பேச்சு:முலை வரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

Breast cancer என்பது மார்பகப் புற்றுநோய் ஆகும். நிற்க. இக்கட்டுரை விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 போட்டிக்காக உருவாக்கப்பட்டது. ஆகவே, நகர்த்தும்போது உரையாடுதல் அவசியம்.--AntanO (பேச்சு) 13:15, 30 செப்டம்பர் 2021 (UTC)

AntanO திருவிதாங்கூர் நாட்டில் வசூலிக்கப்பட்ட இந்த வரியானது முலை வரி என்றே வரலாற்றில் அழைக்கப்படுகிறது. அதுவே சரியான பெயர்--அருளரசன் (பேச்சு) 13:47, 30 செப்டம்பர் 2021 (UTC)
ஆதாரம் /உசாத்துணை? --AntanO (பேச்சு) 13:47, 30 செப்டம்பர் 2021 (UTC)
@AntanO: முலை வரி என்று அழைக்கப்படுவதற்கான சான்றுகளை சுட்டியுள்ளேன்; [1], [2], [3], [4], [5], [6] --அருளரசன் (பேச்சு) 14:03, 30 செப்டம்பர் 2021 (UTC)
மார்பக வரி என்று அழைக்கப்படுவதற்கான சில சான்றுகளை சுட்டியுள்ளேன் கேரளாவில் மார்பக வரி விதிப்பை எதிர்த்து உயிர் நீத்த வீரப் பெண்!!, மார்புக்கு வரி: கொங்கைகளை வெட்டி எறிந்து மரணமடைந்த வீரப் பெண்!. மார்பக வரி என்பதற்கு 124,000 முடிவுகளும், முலை வரி என்பதற்கு 107,000 முடிவுகளும் கூகிளில் கிடைக்கின்றன. --AntanO (பேச்சு) 14:30, 30 செப்டம்பர் 2021 (UTC)
@AntanO: //மார்பக வரி என்பதற்கு 124,000 முடிவுகளும், முலை வரி என்பதற்கு 107,000 முடிவுகளும் கூகிளில் கிடைக்கின்றன.// ஒரு சொல்லை கூகிலில் கூடுதலாக காட்டிவிட்டால் அதுவே வரலாற்று ரீதியாக சரியான சொல்ல் என்பதற்கில்லை. முலை என்பதை விட நாகரிகமான சொல்லாக மார்பகம் என்ற சொல்லை தற்காலத்தில் பாவிப்பதால் இவ்வாறான முடிவு கூகிலில் கிடைத்திருக்கலாம். ஆனால் முலை வரி என்பதே வரலாற்று பூர்வமாக பாவிக்கப்பட்ட சொல் என்பது என் உறுதியான கருத்து. நன்றி--அருளரசன் (பேச்சு) 14:57, 30 செப்டம்பர் 2021 (UTC)

@AntanO: @Arularasan. G: ////மார்பக வரி என்பதற்கு 124,000 முடிவுகளும், முலை வரி என்பதற்கு 107,000 முடிவுகளும் கூகிளில் கிடைக்கின்றன.// ஒரு சொல்லை கூகிலில் கூடுதலாக காட்டிவிட்டால் அதுவே வரலாற்று ரீதியாக சரியான சொல்ல் என்பதற்கில்லை.//. கூகிளில் கூடுதலாக காட்டும் சொல்லே பரவலாக பயன்பாட்டில் இருக்கும் சொல். எனவே கட்டுரைகளில் அச்சொல் இருப்பது, தேடுவோரிடம் எளிதில் சென்றடையும் என்று நினைக்கிறேன். நிற்க, கூகிளில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் உள்ள தேடலை நிகழ்த்தும் போது ஒவ்வொரு சொல்லும் தனித்தனியாக பாவிக்கப்பட்ட பதிவுகளையும் தேடலில் கட்டும். இரட்டை மேற்கோள் குறியிட்டுத் தேடும் போது அச்சொற்றொடர் உள்ள பதிவுகளை மட்டுமே காட்டும். "மார்பக வரி" என்று தேடினால் 1660 முடிவுகள். "முலை வரி"க்கு 49400 முடிவுகள். மேலும், //ஆனால் முலை வரி என்பதே வரலாற்று பூர்வமாக பாவிக்கப்பட்ட சொல் என்பது என் உறுதியான கருத்து.// இதை ஏற்றுக்கொள்கிறேன். வரலாற்றில் பயன்படுத்திய சொற்களை நாம் சாதாரண இடுகுறி பெயராகக் கொண்டு திருத்துவது ஆகாது. அதைக் கலைச்சொல்லாக பாவித்து அப்படியேதான் பயன்படுத்த வேண்டும். எனவே முலை வரி என்று இப்பக்கத்தின் பெயரை மாற்றுவதற்கு ஆதரவளிக்கிறேன். நன்றி! -CXPathi (பேச்சு) 16:47, 30 செப்டம்பர் 2021 (UTC)

வேண்டுமானால் மார்பக வரி என்று அடைப்புக்குறிக்குள் கொடுக்கலாம். கட்டுரையின் பெயர் முலை வரி என்று இருப்பதே சரியானது. -CXPathi (பேச்சு)
👍 விருப்பம்--அருளரசன் (பேச்சு) 00:00, 1 அக்டோபர் 2021 (UTC)[பதிலளி]

//ஒரு சொல்லை கூகிலில் கூடுதலாக காட்டிவிட்டால் அதுவே வரலாற்று ரீதியாக சரியான சொல்ல் என்பதற்கில்லை.// நான் அவ்வாறு கூறவில்லை. நடைமுறையில் என்ன உள்ளது என்பதைத் தெரிவித்தேன். breast என்பது மார்பு, முலை, கொங்கை, தனம் அழைக்கப்படுகிறது. ஆகவே சரியான பொருத்தமான சொல்லைச் சேர்ப்பதற்கு ஆதரவு. நிற்க, இக்கட்டுரை விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 போட்டிக்காக உருவாக்கப்பட்டது. ஆகவே, இவ்வாறான கட்டுரைகளை உரையாடாமல் நகர்த்தும்போது ஏற்படுடக்கூடிய சிரமங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், ஒரு கட்டுரையை நகர்த்தும்போது எவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற நடைமுறைகள் பின்பற்ற வேண்டும். எனது பேச்சின் ஆரம்பம் வரலாறு, சொல்லியல் ஆகியன பற்றியதில்லை என்பதைக் கவனிக்கவும். --AntanO (பேச்சு) 01:59, 1 அக்டோபர் 2021 (UTC)[பதிலளி]

நல்லது போட்டி காலம் முடிந்த பிறகு இந்தக் கட்டுரையின் பெயரை முலை வரி என்று மாற்றுகிறேன்.--அருளரசன் (பேச்சு) 05:59, 1 அக்டோபர் 2021 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:முலை_வரி&oldid=3305870" இலிருந்து மீள்விக்கப்பட்டது