பொதுவான பறக்கும் பல்லி
பொதுவான பறக்கும் பல்லி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | தி. வோலன்சு
|
இருசொற் பெயரீடு | |
திராகோ வோலன்சு லின்னேயஸ், 1758 |
பொதுவான பறக்கும் பல்லி (Draco volans) என்று அழைக்கப்படும் திராகோ வோலன்சு, அகாமிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பல்லி சிற்றினமாகும்.[2][3] இந்தச் சிற்றினம் தென்கிழக்காயாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2] திராகோ பேரினத்தின் மற்றச் சிற்றினங்களைப் போலவே, இந்தச் சிற்றினமும் படாஜியா எனப்படும் தோலின் இறக்கைகள் போன்ற பக்க மடல் நீட்டிப்புகளைப் பயன்படுத்திச் சறுக்கும் திறனைக் கொண்டுள்ளது.[4]
இந்தச் சிற்றினம் மரங்களில் வாழும் தன்மையுடையது.[5]
விளக்கம்
[தொகு]திராகோ வோலன்சு உடல் நீளம் (வால் உட்பட) 22 செ.மீ. (8.7 அங்குலம்) வரை வளரும். உடல் கருமையான நிறத்துடன் அடர் நிறத்தில் உள்ளது.[6]
ஆணின் இறக்கை மடிப்புச் சவ்வு பழுப்பு நிறத்தில் அடர் பிணைப்புடன் பிரகாசமான ஆரஞ்சு நிறத்திலிருக்கும். பெண்ணின் பட்டையினை விட ஒழுங்கற்ற அடையாளங்களைக் கொண்டுள்ளது.[6]
வாழிடம்
[தொகு]இந்த பறக்கும் பல்லி, தென்கிழக்காசியாவில் உள்ள வெப்பமண்டல மழைக்காடுகளில் காணப்படுகின்றன.[3] இது பொதுவாக ஆரம்பக்கால இரண்டாவது வளர்ச்சி காடுகள், திறந்த இரண்டாம் நிலை காடுகள் மற்றும் வன விளிம்புகளில் காணப்படுகிறது.[5]
இடப்பெயர்ச்சி
[தொகு]தி. வோலன்சு "இறக்கைகள்" இதன் விலா எலும்புகளால் ஆதரிக்கப்படுகின்றன, இவை படாஜியாவின் எலும்புக்கூட்டை உருவாக்குகின்றன. இருப்பினும், இதன் நீளமான விலா எலும்புகள் இதன் "இறக்கைகளை" உருவாக்க உதவும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளன. சுவாசத்திற்கு உதவுவதில்லை.[7]
இந்த இனம் ஒரு செயலற்ற கிளைடர் அல்லது வான்குடை என்று கருதப்படுகிறது.[8] இருப்பினும், முந்தைய ஆய்வுகள் இது ஒரு பறக்கும் விலங்காகக் கருதப்படலாம் என்பதையும் காட்டுகின்றன.[9] இதன் பொருள் என்னவென்றால், செயலில் பறப்பதற்குத் தேவையான காற்றியக்கவியல் மற்றும் வளர்சிதை மாற்றக் கட்டாயங்களை இது சமாளிக்க வேண்டியதில்லை[10]
நடத்தை
[தொகு]திராகோ வோலன்சு பகலாடி விலங்கு ஆகும். பகல் நேரங்களில் மரக் கிளைகளில் ஓடுவது, சறுக்குவது காணப்படுகிறது.[5]
இனக்கவர்ச்சி
[தொகு]பக்கமடல் மற்றும் பக்கவாட்டு சவ்வின் நிறம் தி. வோலன்சு இனக்கவர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்கள் பெண்களை ஈர்க்கத் தங்கள் பக்கமடல், அசை தாடிகளை நீட்டி அசைத்துக் காட்சிப்படுத்துகின்றன.[4]
உணவு
[தொகு]திராகோ வோலன்சு முக்கியமாக எறும்புகளையும், கறையான்கள் போன்ற பிற பூச்சிகளையும் உணவாகக் கொள்கின்றன.[6][3] பிலிப்பீன்சின் கிழக்கு மிண்டனாவோவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இச்சிற்றினம் பிரத்தியேகமாக எறும்புகளை மட்டுமே உண்கின்றன என்பது கண்டறியப்பட்டது.[5] எறும்புகள் புற்றிலிருந்து வெளியே வந்து இதன் அருகில் ஊர்ந்து செல்லும் வரை மரத்தின் கிளையில் காத்திருந்து வேட்டையாடுகிறது. இது நகராமல் தன் இரையைப் பிடிக்கிறது.[3]
இனப்பெருக்கம்
[தொகு]பெண் பறக்கும் பல்லி மண்ணில் ஒரு குழி தோண்டி ஒரு கூடு போல் அமைக்கும். இதில் தன் முட்டைகளை இடுகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Quah, E.; Grismer, L.; McGuire, J. (2018). "Draco volans". IUCN Red List of Threatened Species 2018: e.T99929352A99929358. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T99929352A99929358.en. https://www.iucnredlist.org/species/99929352/99929358. பார்த்த நாள்: 18 November 2021.
