உள்ளடக்கத்துக்குச் செல்

பேரரசி வான்ராங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வான்ராங்
சீனாவின் பேரரசி
(பதவி மட்டும்)
ஆட்சிக்காலம்30 நவம்பர் 1922 – 5 நவம்பர் 1924
பிறப்பு(1906-11-13)13 நவம்பர் 1906
பெய்ஜிங், சிங் அரசமரபு
இறப்பு20 சூன் 1946(1946-06-20) (அகவை 39)
இயாஞ்ஜி, சிலின் மாகாணம், சீனா
துணைவர்புயி, 1922 நவம்பர் 30
தந்தைஇயுரோங்யான்
தாய்ஐசின் சியோரோ

வான்ராங் (Wanrong) (13 நவம்பர் 1906 - 20 சூன் 1946) சுவாண்டோங் பேரரசி என்றும் அழைக்கப்படும் இவர் சீனாவின் கடைசி பேரரசரும், மஞ்சு தலைமையிலான சிங் வம்சத்தின் இறுதி ஆட்சியாளருமான புயியின் மனைவியாக இருந்தார். 1932 ஆம் ஆண்டில், சப்பானியப் பேரரசு மஞ்சூரியா (வடகிழக்கு சீனா) கைப்பாவை மாநிலத்தை நிறுவி, புயியை அதன் பெயரளவிலான பேரரசராக நிறுவியபோது, இவர் மஞ்சுகோவின் பேரரசி ஆனார். 1945 இல் இரண்டாம் சீன-ஜப்பானியப் போரின் முடிவில் சோவியத் படையெடுப்பின் போது, இவர் சீன கம்யூனிஸ்ட் கெரில்லாக்களால் பிடிக்கப்பட்டு, சிலின் மாகாணத்திலுள்ள யான்சி சிறை முகாமில் அடைக்கப்படுவதற்கு முன்பு வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டார். இவர் 1946 சூன் அல்லது ஆகத்து மாதத்தில் சிறையில் இறந்தார். இவரது எச்சங்கள் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை. 2006 அக்டோபர் 23 அன்று, இவரது தம்பி கோபுலோ ரன்கி, மேற்கு சிங் கல்லறைகளில் இவருக்காக ஒரு சடங்கு நடத்தினார்.

குடும்ப பின்னணியும், ஆரம்ப வாழ்க்கையும்

[தொகு]

இவர், கோபுலோ குலத்தில் பிறந்தார். இது டௌர் வம்சாவளியைச் சேர்ந்தது. மேலும், எட்டு பதாகைகளின் எளிய வெள்ளை பதாகையின் கீழ் இருந்தது. இவரது தந்தை இரோங்யுவான், சிங் பேரரசின் அரசவையில் உள்நாட்டு விவகார அமைச்சராக பணியாற்றினார். இவரது உயிரியல் தாய், ஐசின்-சியோரோ எங்சின் இவரைப் பெற்றெடுத்த பிறகு பிரசவத்துக்குப் பிந்தைய காய்ச்சலால் இறந்தார். இவரை இவரது மாற்றாந்தாய், ஐசின்-ஜியோரோ எங்சியாங் என்பவர் வளர்த்தார். இவர் வான்ரோங்கின் மீது ஒரு ஆழமான ஈடுபாட்டை கொண்டிருந்தார். மேலும், ஒரு உண்மையான மகள் போலவே நடந்து கொண்டார். வான்ரோங்கிற்கு ரன்லியாங் என்ற இவரை விட இரண்டு வயது மூத்த சகோதரர் இருந்தார்.

இவரது தந்தை தனது சமகாலத்தவர்களில் பலரைப் போலல்லாமல் பாலின சமத்துவத்தை நம்பினார். எனவே இவரை இவரது சகோதரர்களைப் போலவே கல்வி கற்கவும் ஏற்பாடு செய்தார். இவர், தியான்ஜினில் உள்ள ஒரு அமெரிக்க தொண்டு நிறுவனப் பள்ளியில் பயின்றார். அங்கு இவர் ஆங்கில மொழியைக் கற்றுக் கொண்டார். மேலும், இசபெல் இங்க்ராம் என்பவரின் கீழ் கின்னரப்பெட்டி வாசிக்க பயிறிசி பெற்றார். [1]

புயியுடன் திருமணம்

[தொகு]

