பேச்சு:வெம்மை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடிக்குறிப்பு 13-இல் "வெப்பத்தண்ணீர் - குறுந்தொகை 377" என்று இருக்கிறது. வெப்பமும் தண்மையும் எதிரெதிர் பொருளுடையதாக இருக்கிறதே என்று, இவ்வாறே சங்க இலக்கியத்தில் வருகிறதா என்று பார்க்க மூலத்தைத் தேடினேன். அதில் வெப்பமும் இல்லை தண்ணீரும் இல்லை. ஒருவேளை பாட்டு எண் பிழையாகப் பதியப்பட்டு விட்டதோ?

377. குறிஞ்சி - தலைவி கூற்று

மலரேர் உண்கண் மாணலந் தொலைய
வளையேர் மென்றோள் ஞெகிழ்ந்ததன் தலையும்
மாற்றா கின்றே தோழியாற் றலையே
அறிதற் கமையா நாடனொடு
செய்து கொண்டதோர் சிறுநன் னட்பே.

-மோசி கொற்றனார்.

--இரா. செல்வராசு (பேச்சு) 03:28, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

வேதியல் அறிஞர் ஒருவர் தமிழ் இலக்கியத்தில் இத்துணை ஆழங்கால் பட்டிருப்பது வியப்பைத் தருகிறது.
பாடல் எண் பிழையாகத் தரப்பட்டிருந்தது.
பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
திருத்தியுள்ளேன்.
நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 19:42, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெம்மை&oldid=1549630" இலிருந்து மீள்விக்கப்பட்டது