ஜவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரை | Yogaha Karmasu Kaushalam |
---|---|
வகை | பொதுத்துறை |
உருவாக்கம் | 1965 ( முன்னதாக நாகர்ஜூன சாகர் பொறியில் கல்லூரி ) |
துணை வேந்தர் | பேராசிரியர் ரமேஷ்வர் ராவ் |
அமைவிடம் | குகாட்பள்ளி ஹைதராபாத் , , |
இணையதளம் | www.jntuh.ac.in |
ஜவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் (Jawaharlal Nehru Technological University, Hyderabad (JNTU Hyderabad)) ஹைதராபாத்தில் அமைந்துள்ள ஒரு பொறியியல் துறை சார்ந்த பல்கலைக்கழகமாகும். 1965-ம் ஆண்டு நாகர்ஜூன சாகர் பொறியியல் கல்லூரி என்கிற பெயரில் தொடங்கபட்ட இக்கல்லூரி பின்னர் 1972-ம் ஆண்டு ஜவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழக சட்டத்தின்படி காகிநாடா மற்றும் அனந்தப்பூரில் அமைந்துள்ள கல்லூரிகளுடன் இணைந்து பல்கலைக்கழகமாக மாறியது. பின்னர் மீண்டும் ஜவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழக சட்டம் 2008-ன்படி 4 தனித்தனி பல்கலைக்கழகங்களாக முறையே ஜவகர்லால் நேரு கட்டட மற்றும் நுண்கலை பல்கலைக்கழகம் - அனந்தப்பூர், ஜவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் - அனந்தப்பூர், ஜவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் - ஹைதராபாத் மற்றும் ஜவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் - காகிநாடா பிரிக்கப்பட்டது.