பொறுமைக் கல் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொறுமைக் கல்
The Patience Stone
இயக்கம்ஆடிக் ரகிமி
தயாரிப்புமிகேயல் சென்டைல்
கதைஆடிக் ரகிமி
ஜேன் கிலாடி
நடிப்புகலிபிர்ட் பிரகனி
வெளியீடுஅக்டோபர் 11, 2012 (2012-10-11)(இலண்டன் திரைப்படவிழா)
நாடுஆப்கானித்தான், பிரான்சு
மொழிபாரசீக மொழி

பொறுமைக் கல் (The Patience Stone) இது 2012 ஆம் ஆண்டு வெளிவந்த பிரெஞ்சு-ஆப்கானிஸ்தான் போர் முனை பற்றிய பாரசீக மொழித் திரைப்படம் ஆகும். இதன் இயக்குனர் ஆடிப் அகீம் ஆவார். இதே பெயர்கொண்ட புதினத்தில் இருந்து இந்தக் கதை எடுக்கப்பட்டுத் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரபல ஈரானிய நடிகை கலிபிர்ட் பிரகனி என்பவர் நடித்துள்ளார். 85வது அகாதமி விழாவில் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டது.[1] இப்படத்தில் நடித்த கலிபிர்ட் பிரகனி 39வது சீசர் விருதுகள் விழாவில் சிறந்த எதிர்காலமுள்ள நடிகைக்கான விருதுவிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.[2]

கதை[தொகு]

ஆப்கானித்தானில் போர் நடந்துவரும் வேளையில் ஓர் ஊரில் உணர்வற்ற நிலையில் படுத்திருக்கும் வயதான தன் கணவனைப் பாதுகாத்து காத்துவருகிறாள் கதாநாயகி. எப்படியும் தன் கணவனை உயிர்ப்பிக்கும் முயற்சியில் போராடுகிறாள் அவள். ஒரு நாள் வெளியில் நடப்பது, தன் மனக்கவலைகள் அனைத்தையும் உணர்வற்ற நிலையில் படுத்திருக்கும் தன் கணவனிடம் சொல்லத் துவங்குகிறாள். அவற்றில் தன் குழந்தைப்பருவம், அவளின் தவிப்பு, தனது விரக்தி, அவளுடைய தனிமை, அவளின் கனவுகள், அவளின் ஆசைகள் அனைத்தையும் பேசுகிறாள். அவளின் 10 வருட திருமண வாழ்க்கையைப் பற்றியும் இன்னமும் அவனுக்காகப் போராடுவேன் என்றும் கூறுகிறாள்.

பாரசீக புராணங்களில் ஒரு மாயக்கல்லின் முன்னால் தனது துயரங்களைச் சொல்லுவதுபோல் இவள் தன் கணவனிடம் சொல்கிறாள். தன் கணவன் உயிர் பெற்று திரும்பிவருவதற்காகப் போராடுகிறாள். ஆனால் அவளின் விதி ஒரு போர்வீரனின் உருவில் விளையாடுகிறது. அவளது கணவனின் எதிரிலேயே அவளை இளம்வயது போர்வீரன் உடல் உறவு கொள்கிறான்.

புது உறவில் உட்பட்டாலும் தன் கணவனிடம் தற்போது உள்ள நிகழ்வுகளையும் சொல்லுகிறாள், அப்போது நினைவு திரும்பிய கணவன் அவளைக் கொலைசெய்ய முற்படுகிறான். ராணுவவீரனைக் கொல்ல எடுத்த கத்தியால் கல்லாகப் படுத்திருந்து பின் உயிர்பெற்றெழுந்த தன் கணவனையே கொன்றுவிடுகிறாள்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]