பேச்சு:ம. சு. விசுவநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தக் கட்டுரையின் தலைப்பு எம். எஸ். விசுவநாதன் என மாற்றப்படுவதே நல்லது. தலைப்பு மாற்ற வரலாற்றைப் பார்க்கும்போது சிரிப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது. என்ன செய்வதென்ற ஒரு நிலையான கொள்கை இல்லாததையே தலைப்பு மாற்ற வரலாறு காட்டுகிறது. எம். எஸ். விசுவநாதன் என்றே அன்று தொட்டு அவர் அறியப்படுகிறார். ஆங்கில முதலெழுத்துக்களுடன் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கின்றன. அப்படியிருக்க நன்கு அறியப்பட்ட ஒருவரின் பெயரை இப்படி யாரும் அறியாத முதலெழுத்துக்களுடன் ஏன் மாற்ற வேண்டும் என்பது புரியவில்லை. ம என்ற முதலெழுத்து எப்படி வந்தது என்பதற்கு கட்டுரையில் விளக்கம் இல்லை. இருக்கும் தகவலை வைத்துப் பார்த்தால் மலையாளி சுப்பிரமணியன் விசுவநாதன் என்றே நினைக்க வேண்டியுள்ளது.
ஆகவே, யாராவது நிர்வாகி இந்தத் தலைப்பை எம். எஸ். விசுவநாதன் என மாற்றி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இதே போல ம. ச. சுப்புலட்சுமி என்ற தலைப்பையும் எம். எஸ். சுப்புலட்சுமி என மாற்றுமாறும் கேட்டுக் கொள்கிறேன். - Uksharma3 (பேச்சு) 06:10, 4 மார்ச் 2014 (UTC)

மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன். மலையாளி சுப்பிரமணியன் விசுவநாதன் அல்ல, இப்பெயர் கட்டுரையின் தொடக்கத்திலேயே உள்ளதே? தமிழ் முன்னெட்டு தெரியவில்லை என்றால் ஆங்கலத்தில் இருக்கும் இது தமிழ் விக்கி விதியாயிற்றே. --குறும்பன் (பேச்சு) 01:39, 5 மார்ச் 2014 (UTC)

நான் மேலேயுள்ள குறிப்பை எழுதிய பின்னரே மனயங்கத் என்ற பெயர் சேர்க்கப் பட்டது. வரலாற்றைப் பார்க்கவும். சேர்த்தவர் இந்தப் பேச்சுப் பக்கத்தில் குறிப்பு எழுதியிருந்தால் உங்களின் இந்தப் பதிவுக்கு அவசியம் இருந்திராது.
தெரிந்தால் ஒரு விதி, தெரியவில்லை என்றால் விதி தளர்வு என்பது அவரவர் வசதிக்கேற்ப செயற்படுவதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு போல இருக்கிறது. விதி என்றால் அது எல்லாவற்றிற்கும், எப்பொழுதும் பொருந்தவேண்டும். தெரியவில்லை என்றால் தெரிந்து (அறிந்து) அதன் பின் எழுதவேண்டும். -Uksharma3 (பேச்சு) 02:17, 5 மார்ச் 2014 (UTC)

