உள்ளடக்கத்துக்குச் செல்

முலை வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முலை வரி அல்லது மார்பக வரி (Breast Tax) (மலையாளம்; തലക്കരം, முலைக்காரம் அல்லது முலை-காரம்) என்பது திருவிதாங்கூர் இராச்சியத்தில் (இன்றைய இந்தியாவின் கேரள மாநிலம்) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், தலித் இந்துக்கள் பொதுவாக தங்கள் மார்பகங்களை மறைக்கும் விதமாக ஆடை அணிய விரும்பும் பெண்களுக்கு 1924 வரை விதிக்கப்பட்ட வரியாகும்.[1][2] இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கும் தலித் பெண்களுக்கும் மார்பகங்கள் வளரத் தொடங்கும்போது அரசாங்கத்திற்கு முலை வரியைச் செலுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டனர். [3] இதர பிற்படுத்தப்பட்ட ஆண்கள் தலை-காரம் என்று அழைக்கப்படும் இதேபோன்ற ஒரு வரியை தங்கள் தலைப்பாகைக்காக செலுத்த வேண்டும். திருவிதாங்கூரில் வரி வசூலிப்பவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, பூப்பு எய்திய தலித் பெண்களிடமிருந்து முலை வரியை வசூலிப்பார்கள்.[4] பெண்ணின் மார்பகங்களின் அளவைப் பொறுத்து வரி வசூலிப்பவர்களால் வரி அளவு மதிப்பிடப்பட்டது.[5] [6] [7] [8]

இதர பிற்படுத்தப்பட்ட பெண்களும் தலித் பெண்களும் தங்கள் மார்பகங்களை மறைக்காமல் இருப்பது திருவிதாங்கூரின் நீண்டகால பாரம்பரியமாக இருந்தது. மேலும், இது ஒரு உயர் சாதி நபருக்கு மரியாதை அளிப்பதற்கான அறிகுறியாகும். இது இந்திய சாதி அமைப்பின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது. கிறிஸ்தவ மறைபணியாளர்களின் செல்வாக்கின் விளைவாக இந்த நடைமுறை கேள்விக்குட்படுத்தப்பட்டது.[9]

பின்னணி

[தொகு]

திருவிதாங்கூர் இராச்சியம் அதன் கடுமையான மற்றும் அடக்குமுறை சாதி அமைப்பிற்கு பெயர் பெற்றது. இதனைக் கருத்தில் கொண்ட விவேகானந்தர் திருவிதாங்கூரை "பைத்தியக்கார விடுதி" என்று அழைத்தார்.[10]. திருவிதாங்கூர் அரசால் தலித் இந்துப் பெண்களுக்கு முலை வரி விதிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க விரும்பினால் அவர்கள் மார்பகங்களின் அளவிற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும்.[1] இது உயர் சாதியினருக்கான மரியாதையாக கருதப்பட்டது. மேலும், நாடார், ஈழவர் பெண்கள் உட்பட கீழ் சாதியினர் வரி செலுத்த வேண்டியிருந்தது.[1] பாலின சூழலியல், தலித் ஆய்வுகள் ஆகியவற்றின் பேராசிரியர் டாக்டர் ஷீபா கே.எம். இவ்வரியின் நோக்கம் சாதி படிநிலையை பராமரிப்பதாக இருந்தது என்கிறார்.

இந்த சட்டம் திருவிதாங்கூரின் பாரம்பரியத்தில் விளைந்தது. இதில் உயர் சாதி நபருக்கு மரியாதை செய்வதற்கான அடையாளமாக மார்பகங்கள் மறைக்காமல் விடப்பட்டது. ஆற்றிங்கல் இராணி ஒரு காலத்தில் கீழ் சாதி பெண் ஒருவர் துணியால் தனது மார்பகத்தை மூடியதற்காக அவளுக்குத் தண்டனையாக அவளது மார்பகத்தை வெட்டினார்.[11] உதாரணமாக, நம்பூதிரி பிராமணர்களுக்கு முன்னால் அல்லது கோவில்களுக்குள் நுழையும்போது நாயர் சமூகப் பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க அனுமதிக்கப்படவில்லை. பிராமணர்கள் தெய்வங்களின் உருவங்களுக்கு மட்டுமே தங்கள் மார்பகங்களை காட்டினர். நாடார்கள், ஈழவர்கள் மற்றும் தீண்டத்தகாத சாதிகள் போன்ற இன்னும் கீழ் சாதியினரின் பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க அனுமதிக்கப்படவில்லை. 19 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் பரவியதால், கிறிஸ்தவர்களாக மாறிய நாடார் பெண்கள் தங்கள் மேல் உடலை மறைக்கத் தொடங்கினர். படிப்படியாக இந்து நாடார் பெண்கள் கூட இந்த நடைமுறையை ஏற்றுக்கொண்டனர்.[12] தோள் சீலைப் போராட்டம் எனப்படும் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, நாடார் பெண்களுக்கு 1859இல் மார்பகங்களை மறைக்கும் உரிமை வழங்கப்பட்டது.[13]

