத்தில் பொருட்களை சுமை தூக்கும் கூலிகளாக வேலை செய்து வருவாய் ஈட்டுகின்றனர்.[11]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. (in en) Indian Antiquary. Popular Prakashan. 1905. பக். 93. https://books.google.co.in/books?id=5BsoAAAAYAAJ&pg=PA94-IA3&dq=Bono+na+Dards&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&sa=X&ved#v=snippet&q=%20the%20Minaro,%20as%20they%20call%20themselves&f=false. "" Minaro ,as they call themselves"" 
  2. 2.0 2.1 Ethnologue, 15th Edition, SIL International, 2005 – via archive.org
  3. Khan, Arman (4 May 2022). "This 'Aryan' Community's 'Exotic' Clothes and Polyamorous Marriages Mask Other Truths". Vice Media. https://www.vice.com/en/article/z3ndpx/aryan-community-exotic-clothes-polyamorous-marriages-culture-family-history-heritage. 
  4. Nehchal Sandhu, 36 hours with the Brokpas of Ladakh, The Tribune (Chandigarh), 18 October 2020.
  5. Cardona & Jain, Indo-Aryan Languages (2007), ப. 889.
  6. "Scheduled Tribes of Northwest India: Jammu & Kashmir and Himachal Pradesh". Archived from the original on 1 நவம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 23 February 2020.
  7. Vohra, Ethnographic Notes on the Buddhist Dards (1982).
  8. Cardona & Jain, Indo-Aryan Languages (2007), ப. 984.
  9. இந்தியாவில் 'தூய ஆரிய' ஆண்களிடம் கர்ப்பம் தரிக்க ஜெர்மானிய பெண்கள் வந்தார்களா?
  10. "Bhasin, Veena: Social Change, Religion and Medicine among Brokpas of Ladakh, Ethno-Med., 2(2): 77-102 (2008)" (PDF).
  11. Bhan, Mona (2013). Counterinsurgency, Democracy and the Politics of Identity in India. Routledge. Chapter 1: Becoming Brogpa. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781138948426. https://books.google.com/books?id=bW-_AAAAQBAJ. 

ஊசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரோக்பா_மக்கள்&oldid=3795993" இலிருந்து மீள்விக்கப்பட்டது