உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:யமுனா புஷ்கரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம், ஆங்கில விக்கிபீடியாவில் யமுனா புஷ்கரம் என்ற தலைப்பிலான கட்டுரையினை அடிப்படையாகக் கொண்டு இப்பதிவு ஆரம்பிக்கப்பட்டது. வேறு தலைப்பு எதுவாயினும் தெரிவிக்க வேண்டுகிறேன். அவ்வாறே செய்வோம். கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:24, 2 செப்டம்பர் 2017 (UTC)

யமுனைப் புனித நீராடும் விழா--நந்தகுமார் (பேச்சு) 11:26, 2 செப்டம்பர் 2017 (UTC)
வணக்கம் நந்தகுமார் யமுனைப் புனித நீராடும் விழா என்றே அமைப்போம். இருப்பினும் ஒரு ஐயம். புஷ்கரம் தொடர்பான குறிப்பினையோ விவரங்களையோ தேடுகையில் பக்தர்களுக்கும், மக்களுக்கும் எளிதாக இருக்கும் வகையில் (யமுனை புஷ்கரம்) என்று அடைப்புக்குறிக்குள் போடலாமா? வேறு ஏதேனும் முறை உள்ளதா? மகாமகம் என்பதற்கு மகாமகம் என்றுதான் கூறுகிறார்கள். அந்த தலைப்பில் பதிவு உள்ளது. அதுவும் புனித நீராடலே. (மகாமகம் புனித நீராடல் விழா என்று பயன்படுத்துவதில்லை)அவ்வகையில் ஒவ்வொரு நதியின் பெயருக்குப் பின்னும் புனித நீராடும் விழா என்று மட்டுமே அமைக்கும்போது தேடுபவர்கள் எளிதில் உள்வாங்கிக் கொள்வார்களா என்ற ஐயம் ஏற்படுகிறது. நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:42, 2 செப்டம்பர் 2017 (UTC)
தமிழில் பெயர் இருப்பது நாம் அனைவரும் விரும்புவதே. முதலில் புஷ்கரம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியாததால் கூகிளில் தேடினேன். இதனால் ஏற்பட்ட கேள்வியே என்னை எழுதத்தூண்டியது.--நந்தகுமார் (பேச்சு) 11:58, 2 செப்டம்பர் 2017 (UTC)
வணக்கம், நந்தகுமார். இவ்வாறான தேடலின்போது அனைவருக்கும் எளிமையாக இருக்கவேண்டுமே என்னும் நிலையிலேயே அவ்வாறே பெயரிட்டுள்ளேன். மிகவும் சிரமப்பட்டு, தரவுகளைத் தேடிச் சேர்த்து, தொகுத்து அமைக்கும் நிலையில் அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதே என் அவா. தாங்கள் தேடியதுபற்றி தற்போது அறிந்தேன். தங்களின் கேள்விக்கு நான் உரிய மறுமொழியைத் தந்துள்ளேன் என்று நினைக்கிறேன். தங்களின் ஊக்கத்திற்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:03, 2 செப்டம்பர் 2017 (UTC)
வணக்கம், பயனர்:பா.ஜம்புலிங்கம். உங்களுடைய, அரிய தகவல்களைத் திரட்டி கட்டுரைகளை உருவாக்கும் பணியினை நன்கு அறிந்ததாலேயே தங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். புரிதலுக்கு நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 12:11, 2 செப்டம்பர் 2017 (UTC)

Start a discussion about யமுனா புஷ்கரம்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யமுனா_புஷ்கரம்&oldid=2410964" இலிருந்து மீள்விக்கப்பட்டது