போகன்வில்லே காகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போகன்வில்லே காகம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கோர்வசு
இனம்:
கோ. மெக்கி
இருசொற் பெயரீடு
கோர்வசு மெக்கி
உரோத்சைல்டு, 1904

போகன்வில்லே காகம் (Bougainville crow) என்பது கோர்விடே என்ற காகக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும்.

பரவல்[தொகு]

போகன்வில்லே காகம் பப்புவா நியூ கினியாவில் உள்ள போகன்வில்லே தீவிலும், சாலமன் தீவுகளில் உள்ள ஷார்ட்லேண்ட் தீவுகளிலும் காணப்படுகிறது. இதன் எல்லைக்குள் காணப்படும் காகத்தின் ஒரே சிற்றினம் இதுவாகும்.

உயிரியல்[தொகு]

போகன்வில்லே காகம் ஒரு பெரிய அளவிலான காகம் ஆகும். இதன் நீளம் 41 செ.மீ. ஆகும். இதன் இறகுகள் கருப்பு நிறத்துடன் பெரிய அலகுடன் காணப்படும்.

வாழிடம்[தொகு]

இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் ஆகும். இது 1600 மீ வரையிலான மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக்காடுகளில் காணப்படும்.[2] இது போகன்வில்லாவில் காணப்படும் பொதுவான சிற்றினமாகும், ஆனால் இது எதிர்காலத்தில் மரம் அழிக்கப்படும் வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படலாம் .

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Corvus meeki". IUCN Red List of Threatened Species 2016: e.T22705966A94043721. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22705966A94043721.en. https://www.iucnredlist.org/species/22705966/94043721. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. BirdLife International (2008) Species factsheet: Corvus meeki.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போகன்வில்லே_காகம்&oldid=3716890" இலிருந்து மீள்விக்கப்பட்டது