போண்டிபக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Damaliscus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
போண்டிபக்
தென்னாப்பிரிக்காவின் போண்டிபக் தேசியப் பூங்காவில் போண்டிபக்.
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Damaliscus
இனம்: வார்ப்புரு:Taxonomy/DamaliscusD. pygargus
இருசொற் பெயரீடு
Damaliscus pygargus
(Pallas, 1767)
Subspecies

போன்டிபக் ( Bontebok ) என்பது தென்னாப்பிரிக்கா, லெசோத்தோ, நமீபியாவில் காணப்படும் ஒரு மறிமான் ஆகும். இது இரண்டு துணையினங்களைக் கொண்டுள்ளது. [3]

விளக்கம்[தொகு]

போண்டிபக்கின் தலை

போண்டிபக் ஒரு உயரமான, நடுத்தர அளவிலான மறிமானாகும். இவை பொதுவாக நின்ற நிலையில் தோள் வரை 80 முதல் 100 செமீ (31 முதல் 39 அங்குலம்) உயரம் கொண்டவை. மேலும் தலை மற்றும் உடலுடன் 120 முதல் 210 செமீ (47 முதல் 83 அங்குலம்) நீளம் வரை இருக்கும். வால் 30 முதல் 60 செமீ (12 முதல் 24 அங்குலம்) நீளம் வரை இருக்கும். உடல் நிறை 50 முதல் 155 கிலோ (110 முதல் 342 பவுண்டுகள்) வரை இருக்கும். ஆண் மான்கள் சற்று பெரியவை மற்றும் பெண் மான்களை விட கனமானவை. [4] போண்டிபக் உடலில் சாக்லேட் பழுப்பு நிறத்தில் பளபளப்பான உரோமங்கள் இருக்கும். நெற்றியின் உச்சியில் இருந்து மூக்கிற்கு கீழ்வரை ஒரு நீண்ட வெள்ளை நிறப் பட்டை உள்ளது. வாலின் துவக்கத்தில் இருந்து பின் புறம் தொடைவரையிலும், அடிவயிறு கால்களின் உட்புறம் முதலியவற்றிலும் வெள்ளை நிற உரோமங்கள் வளர்ந்திருக்கும். போண்டிபக்கின் கொம்புகளில் வளையங்களைக் கொண்டிருக்கும். இவற்றில் இரு பாலினத்திற்கும் கொம்புகள் காணப்படுகின்றன. அவை அரை மீட்டர் நீளத்தை எட்டும்.

வாழ்விடம்[தொகு]

போண்டிபக் தென்னாப்பிரிகாவின் ஹைவெல்டில் வாழ்கின்றன. அங்கு இவை குட்டையான புற்களை உண்கிறன. [5] பகலின் வெப்பத்தின் போது இவை ஓய்வெடுக்கின்றன என்றாலும், இவை பகலாடிகள் ஆகும். மந்தைகளில் ஆண் மான்களை மட்டுமே கொண்டதாகவோ அல்லது பெண் மான்களை மட்டுமே கொண்டதாகவோ, அல்லது கலப்பு விலங்குகளைக் கொண்டவையாகவோ உள்ளன.

ஃபைன்போசில் குட்டியுடன் போண்டிபக்

நடத்தை[தொகு]

சண்டையிடும் போண்டிபக்குகள்

இந்த மான்களில் முதிர்ந்த ஆண் மான்கள் தங்களுக்கு சொந்தமாக ஒரு பிரதேசத்தை உருவாக்கிக் கொள்கின்றது. மற்ற ஆண் மான்கள் தன் பிரதேசத்திற்கும் வந்தால் சிலசமயம் அவற்றுடன் சண்டையிடுகின்றன.

பாதுகாப்பு[தொகு]

போண்டிபக் மான்கள் தங்கள் பயிர்களை அழிப்பதால் விவசாயிகளால் தீங்குயிராக கருதி பெருமளவில் சுட்டுக் கொல்லப்பட்டன. இதனால் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவற்றின் எண்ணிக்கை வெறும் 17 என்ற அளவில் குறைந்துவிட்டது. டச்சு விவசாயியான அலெக்சாண்டர் வான் டெர் பிஜ்ல் என்பவர் எஞ்சியுள்ள மான்களை வேலியிடப்பட்ட தன் வயலில் அடைத்து பாதுகாத்தார். 1931 ஆம் ஆண்டில், 17 மான்கள் கொண்ட இந்த மந்தையானது போன்டெபோக் தேசிய பூங்காவிற்கு மாற்றப்பட்டது. இது இந்த உயிரினத்தைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக நிறுவப்பட்டது. 1961 ஆம் ஆண்டில் போண்டிபக்குகளின் தேவைகளுக்கு ஏற்றவாறு பூங்கா மாற்றப்பட்ட நேரத்தில், மந்தை 61 மான்களாக கூடி இருந்தது. இன்று, இவற்றின் எண்ணிக்கை 2,500 முதல் 3,000 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அந்த 17 மான்கள் கொண்ட மந்தையின் வழித்தோன்றல்களாகும். [6]

போண்டிபக் மான்கள் அவற்றின் இயற்கையான வாழ்விடத்தில் அழிந்துவிட்டாலும், அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இப்போது இவை மிக ஏராளமாக ஆர்வமாக வளர்க்கப்படுகின்றன. ஏனெனில் இவை வேட்டையாடுபவர்களுக்கான பிரபலமான இங்களாக பராமரிக்கபடுகின்றன.

கலாச்சாரத்தில்[தொகு]

போண்டிபக் மானானது மேற்கு கேப் மாகாண விலங்காக உள்ளது. [7]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போண்டிபக்&oldid=3626779" இருந்து மீள்விக்கப்பட்டது