சிங் வம்சம் 1911 இல் அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக சீன குடியரசு பதவியில் அமர்ந்தது. இது சீனாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் ஏகாதிபத்திய ஆட்சியின் முடிவைக் குறிக்கிறது. முன்னாள் ஏகாதிபத்திய குடும்பத்திற்கு குடியரசுக் கட்சியால் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. இது அவர்களின் ஏகாதிபத்திய பட்டங்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், மரியாதையுடன் நடத்தவும் அனுமதித்தது. பதவி விலகிய கடைசி பேரரசரான புயிக்கு தடைசெய்யப்பட்ட நகரத்தில் ஏகாதிபத்திய பாணி திருமணத்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

புய் மற்றும் வான்ரோங்கின் திருமணம் 1922 நவம்பர் 30 அன்று 0300 மணி நேரத்தில் மஞ்சு வழக்கப்படி நடந்தது. [2]

தடைசெய்யப்பட்ட நகரத்தில் வாழ்க்கை

[தொகு]

புயியுடனான இவரது திருமணம் மகிழ்ச்சியற்றதாக மாறியது. ஆரம்பத்தில், தடைசெய்யப்பட்ட நகரத்தின் வாழ்க்கை இவருக்கு தினசரி சடங்குகள் மற்றும் அனுசரிப்புகள் நிறைந்ததாக இருந்தது. அதாவது அவர் அடிக்கடி தனது ஆசிரியரான இசபெல் இங்கிராமுடன் இரவு வரை படிக்க வேண்டியிருந்தது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பது, சேட்டை விளையாடுவது அல்லது வான்ரோங்கை தொலைபேசியில் அழைப்பதன் மூலம் புய் அடிக்கடி இவரது படிப்பைத் தடுத்து நிறுத்துவார். இந்த குறுக்கீடுகள் இருந்தபோதிலும், வான்ராங் ஒரு அர்ப்பணிப்புள்ள மாணவியாக இருந்து, தனது படிப்பில் முன்னேற்றத்தைக் கொண்டு தனது ஆசிரியரை ஆச்சரியப்படுத்தினார்.

இவரது நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் அவ்வப்போது அரண்மனைக்கு வருகை புரிந்தனர். புகைப்படம் எடுத்தல், மர்மக் கதைகளைப் படித்தல், பியானோ வாசித்தல், ஆங்கிலத்தில் எழுதுவது போன்றவற்றை இவர் ரசித்தார்.

சிறைவாசமும், இறப்பும்

[தொகு]

ஆகத்து 1945 இல், மஞ்சூரியா மீதான சோவியத் படையெடுப்பின் மத்தியில் மஞ்சுகுவோவை வெளியேற்றும் போது, புய் மஞ்சுகுவோவிலிருந்து தப்பிச் செல்ல முயன்றார். ஏனெனில் அவரது உடனடி பரிவாரங்கள் கைது செய்யப்படும் அபாயம் இருந்தது. அவர் தனது மனைவி வான்ரோங், காதலி லி யுகின், பிற ஏகாதிபத்திய வீட்டு உறுப்பினர்களை விட்டுவிட்டுச் சென்றார். [3] இவரும் இவரது உறவினர்களும் சீன கம்யூனிஸ்ட் கொரில்லா படையினரால் கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறை முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். [4]

இவருக்கு அபின் பழக்கம் இருந்து வந்தது. இந்த காலகட்டத்தில் அபின் கிடைக்கமல் நீண்ட காலமாக ஏற்பட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார். [5] தனது 39 வது வயதில் சூன் 20, 1946 அன்று உடல் திரவங்களின் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சிறையில் இறந்தார். [6] இவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் தெரியவில்லை. சிலர் இவர் ஒரு துணியால் மூடப்பட்டு யான்ஜியின் வடக்கே உள்ள மலைகளில் அப்புறப்படுத்தப்பட்டதாகவும், மற்றவர்கள் இவர் யான்ஜியின் தெற்கில் புதைக்கப்பட்டதாகவும் கூறினர். ஆனாலும் இவரது கல்லறை ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gunther, John, Inside Asia. p. 146
  2. Puyi, The Last Manchu
  3. Edward Behr, ibid, p. 264
  4. Saga, Hiro (1992). 流転の王妃の昭和史 (in Japanese). Shinchosha. pp. 153–154. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 4101263116.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  5. Edward Behr, ibid, pp. 268–69
  6. Behr 1987 p 270

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Empress Wan-Rong
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரரசி_வான்ராங்&oldid=3812387" இலிருந்து மீள்விக்கப்பட்டது