உள்ளடக்கத்துக்குச் செல்

பைசாலி டால்மியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைசாலி டால்மியா
Baishali Dalmiya
மேற்கு வங்காளம் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2016 – 2 மே 2021
முன்னையவர்சுல்தான் சிங்
பின்னவர்ராணா சாட்டர்ஜி
தொகுதிபாலி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2021-முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (2015-2021)
பெற்றோர்
வேலைசமூக சேவகர்
அரசியல்வாதி

பைசாலி டால்மியா (Baishali Dalmiya) என்பவர் கட்டுமான நிறுவனமான எம். எல் டால்மியா & கோ. லிமிடெடின் இயக்குநர் ஆவார்.[1] இவர் மேற்கு வங்க சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். 2016 முதல் ஏப்ரல் 2021 வரை பாலி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இவர் பதவி வகித்தார்.[2][3][4] பைசாலி இந்திய துடுப்பாட்ட நிர்வாகியும் தொழிலதிபருமான ஜக்மோகன் டால்மியாவின் மகள் ஆவார்.

பைசாலி 2016-ல் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அரசியலில் சேர்ந்தார். இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியில் இணைந்தார். இதன் பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

22 சனவரி 2021 அன்று, வைசாலி, கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.[5] இதன் பின்னர் ஜனவரி 20, 2021 அன்று, புது தில்லியில் அமித் சா முன்னிலையில் ராஜீப் பானர்ஜி, பிரபீர் கோஷல், ரத்தின் சக்ரவர்த்தி மற்றும் ருத்ரனில் கோஷ் ஆகியோருடன் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[6] இவர் 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக பாலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். இத்தேர்தலில் இவரை அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு வேட்பாளர் டாக்டர் ராணா சட்டர்ஜி தோல்வியடையச் செய்தார்.

சர்ச்சைகள்

[தொகு]

13 ஏப்ரல் 2015 அன்று, கல்கத்தா லெதர் வளாகம் தோல் பதனிடுபவர்கள் சங்கம் எம். எல். டால்மியா & கோ. லிமிடெட் மற்றும் பைஷாலி டால்மியா மற்றும் அவரது சகோதரர் அவிஷேக் டால்மியா உள்ளிட்ட அதன் இயக்குநர்கள் மீது மோசடி மற்றும் நிதியைப் தவறாகப் பயன்படுத்தியதாகப் புகார் அளித்தது. பொதுச் செயலாளர் இம்ரான் அகமது கானின் கூற்றுப்படி, காவல்துறை விசாரணை நடத்த அந்த இடத்திற்குச் சென்று புகாரை முதல் தகவல் அறிக்கையாக மாற்றியது (எண். 90/15).[7] 5 மார்ச் 2021 அன்று, அப்போதைய அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு தேர்தல் முகவரான ராணா சட்டர்ஜி, பைஷாலி டால்மியாவின் வேட்புமனு ஆவணத்தில் உள்ள குற்றவியல் முன்னோடி குறித்த சரியான தகவல்களைத் தராததற்காக, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "M. L. Dalmiya & Co. Ltd. - Company, directors and contact details | Zauba Corp". www.zaubacorp.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-03.
  2. An Interview with Baishali Dalmiya, the cement daughter of India
  3. "TMC MLA threatens to sue party leader over 'cut money' accusation". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-07-01. பார்க்கப்பட்ட நாள் 2020-04-11.
  4. "Baishali Dalmiya from Bally: An unexpected entrant's foray into politics begins today". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-04-25. பார்க்கப்பட்ட நாள் 2020-04-11.
  5. "MLA Baishali Dalmiya Expelled From TMC For Anti-Party Activities". Outlook (India). பார்க்கப்பட்ட நாள் 2021-05-03.
  6. "Rajib Banerjee and 4 Other Former Trinamool Leaders Join BJP Ahead of West Bengal Elections". www.News 18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-13.
  7. "Association accuses leather complex constructor of fraud - International Leather Maker". internationalleathermaker.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-03.
  8. Banerjee, Rupak (March 26, 2021). "TMC wants EC to nix Baishali nomination". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசாலி_டால்மியா&oldid=3992384" இலிருந்து மீள்விக்கப்பட்டது