- ↑ 2.0 2.1 சிற்றினம் Draco volans at The Reptile Database www.reptile-database.org.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Van Arsdale, Michael (1999). "Draco volans ". Animal Diversity Web.
- ↑ 4.0 4.1 4.2 Crew, Bec (29 May 2014). "Flying dragon lizard a true gliding reptile". Australian Geographic.
- ↑ 5.0 5.1 5.2 5.3 Smith, Brian E. (December 1993). "Notes on a Collection of Squamate Reptiles from Eastern Mindanao, Philippine Islands Part 1: Lacertilia". Asiatic Herpetological Research 5: 85–95. http://www.asiatic-herpetological.org/Archive/Volume2005/05_10.pdf.
- ↑ 6.0 6.1 6.2 Baker, Nick. "Draco volans". EcologyAsia.
- ↑ Home, Everard (1812). "Observations Intended to Show That the Progressive Motion of Snakes is Partly Performed by means of the Ribs". Philosophical Transactions of the Royal Society of London 102: 163–168. doi:10.1098/rstl.1812.0011.
- ↑ Maina, John N. (11 July 2006). "Development, structure, and function of a novel respiratory organ, the lung-air sac system of birds: to go where no other vertebrate has gone". Biological Reviews 81 (4): 545–579. doi:10.1111/j.1469-185X.2006.tb00218.x. பப்மெட்:17038201.
- ↑ Colbert, Edwin H. (10 March 1967). "Adaptations for Gliding in the Lizard Draco ". American Museum Novitates (2283): 1–20. http://digitallibrary.amnh.org/bitstream/handle/2246/3081/N2283.pdf?sequence=1.
- ↑ Maina, John N. (3 July 2015). "The design of the avian respiratory system: development, morphology and function". Journal of Ornithology 156: 41–63. doi:10.1007/s10336-015-1263-9.
மேலும் வாசிக்க
[தொகு]- Boulenger GA (1885). Catalogue of the Lizards in the British Museum (Natural History). Second Edition. Volume I. Geckonidæ, Eublepharidæ, Uroplatidæ, Pygopodidæ, Agamidaæ. London: Trustees of the British Museum (Natural History). (Taylor and Francis, printers). xii + 436 pp. + Plates I–XXXII. (Draco volans, p. 256).
- Cox MJ, van Dijk PP, Nabhitabhata J, Thirakhupt K (1998). A Photographic Guide to Snakes and other Reptiles of Peninsular Malaysia, Singapore and Thailand. Sanibel Island, Florida: Ralph Curtis Books. 144 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0883590430. (Draco volans, p. 101).
- Linnaeus C (1758). Systema naturæ per regna tria naturæ, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis. Tomus I. Editio Decima, Reformata. Stockholm: L. Salvius. 824 pp. (Draco volans, new species, pp. 199–200). (in Latin).