பையனூர் புனித மோதிரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நடுப்புறத்தில் காணப்படும் முடிச்சு போன்ற வேலைப்பாடுடன் கூடிய பையனூர் புனித மோதிரம்
ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி கோயில், பையனூர்
தர்பைப்புல்லால் செய்யப்பட்ட புனித மோதிரம்

பையனூர் புனித மோதிராம் அல்லது பையனூர் பவித்திர மோதிரம் என்பது இந்தியர்கள் சில சடங்குகளின் பொழுது அணியும் ஒரு வகையான தங்க மோதிரம் ஆகும் . இந்த புனித மோதிரம் மூதாதையர்களுக்காகச் செய்யப்படும் பித்ரு பலி என்ற சடங்கின் போது அல்லது அந்த நபரின் இறந்த மூதாதையர்களுக்கான பிரார்த்தனையின் போது அணியப்படுகிறது. இந்த மோதிரம் பாரம்பரியமாக தருப்பைப் புல்லால் செய்யப்படுவதாகும். இருப்பினும், நவீன பவித்திர மோதிரம் தங்கத்தால் ஆனது. மோதிரத்தின் வடிவம் தனித்துவமான ஒரு முடிச்சு போல் தோற்றம் தருவதாகும். [1] தற்காலத்தில் செம்பு, ஐம்பொன், வெள்ளி ஆகியவையும் மோதிரம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இறந்த மூதாதையர்களுக்கு சடங்குகள் செய்யும் போது இது வலது மோதிர விரலில் அணியப்படுகிறது.

வரலாறு[தொகு]

புனித மோதிரத்தின் தோற்றம் பையனூர் சுப்பிரமண்யர் கோயிலின் வரலாற்றுடன் தொடர்புடையது. [2] இக்கோயிலில் புனித சடங்குகளைச் செய்யும்போது முன்பு தர்பைப்புல்லால் ஆன பவித்ர மோதிரங்கள் பயன்படுத்தப்படன. பின்னர் நீண்ட நாட்கள் நீடித்து இருக்கவேண்டுமென்ற நோக்கத்திற்காக பூசாரிகள் தங்க மோதிரங்களுக்கு மாறினர். ஒரு பாரம்பரிய கைவினைஞருக்கு ஒரு தங்க மோதிரம் செய்ய ஒருநாள் முழுவதும் ஒரு ஆகும். . இந்தப் புனித மோதிரத்தைச் செய்யும் கைவினைஞர் தனது வாழ்நாள் முழுதும் இறைச்சி சாப்பிடவோ, மது அருந்தவோ கூடாது.

சொற்பிறப்பு[தொகு]

'பவித்ரம்' என்ற சொல்லுக்கு 'தூய்மை' அல்லது ‘புனிதம்’ என்ற பொருள். இந்த இரண்டு சொற்களும் இந்தியாவின் கேரள மாநிலத்தின் உள்ளூர் மொழியான மலையாள மொழியிலிருந்து வந்தவை.

வடிவம்[தொகு]

வளையத்தின் வெளிப்புற மேற்பரப்பில் மூன்று கோடுகள் உள்ளன, அவை மனித உடலின் ஐடா, பிங்கலா மற்றும் சுஷும்னா என்றமூன்று நதிகளைக் (நாடிகள்) குறிக்கின்றன: இந்த மூன்று நதிகளின் கலவையானது மனிதர்களில் உள்ள உயிர் சக்தியை அல்லது 'குண்டலினி சக்தியை' எழுப்பக்கூடும்.

திரிமூர்த்தி சைதன்யம்[தொகு]

பையனூர் இந்துக்களின் நம்பிக்கையின்படி, புனித மோதிரத்தை அணிவது பிரம்மா, சிவன் மற்றும் விஷ்ணு என்ற இந்து மதத்தின் மூன்று கடவுள்களின் சக்தியை எழுப்ப முடியும். மோதிரத்தை உருவாக்கியவர் மற்றும் அவற்றை அணிந்த நபர் பின்பற்ற வேண்டிய கடுமையான சடங்குகள் உள்ளன. அவர்கள் எந்த இறைச்சியையும் சாப்பிட முடியாது, மது போன்ற போதைப் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. பெண்கள் மாதவிடாய் காலத்தில் மோதிரத்தை அகற்ற வேண்டும்.பையன்னூரில் உள்ள சுப்பிரமண்யர் கோவிலில் புனிதப்படுத்தப்பட்ட பின்னரே வாடிக்கையாளருக்கு இந்த மோதிரம் வழங்கப்படுகிறது.

