பொக்குன்னி சிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொக்குன்னி சிவன் கோயில்

பொக்குன்னி சிவன் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான இந்து கோயில் ஆகும். இக்கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரில் வடவன்னூர் கிராமத்தில் அமைந்துள்ளது.[1] கேரளாவில் உள்ள 108 பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகக் கருதப்படுகிறது.[2] இக்கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆலத்தூரில் உள்ள பெரும்குளம் எனப்படுகின்ற குளத்தில் பரசுராமர் சிவலிங்கத்தை நிறுவியதாக புராணங்கள் கூறுகின்றன. இக்கோயில் கொல்லம்கோடு அரசரால் கட்டப்பட்டதாகும்.[3]

தொடர்புடைய புராணங்கள்[தொகு]

பெருமானின் உக்கிரத்தைக் குறைத்து அவருக்கு அமைதியை ஏற்படுத்தும் வகையில் பரசுராமர் சிவன் சிலையை குளத்தில் நிறுவியதாகக கூறுவர். பிற கோயில்களில், சிவபெருமானின் கோபத்தை குறைக்கும் வகையில், மூலவர் சிற்பம் குளத்தை நோக்கிய வகையில் வணங்கப்படுகிறது. கோயில் ஒரு பரந்த குளத்தில் அமைந்துள்ளது. கோயில் குளத்தின் ஒரு பக்கம், கோயிலைச் சென்று அடைவதற்காகக் கட்டப்பட்டிருக்கலாம். முன்னர் அது கோயில் குளமாக இருந்திருக்கலாம். குளத்தில் கோயில் உள்ளது.[4]

வரலாறு[தொகு]

கச்சம்குறிச்சி அம்மன் கோயில்

ஒருகாலகட்டத்தில் இக்கோயில் கொல்லங்கோடு அரண்மனை அரசருக்குச் சொந்தமானதாக இருந்தது. கொல்லங்கோட்டின் பழைய பெயர் வெங்கநாடு என்பதாகும். வெங்கநாடு நம்பி அல்லது கொல்லங்கோடு அரசன் ஐந்து நிலப்பகுதிகளை உள்ளடக்கிய வெங்கநாட்டை ஆண்டுவந்தார். அவர் அப்பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாயர் குடும்பங்களின் தலைவராகவும் இருந்தார். அவன் ஒரு. கொல்லங்கோடு மன்னர் வழிபட்ட இறைவி கச்சம்குறிச்சி அம்மன் ஆவார். ஆனால் வடவன்னூர் தேவர் எனப்படுகின்ற பொக்குன்னி சிவனே பிரதான தெய்வம் ஆகும்.[5]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alathur - Pokkuni Mahadeva Temple".
  2. "108 Shiva Temples in Kerala".
  3. "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama".
  4. "കുളത്തിൽ പ്രതിഷ്ഠയുള്ള 'പൊക്കുന്നിയപ്പൻ'". Samayam.com. 25 May 2016. பார்க்கப்பட்ட நாள் 23 December 2019.
  5. "പൊക്കുന്നി ശിവക്ഷേത്രം-Pokkunny Siva Temple".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொக்குன்னி_சிவன்_கோயில்&oldid=3837125" இலிருந்து மீள்விக்கப்பட்டது