பொட்டாசியம் லாக்டேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் 2-ஐதராக்சிபுரோப்பேனோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
996-31-6 | |
ChEMBL | ChEMBL1200664 |
ChemSpider | 55189 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 61248 |
| |
UNII | 87V1KMK4QV |
பண்புகள் | |
C3H5KO3 | |
வாய்ப்பாட்டு எடை | 128.168 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் லாக்டேட்டு (Potassium lactate) என்பது KC3H5O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். H3C-CHOH-COOK. என்ற அமைப்பு வாய்ப்பாட்டாலும் இதைக் குறிப்பிடுகிறார்கள். லாக்டிக் அமிலத்தினுடைய பொட்டாசியம் உப்பு பொட்டாசியம் லாக்டேட்டு எனப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய எண் ஐ326 என்று எண்னிட்டு இச்சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது. சர்க்கரை மூலங்களிலிருந்து கிடைக்கும் லாக்டிக் அமிலத்தை நடுநிலையாக்கம் செய்து பொட்டாசியம் லாக்டேட்டு தயாரிக்கப்படுகிறது [1].
பொதுவாக பொட்டாசியம் லாக்டேட்டு இறைச்சி மற்றும் கோழியுடன் தொடர்புள்ள பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது, உணவு பாதுகாப்பை இது அதிகரிக்கிறது. சிதைவையும் நோய்க்கிருமி பாக்டீரியாக்களின் நடவடிக்கையையும் தடுக்கும் ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பியாகச் செயல்படுகிறது [2]. தீயணைக்கும் இயந்திரங்களில் தீத்தடுக்கும் ஊடகமாகவும் பொட்டாசியம் லாக்டேட்டு பயன்படுத்தப்படுகிறது [3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ PURASAL http://www.purac.com/EN/Food/Brands/Potassium_lactate.aspx பரணிடப்பட்டது 2014-02-21 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Meat and Poultry. http://www.purac.com/EN/Food/ingredients/Meat_poultry_and_fish.aspx பரணிடப்பட்டது 2012-11-03 at the வந்தவழி இயந்திரம்
- ↑ MSDS for First Alert Tundra (MSDS 06-1753A), http://www.firstalert.com/site_content/85-home/952-tundra-fire-extinguishing-spray#downloads பரணிடப்பட்டது 2017-12-29 at the வந்தவழி இயந்திரம்