புகழ்[தொகு]

உலகம் முழுவதும் உள்ள பல அருங்காட்சியகங்களில் பையனூர் புனித மோதிராம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. [3] இந்தியாவின் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர் ஸ்ரீ சி.வி. குன்னம்பு இந்த புனித வளையத்தை தயாரிப்பதில் நிபுநத்துவம் பெற்றவராவார்.

யோகா தொடர்பு[தொகு]

யோகாவின் பண்டைய இந்திய ஞானத்தின்படி, மனித உடலில் மூன்று ஆற்றல்கள் உள்ளன, மேலும் இந்த நதிகளின் சீரான ஓட்டம் நபரின் ஆரோக்கியத்தையும் செழிப்பையும் உறுதி செய்கிறது.

 1. உடலின் வலது பக்கத்தில் பிங்கலா சூரிய சக்தியைக் குறிக்கிறது.
 2. முதுகெலும்பின் இடது பக்கத்தில் உள்ள ஐடா சந்திரனின் ஆற்றலைக் குறிக்கிறது.
 3. நடுவில் உள்ள சுஷும்னா அண்ட சக்தியைக் குறிக்கிறது.

இந்த மூன்று நதிகளின் அடிப்பகுதியில் குண்டலினி சக்தி அமைந்துள்ளது, மேலும் இது மனித உடலில் சக்திவாய்ந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.

புனித மோதிரம் அதன் தனித்துவமான வடிவமைப்பால் தெய்வீக சக்திகளைத் தூண்டக்கூடும் என்று இந்தியர்கள் நம்புகிறார்கள். இதை வலது கையின் மோதிர விரலில் மட்டுமே அணிய முடியும். இந்த மோதிரத்தை அணிந்த ஒரு நபருக்கு அதிக அளவு புத்திசாலித்தனம், மகிழ்ச்சி மற்றும் ஞானம் இருக்கக்கூடும்.

வணிக அம்சங்கள்[தொகு]

பையனூர் புனித மோதிரம் வணிக ரீதியாக பயன்படுத்தப்படுகிறது. [4] பல நகைக்கடைக்காரர்கள் அசல் பையனூர் பவித்ர மோதிரங்களைத் தயாரிப்பதாகக் கூறுகின்றனர். விற்பனையாளர்கள் மோதிரம் அதைப் பயன்படுத்தும் நபருக்கு அதிக அளவிலான அறிவொளியையும் உத்வேகத்தையும் கொண்டு வர முடியும் என்று கூறுகின்றனர். ஒரு புனித மோதிரம் தரம் மற்றும் வரம்பிற்கு ஏற்ப $ 400 முதல், $ 500, $ 1,500 வரை மதிப்பிடப்படுகிறது. இன்றைய காலத்தில் மோதிரம் 22 காரட் தங்கத்தால் செய்யப்படுகிறது.

எப்படி அணிய வேண்டும்[தொகு]

புனித மோதிரத்தை வலது கையில் மட்டுமே அணிய முடியும், அதுவும் மோதிர விரலில் மட்டுமே. இந்து சாஸ்திரங்களின்படி, மனித உடலின் ஒவ்வொரு விரலுக்கும் வெவ்வேறு அர்த்தங்களும் செயல்பாடுகளும் உள்ளன:

 1. கட்டைவிரல் நெருப்பைக் குறிக்கிறது
 2. ஆள்காட்டி விரல் வானத்தையும் பூக்களையும் குறிக்கிறது.
 3. நடுத்தர விரல் நெருப்பு மற்றும் புனித விளக்குகளை குறிக்கிறது.
 4. மோதிர விரல் தண்ணீரைக் குறிக்கிறது
 5. சிறிய விரல் பூமி மற்றும் சந்தன விழுது ஆகியவற்றைக் குறிக்கிறது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. R. Sivaraman. "GI registration for 'Payyannur Pavithra' ring revoked". The Hindu.
 2. "Payyannur Pavithra Mothiram in a Geographical Indication tag ownership tussle". The Times of India.
 3. "Pavithra Mothiram".
 4. "Payyanur Pavithra Mothiram".