பேச்சு:விஸ்வரூபம் (2013 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sound mp3.png திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் விஸ்வரூபம் (2013 திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

அனுஷ்காவை நாகார்ஜுனன் நடிக்க வேண்டாம் என்று சொன்னார் என்பதெல்லாம் ஒரு சரிபார்க்கப்பட்ட செய்தியாக இங்கே இணைக்கப்பட்டிருக்கிறதே?! தேவையா?! -- பயனர்:மாயவரத்தான்

ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளதே??? ஆதாரம் உள்ள எந்த செய்தியும், அது தொடர்புடைய கருத்துகளையும், குறிப்பிட்ட கட்டுரையில் இருந்து நீக்குவது தேவையற்றது என்பது தாழ்மையான கருத்து.-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:19, 23 மார்ச் 2013 (UTC)
ஏதோ ஒரு இணைய தளத்தில் ‘சொல்லப்பட்டது, பேசப்பட்டது’ என்று கூறுவது தான் ஆதாரமா? இது கிசு கிசு பாணியில் வெளியாகியுள்ள செய்தி. இதனை எப்படி ஆதாரம் என்று கருத்தில் கொள்ள முடியும்? அப்படிப் பார்த்தால் யாரும் எதையும் ஆதாரம் இருக்கிறது என்று விக்கியில் இணைக்க இயலும். நன்றி. -- பயனர்:மாயவரத்தான்

கூறப்பட்டது/கிறது என்றூளதால் சிக்கல் இல்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:51, 23 மார்ச் 2013 (UTC)

நன்றி. ஆனாலும் இது திரைப்பட கிசு கிசு பாணி. அதுவுமின்றி தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட நடிகர் / நடிகையின் அந்தரங்க விஷயங்களில் தலையிடும் விஷயமும் கூட. வெளியிடப்பட்ட இணைய தளமும் கூட பிரபல பத்திரிகைகளோ அல்லது பிரபல இணைய தளமோ அல்ல. பொத்தாம் பொதுவில் யாரோ எதையோ எழுதி வைக்க, அதனை ஒரு தகவல் என்று விக்கியில் இணைப்பது சரி இல்லை என்று தோன்றுகிறது. புரிந்துணர்வுக்கு நன்றி. --பயனர்:மாயவரத்தான் (பேச்சு) 09:01, 24 மார்ச் 2013 (IST)

ஆங்கில விக்கியில் ஒரு திரைப்படத்தில் யாரெல்லாம் நடிக்கவிருந்து பிற்பாடு விலகினார்கள் என்பது பற்றி ஒரு பத்தியே சில படங்களுக்கான கட்டுரையில் இருக்கும். அந்தரங்க விஷயங்களில் தலையிடுவது பற்றி விக்கிக்கொள்கை ஏதும் இருப்பதாக தெரியவில்லை. மேலும் அனு விவகாரம் வெப் துனியா போன்ற தளங்களிலும் தினகரன் நாளிதழிலும் அடிபட்ட விஷ்யம் தான். மற்றவற்றிலும் பேசப்பட்டிருக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:08, 24 மார்ச் 2013 (UTC)

யாரெல்லாம் நடிக்கவிருந்தார்கள் என்ற விஷயங்கள் எழுதுவதும், அது குறித்து கிசுகிசுக்கள் எழுதுவதும் ஒன்றல்ல என்பது என் கருத்து. இந்த மாதிரியான அந்தரங்க அர்த்தமற்ற கிசுகிசுக்களை விக்கியிலும் பரவச் செய்வதன் மூலம் நாம் ஒரு மோசமான முன்னுதாரணத்தை தான் எடுத்தாள்கிறோம் என்பேன். இதனால் ஒரு பலனும் இல்லை. கூடவே மேற்படி கட்டுரையில் ‘சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு திரையிடப்பட்டது’ என்ற வரிகளை ஏன் நீக்கினீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? நன்றி. -- பயனர்:மாயவரத்தான்
மாயவரத்தானின் கருத்துகளுடன் உடன்படுகிறேன். ஆங்கில விக்கியில் இருக்கிறது என்ற காரணத்துக்காக நாமும் பின்பற்ற வேண்டாம். சில நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்கு பெறுவதாக தயாரிப்பு நிறுவனமே அறிவித்துப் பின்பு ஆட்கள் மாறியிருந்தால் குறிப்பிடலாம். கிசுகிசுக்களையும் ஊகச் செய்திகளையும் தவிர்க்கலாம். --இரவி (பேச்சு) 05:50, 24 மார்ச் 2013 (UTC)
சரியான கருத்து! நன்றி!! --பயனர்:மாயவரத்தான்(பேச்சு) 06:24, 24 மார்ச் 2013 (UTC)

இரவி கூறியபடி, நிறுவனங்கள் கூறுவதை எழுதுவதே சிறந்தது. மாயவரத்தான் கூறிய செய்தியை தினேஷ் நீக்கியிருக்கிறார்.

மாயவரத்தாரே நீங்கள் வரலாற்றைக் காட்டவும் என்ற பகுதியை சொடுக்கி அங்குள்ள ரேடியோ பட்டன்களை சொடுக்கி கட்டுரையில் யார் யார் என்ன என்ன திருத்தங்களை மேற்கொண்டனர் என அறிந்து கொள்ளலாம், நீங்கள் தரக்கண்கானிப்பில் ஆர்வம் காடுவதால் இது உங்களுக்கு உதவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:37, 24 மார்ச் 2013 (UTC)

நன்றி தென்காசியாரே! :) மேற்படி அனுஷ்கா-நாகார்ஜுனா செய்தி மீண்டும் இப்போது வந்திருக்கிறது! :( --பயனர்:மாயவரத்தான்(பேச்சு) 04:52, 26 மார்ச் 2013 (UTC)
நடிகர்கள் தேர்வு குறித்த கிசுகிசு, ஊகச் செய்திகள் நிறைந்த பகுதியை முற்றிலும் நீக்கியுள்ளேன். --இரவி (பேச்சு) 06:48, 26 மார்ச் 2013 (UTC)
நன்றி! :))) (பேச்சு) 06:51, 26 மார்ச் 2013 (UTC)