நான் இக்கட்டுரையில் சில திருத்தங்கள் முன்பு செய்துள்ளேன். அப்போது மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் என்று இருந்தது. தெரியாவிட்டால் தெரிந்தவர்கள் எழுத வேண்டியது தான். இதற்காக நாம் யாரையும் தெரிந்து எழுது என்று கட்டாயப்படுத்த முடியாது. விதி உள்ளது. அது எல்லாவற்றிற்கும் இருக்க வேண்டும் என்பது நியாம் தான் உதாரணத்துக்கு: Uksharma என்பதில் Uk என்பது கட்டுரை எழுதுபவருக்கு தெரியாது ஆனால் Uksharma புகழ் பெற்ற மனிதர் அவரைப்பற்றி கட்டுரை வேண்டும் Uk என்றால் என்ன? என்று தெரிந்து கட்டுரை எழுத வேண்டும் என்றால் அப்பயனர் எழுதாமலே கூட விட்டு விடுவார் தேடி எழுதுவார் என்று எதிர்பார்க்க முடியாது தெரிந்தவர்கள் பின்பு மாற்ற வேண்டியது தான் அதுவே முறை --குறும்பன் (பேச்சு) 02:32, 5 மார்ச் 2014 (UTC)
கட்டுரையின் தகவல் பெட்டியிலேயே முன்பு முழுப்பெயர் இருந்தது. சர்மா அவர்களின் முறைப்பாட்டை அடுத்து அதனை முதல் வரிகளில் சேர்த்தேன். சேர்த்த போது இங்கு ஒரு குறிப்பு இட்டிருக்க வேண்டும். அது எனது தவறு தான். மேலும், ஆங்கில முன்னெழுத்துக்களுடன் கூடிய பெயர்கள் அவற்றின் மூலப் பெயர்கள் தெரியாத விடத்து ஆங்கில முன்னெழுத்துகளுடனே தலைப்பிடலாம். தமிழ்ப் பெயர் தெரிந்தால், அவற்றை தமிழில் எழுதுவதே விக்கியில் நடைமுறை. எம்.ஜி.ஆர், சி. என். அண்ணாதுரை போன்றோர்களின் கட்டுரைத் தலைப்புகள் முன்னுதாரணம். இந்நடைமுறையை முடிந்தளவு கடைப்பிடிப்பது நல்லது.--Kanags \உரையாடுக 07:09, 5 மார்ச் 2014 (UTC)

//புகழ் பெற்ற மனிதர் அவரைப்பற்றி கட்டுரை வேண்டும்// எம். எஸ். விஸ்வநாதன் என்றால் தான் எல்லோருக்கும் தெரியும். கூகுள் தேடுபொறியில் எம். எஸ். விஸ்வநாதன் என்று தேடிப்பாடுங்கள். 3 லட்சம் தளங்களுக்கு மேல் பட்டியலிடும். முதலாவதாக தமிழ் விக்கி கட்டுரை பக்கத்தை காட்டுகிறது. ஆனால் என்ன தலைப்பு காட்டுகிறது எனக் கவனித்துப் பார்க்கவும். ம. ச. விசுவநாதன் என்று தேடிப்பாருங்கள். ம. ச. விசுவநாதன் தமிழ் விக்கி பக்கத்தைக் கூட காண்பிக்கவில்லை. கட்டுரைகள் எதற்காக எழுதப் படுகின்றன? தமிழ் விக்கி பிரபலமடைய வேண்டுமானால் மக்கள் மன்றத்தில் அது பற்றித் தெரியவேண்டும்..
தமிழ் விக்கியில் விவாதத்திற்குப் போவதில்லை என எப்பவோ முடிவு செய்து விட்டேன். இருந்தாலும் தெரிந்த தகவலைச் சொல்ல வேண்டும் என்பதால் (அதுவும் தமிழ் விக்கி மக்கள் மன்றத்தில் பரவ வேண்டும் என்ற நோக்கத்தில்) இங்கே எழுதினேன். இனி இதனை பெரிதுபடுத்தி வளர்க்க வேண்டாம். நன்றி. வணக்கம். - Uksharma3 (பேச்சு) 09:55, 5 மார்ச் 2014 (UTC)

ம. சு. விசுவநாதன் என எவரும் தேட மாட்டார்கள். எம். எஸ். விஸ்வநாதன் என்று பொதுப் பெயரில் தேடினால் எம். எஸ். விஸ்வநாதன் என்ற பெயரிலேயே தமிழ் விக்கி கட்டுரையே முதலில் வருகிறது. அதுவே இத்திட்டத்தின் வெற்றி என எடுத்துக் கொள்ளலாம் தானே.--Kanags \உரையாடுக 10:13, 5 மார்ச் 2014 (UTC)