போசுனான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போஷ்ஸ்னான்
மேலே: கிராண்டு தியேட்டர், இசுடாரி புரோவர் மற்றும் கோபுரங்கள் மேல் மத்தி: போசுனான் நகர மண்டபம் மற்றும் சந்தை கீழ் மத்தி: த்லூகா தெரு , ஜெசுவா கல்லூரி கீழே: போசுனானின் அந்திநேர காட்சி
மேலே: கிராண்டு தியேட்டர், இசுடாரி புரோவர் மற்றும் கோபுரங்கள்
மேல் மத்தி: போசுனான் நகர மண்டபம் மற்றும் சந்தை
கீழ் மத்தி: த்லூகா தெரு , ஜெசுவா கல்லூரி
கீழே: போசுனானின் அந்திநேர காட்சி
போஷ்ஸ்னான்-இன் கொடி
கொடி
போஷ்ஸ்னான்-இன் சின்னம்
சின்னம்
நாடு போலந்து
வாய்வோதெஷிப்பெரிய போலந்து வாய்வோதெஷிப்
கௌன்ட்டிநகர கௌன்ட்டி
நிறுவப்பட்டது8வது நூற்றாண்டு
நகர உரிமைகள்1253
அரசு
 • மேயர்ரிசார்டு குரோபெனி
பரப்பளவு
 • நகரம்261.85 km2 (101.10 sq mi)
உயர் புள்ளி154 m (505 ft)
தாழ் புள்ளி60 m (200 ft)
மக்கள்தொகை (31.12.2010)
 • நகரம்5,51,627
 • அடர்த்தி2,100/km2 (5,500/sq mi)
 • பெருநகர்9,43,700
நேர வலயம்CET (ஒசநே+1)
 • கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
அஞ்சல் குறியீடு60-001 to 61-890
தொலைபேசி குறியீடு+48 61
இணையதளம்http://www.poznan.pl/

போசுனான் (Poznań, இலத்தீன்: Posnania; இடாய்ச்சு மொழி: Posen) போலந்து நாட்டின் மேற்கு-மத்தியப் பகுதியில் வார்த்தா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். 2010 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 551,627 ஆகும். போலந்தின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான போசுனான் துவக்க கால போலந்து இராச்சியத்தின் மிகவும் முக்கியமான மையமாகத் திகழ்ந்தது; இங்குள்ள தேவாலயத்தில்தான் இப்பழங்கால இராச்சியத்தின் முதல் மன்னர்கள் புதைக்கப்பட்டுள்ளனர். இதுவே போலந்தின் முதல் தலைநகரமாக இருந்ததாக கூறப்படுகிறது.

போசுனான் போலந்தின் ஐந்தாவது மிகப்பெரும் நகரமாகும். வணிகம், தொழில் மற்றும் கல்விக்கு முக்கிய மையமாக விளங்குகிறது. வரலாற்றின்படி இது பெரும் போலந்து எனப்படும் வீல்கோபோலாஸ்க்காவின் தலைநகரமாக விளங்கியது. தற்போது பெரிய போலந்து வாய்வோதெஷிப்பின் நிர்வாகத் தலைநகரமாக உள்ளது. 2012 ஐரோப்பியக் கால்பந்துப் போட்டிகள் நடத்தப்படும் நான்கு போலந்து நகரங்களில் ஒன்றாக போசுனான் விளங்குகிறது.

காட்சிக்கூடம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Poznań
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போசுனான்&oldid=3638992" இலிருந்து மீள்விக்கப்பட்டது