இசபெல் இங்க்ராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசபெல் இங்க்ராம் மேயர்
இசபெல் இங்க்ராமுடன் (வலது) வான்ராங்
பிறப்புஇசபெல் மார்டில் இங்கிராம்
(1902-03-07)மார்ச்சு 7, 1902
பெய்ஜிங், Great Qing
இறப்பு1988 (அகவை 85–86)
ஆர்லிங்டன், வர்ஜீனியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தேசியம்அமெரிக்கர்
பணிஆசிரியரும், எழுத்தாளரும்

இசபெல் இங்க்ராம் மேயர் (Isabel Ingram Mayer) (மார்ச் 7, 1902 – 1988) ஒரு அமெரிக்கரான இவர் சீனாவின் கடைசி பேரரசரான புயியின் மனைவியான வான்ரோங்கிற்கு ஆசிரியராக இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

மார்ச் 7, 1902 இல் பெய்ஜிங்கில் அமெரிக்கத் திருச்சபையைச் சேர்ந்த ஜேம்சு என்றி இங்க்ராம் என்பவருக்கும், அவரது இரண்டாவது மனைவியான மிர்ட்டல் பெல்லி என்பவருக்கும் மகளாகப் பிறந்தார். இவரது கடவுச் சீட்டுப்படியும், த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையின்படியும் இவருக்கு மிரியம் இங்க்ராம், இரூத் இங்கிராம் என்ற இரு சகோதரிகள் இருப்பதாக அறியப்படுகிறது. மற்ற உடன்பிறப்புகள் கேத்ரின் இங்க்ராம் (ரோவ்), இராபர்ட் இங்க்ராம் மற்றும் லூயிஸ் இங்க்ராம் ஆகியோர். [1]

தடைசெய்யப்பட்ட நகரத்தில் வான்ரோங்கிற்கு ஆசிரியர்[தொகு]

1922 ஆம் ஆண்டில் மாசசூசெட்ஸின் வெல்லசுலியில் உள்ள வெல்லசுலிக் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதே ஆண்டு இவர் சீனாவுக்குத் திரும்பி, வான்ரோங்கிற்குக் கற்பிக்கத் தொடங்கினார். பின்னர், இவர் தடைசெய்யப்பட்ட நகரத்தில் வசித்து வந்தார். சீனாவின் கடைசி பேரரசி வான்ரோங்கின் ஆசிரியராக இவர் இருந்தார். புயியை மணந்த வான்ரோங்கிற்கு 1922 திசம்பரில் கற்பித்தார்.

விவரம்[தொகு]

இவரது சகாப்தத்தில் பிரபலமான, பயண-சாகச எழுத்தாளர் இரிச்சர்ட் ஹாலிபர் என்பவர் இவரது பெற்றோரைப் பற்றி 1922 இல் எழுதினார். அவர் "சீனாவின் பேரரசின் இளம் அமெரிக்க பயிற்றுவிப்பாளர்" தன்னை அழைத்ததாகக் கூறினார். இந்த அழைப்பு மிகவும் சுவாரசியமானது என்று அவர் கூறினார். [2] தனது புத்தகத்தில் தி ராயல் ரோட் டு ரொமான்ஸ், [3] இளம் இங்க்ராம் மிகச்சிறியவராகவும், மிகவும் கவர்ச்சிகரமானவராகவும் இருந்தார். கிறிஸ்மஸ் ஈவ் அன்று தான் "இங்க்ராமுடன் சீன நகரின் சுவரைப் பார்க்க ஒரு நடைக்குச் சென்றதாக" அவர் கூறினார். இவர் வான்ராங்கிற்கு மேற்கின் பேச்சு, முறைகள் மற்றும் பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுத்தார் என்றும் எழுதினார்.

அறிவார்ந்த எழுத்து[தொகு]

சீன கலை மற்றும் கலாச்சாரத்தில் இவர் கொண்டிருந்த ஆர்வத்தின் பிரதிபலிப்பாக, தி பென்சில்வேனியா மியூசியம் புல்லட்டின் பத்திரிகைக்கு 1927 மற்றும் 1929 க்கு இடையில் இவர், சாங் லங் சாங் என்பவரின் "எ ஸ்குரோல் ஆப் த எயிட் வியூஸ் " [4] மற்றும் "த சைரன் கலெக்சன் ஸ்கல்ப்ச்சர்" [5] என்ற இரண்டு கட்டுரைகளை எழுதினார். .

கடவுச் சீட்டுத் தரவு[தொகு]

இங்க்ராமின் அமெரிக்கக் கடவுச்சீட்டின் படி, தனக்கு மரணமோ அல்லது விபத்தோ ஏற்பட்டால், தனது சகோதரி ரூத் இங்கிராம், பீக்கிங் யூனியன் மருத்துவக் கல்லூரிக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று இவர் விரும்பினார்.

இங்ராமின் கடவுச்சீட்டு குறித்த குறிப்பு, “அமெரிக்காவிற்கு செல்லும் வழியில் பிரித்தானிய துறைமுகங்கள், எகிப்து, பாலஸ்தீனம் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு பயணிக்கிறது. பிரித்தானிய துணைத் தூதரகம், பீக்கிங். 23/2/27. " [6] ஏப்ரல் 12, 1927 அன்று இலங்கையில் உள்ள துறைமுக போலீசாரால் இது முத்திரையிடப்பட்டது. இது இத்தாலி, சிங்கப்பூர், கிரீஸ் மற்றும் போர்ட் செய்ட் உள்ளிட்ட பிற முத்திரைகளைக் கொண்டுள்ளது. 1928 இல், இவர் சீனா திரும்பினார். 1934 இல் தனது தந்தை இறக்கும் போது, இவர் மேரிலாந்தின் எட்ஜ்வுட் நகரில் அமெரிக்க இராணுவத்தில் தளபதியாக இருந்த தனது கணவர் வில்லியம் மேயருடன் வசித்து வந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. James Henry Ingram, 1933 Reminiscences[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Richard Halliburton: His Story of His Life's Adventure, As Told in Letters to His Mother and Father. 
  3. The Royal Road to Romance (Travelers' Tales Classics). 
  4. Ingram, Isabel (1 January 1927). "A Scroll of the Eight Views by Chang Lung Chang". Bulletin of the Pennsylvania Museum 23 (117): 19–25. doi:10.2307/3794348. 
  5. Ingram, Isabel (1 January 1929). "The Sirén Collection of Chinese Sculpture: II". Bulletin of the Pennsylvania Museum 25 (130): 25–33. doi:10.2307/3794499. 
  6. "sabel Ingram's 1927 Passport". Flickr. February 1927.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசபெல்_இங்க்ராம்&oldid=3057211" இலிருந்து மீள்விக்கப்பட்டது