பேச்சு:2014 கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

கோடைக்காலம் அல்ல. மாரி காலம், வசந்த காலம் என்பவை போன்று கோடை காலம். கோடை கால ... விளையாட்டுக்கள்.--பாஹிம் (பேச்சு) 05:20, 19 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

வணக்கம் பாஹிம் . இதை சான்றாதாராமாகக் கொண்டே கோடைக்காலம் என்று எழுதினேன் . அது கோடை காலம் தான் என்றால் , மாற்றி விடலாம் . நன்றி --Commons sibi (பேச்சு) 06:52, 19 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

அங்கேயும் மாற்ற வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 09:36, 19 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

இது பல இடங்களில் மாற்றப்பட வேண்டியிருப்பதால் ஏதேனும் தானியங்கி கருவி (AWB, Bot) செய்வது சீராக இருக்கும். இல்லையெனில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறாக இருக்கும்.--மணியன் (பேச்சு) 10:08, 19 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
@Fahimrazick and Rsmn: கோடைக்காலம் என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. ஆகவே, சாரைப்பாம்பு என்பது போல ஒற்று மிகவேண்டும். இதே போல மாரிக்காலம் என்பதே சரியானது. பார்க்க: wikisource:ta:கம்பராமாயணம்/கிட்கிந்தா காண்டம்/அரசியற் படலம் --மதனாகரன் (பேச்சு) 04:32, 28 சூன் 2015 (UTC)[பதிலளி]

மதனாகரன், நீங்கள் காட்டிய உதாரணம் தகாது. வேறு உதாரணம் தாருங்கள். ஏனெனில், இங்கே விக்கி மூலத்தில் தந்திருப்பது உண்மையான மூல வடிவமல்ல. கம்பராமாயணத்தின் பாயிரத்தில் நான்காவது பாடல்,

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன்மற்று இக்
காசுஇல் கொற்றத்து இராமன் கதைஅரோ.

என்று தரப்பட்டுள்ளது. இதன் மூல வடிவம் பின்வருமாறு இருக்கிறது.

ஓசை பெற்றுயர் பாற்கடலுற்றொரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றியறையலுற்றேன் மற்றிக்
காசில் கொற்றத்திராமன் கதையரோ.

இந்நிலையில் மாற்றப்பட்ட வடிவத்தை எப்படி ஏற்பது?--பாஹிம் (பேச்சு) 15:12, 28 சூன் 2015 (UTC)[பதிலளி]

விக்கிமூலத்தில் இவ்வாறு பல சிக்கல்கள் உள்ளன. பல பாடல்கள் சந்தி பிரித்தெழுதப்பட்டுள்ளன. http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=72&pno=309
தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பதிப்பிலும் மாரிக்காலம் என்றே உள்ளது. --மதனாகரன் (பேச்சு) 03:44, 29 சூன் 2015 (UTC)[பதிலளி]
  • தலைப்பானது இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும். எடுத்துக்காட்டாகக் கூறப்படும் விக்கிமூலப்பக்கம் மறு ஆய்வுக்குரியது என்பது புதிய ஆக்கமான திட்டம். ஆனால், தலைப்புக்கு கூறப்படும் விளக்கமானது, சந்தியிலக்கண விதியால் கட்டமைக்கப் படவில்லை.அது கூறப்படும் வரை, தலைப்பு மாற்றுக வார்ப்புரு நீக்கப்படுகிறது--உழவன் (உரை) 02:59, 10 மார்ச் 2017 (UTC)