போஜ் ரெட்டி மகளிர் பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போஜ் ரெட்டி மகளிர் பொறியியல் கல்லூரி
భోజ్ రెడ్డి ఇంజినీరింగ్ కాలేజ్ ఫర్ ఉమెన్
வகைபொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி
உருவாக்கம்1997 (1997)
நிறுவுனர்சங்கம் லட்சுமிபாய் வித்யாபீடம்
சார்புஜவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம்
தரநிர்ணயம்அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு
முதல்வர்முனைவர் மாதவன் ஜே
அமைவிடம்
சந்தோஷ் நகர் குறுக்கு சாலைகள், வினய் நகர், சைதாபாத்,
, , ,
500059
,
17°21′16″N 78°30′27″E / 17.3543713°N 78.5076338°E / 17.3543713; 78.5076338
வளாகம்நகர்ப்புறம்
மொழிஆங்கிலம்
இணையதளம்கல்லூரி இணையதளம்
போஜ் ரெட்டி மகளிர் பொறியியல் கல்லூரி is located in தெலங்காணா
போஜ் ரெட்டி மகளிர் பொறியியல் கல்லூரி
Location in தெலங்காணா
போஜ் ரெட்டி மகளிர் பொறியியல் கல்லூரி is located in இந்தியா
போஜ் ரெட்டி மகளிர் பொறியியல் கல்லூரி
போஜ் ரெட்டி மகளிர் பொறியியல் கல்லூரி (இந்தியா)

போஜ் ரெட்டி மகளிர் பொறியியல் கல்லூரி, என்பது இந்தியாவின் ஹைதராபாத்தில் 1997 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மகளிர் பொறியியல் கல்லூரி ஆகும். [1]

1952 முதல் பெண்கள் மற்றும் சிறுமிகளை கல்வி மூலம் மேம்படுத்துவதற்காக செயல்படும் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ சமூக சங்கமான லட்சுமிபாய் வித்யாபீட சங்கம்[2] என்பதன் மூலம் நிர்வகிக்கப்படும் இக்கல்லூரியானது[3], 6.5 ஏக்கர் பரப்பளவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. ஜவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ள[4] இக்கல்லூரி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சிறப்புகள்[தொகு]

  • பெண்களுக்கென பிரத்யேகமாக தனியார் விடுதிகள் வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ளது
  • தொழில்நுட்பக் கட்டுரைகளை எழுதவும், கல்லூரி மற்றும் பிற நிறுவனங்கள் நடத்தும் கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் மாநாடுகளில் பங்கேற்கவும் மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
  • ஒவ்வொரு துறையிலும் தொழில்முறை நடவடிக்கைகளை மேம்படுத்த தொழில்நுட்ப சங்கங்கள் அமைக்கப்படுகின்றன.
  • மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்காக கலாச்சார மற்றும் இணை பாடத்திட்ட நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

துறைகள்[தொகு]

  • கணினி அறிவியல் & பொறியியல் (CSE)
  • கணினி அறிவியல் & பொறியியல் (செயற்கை நுண்ணறிவு & இயந்திர கற்றல்) (CSM)
  • மின்னணுவியல் & தொலைத்தொடர்பு பொறியியல் (ECE)
  • மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் (EEE)
  • தகவல் தொழில்நுட்பம் (IT)

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்ட கல்லூரிகள்".
  2. "Bhoj Reddy Engineering College for Women, Hyderabad (Secundrabad), Telangana". Punjab Colleges. Archived from the original on 10 October 2010. பார்க்கப்பட்ட நாள் 27 January 2020.
  3. "Bhoj Reddy Engineering College, Hyderabad". Infinite Courses. Archived from the original on 26 July 2010. பார்க்கப்பட்ட நாள் 27 January 2020.
  4. "ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளின் பட்டியல்".