திருவிதாங்கூர் இராச்சியத்தில் ஒருவரின் மார்பகத்தை மறைக்காமல் இருப்பது கீழ் சாதியினர் முன்னேறிய வகுப்பினருக்கு மரியாதை செய்வதின் அடையாளமாக மதிக்கப்பட்டதாக பல வரலாற்று ஆசிரியர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.[14] [15]

நங்கேலி குறித்த செவிவழிக்கதை

[தொகு]

கிராமப்புற செவிவழிக் கதைகளின்படி நங்கேலி 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய துணைக்கண்டத்தின், திருவிதாங்கூர் இராச்சியத்தில் சேர்த்தலை என்ற இடத்தில் வாழ்ந்த ஒரு பெண் ஆவார். இவர் சாதி அடிப்படையிலான முலை வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது மார்பகங்களை வெட்டிக் கொண்டார்.[16]கதையின்படி, அவர் மார்பகங்களை வெட்டி அவற்றை வாழை இலையில் கட்டி வரி வசூலிப்பவருக்கு வழங்கினார். [17] [18] பின்னர் குருதி இழப்பால் இறந்தார்.[19] நங்கேலியின் மரணத்தைத் தொடர்ந்து, மக்கள் இயக்கங்கள் தொடங்கப்பட்டது. விரைவில் அவர் வாழ்ந்த இடம் முலச்சிபறம்பு ( முலைச்சி இடம் என்று பொருள்) என அழைக்கப்பட்டது. [16]

எவ்வாறாயினும், இந்த கதை இந்தியாவின் எந்த வரலாற்று பதிவுகளிலும் இடம்பெறவில்லை. மேலும் இதன் நம்பகத்தன்மையும் விவாதத்திற்குரியதாக உள்ளது. [16] நங்கேலியின் காலத்தில் கேரளத்தில் தாய்வழி சமூகத்தில் மார்பகங்களை மறைப்பது வழக்கமல்ல என்று வரலாற்று ஆசிரியர் மனு பிள்ளை வாதிடுகிறார். பல தசாப்தங்களுக்குப் பிறகு பிரித்தானிய குடியேற்ற செல்வாக்கின் கீழ் விக்டோரிய மகாராணி கால நெறிமுறைகள் திருவாங்கூர் சமூகத்தில் ஊடுருவியது. இது தோள் சீலை அணியும் உரிமைக்கான அடுத்தடுத்த வர்க்கப் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.[20] அனைத்து கீழ் சாதியினருக்கும் விதிக்கப்பட்ட ஒடுக்குமுறை வரிக்கும், ஆட்சிக்கும் எதிராக நங்கேலி எதிர்ப்பு தெரிவித்ததாக அவர் நம்புகிறார். இது காலப்போக்கில் பெண்களின் கௌரவத்தை காப்பாற்றுவதற்காக ஒரு வித்தியாசமான ஆணாதிக்கத்துகு எதிரான போராட்டமாக தொடர்ந்தது.[20] [21]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "The CBSE Just Removed an Entire History of Women's Caste Struggle". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2019-11-13.
  2. "Nine weird taxes from around the world – Really absurd". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2019-11-13.
  3. K.S. Manilal (15 November 2012). "Sikhism in Kerala: Forgotten Chapter in the Social History of the State". Samagra 8: 3–4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0973-3906. https://docs.google.com/viewer?a=v&pid=sites&srcid=ZGVmYXVsdGRvbWFpbnxjcmlrc2NzYW1hZ3JhfGd4OjE5OTc0YzhhNWRlN2Y2MDM. "One such infamous law that was in force in Travancore until as late as the first quarter of the 20th century was known as Mulakkaram, i.e., the law of breast tax. According to this law the avarna women, were to pay tax to the government for their breasts from the very time of their girlhood, when they start developing breasts". 
  4. "Breast Tax and the Revolt of Lower Cast Women in 19th Century Travancore" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2019-05-17. பார்க்கப்பட்ட நாள் 2019-11-14.
  5. Keerthana Santhosh (2020). "Dress as a tool of Empowerment: The Channar Revolt". Our Heritage Journal 22: 533. http://ourheritagejournals.com/images/short_pdf/1580374996_926.pdf. பார்த்த நாள்: 15 May 2020. 
  6. Renjini P and Dr. C Natarajan (2017). "Rani Gowry Lakshmi Bai: Abolition of slavery in Travancore". International Journal of Home Science: 337. http://www.homesciencejournal.com/archives/2017/vol3issue3/PartF/3-3-84-673.pdf. 
  7. [...body of reference...]
  8. "Nangeli and the first documented 'Pati Sahagamanam'". Souhardya De. Sunday Guardian. 31 October 2020. பார்க்கப்பட்ட நாள் 27 July 2021.
  9. Jacob Kattackal. Comparative Religion.Jacob Kattackal (1990). Comparative Religion. Oriental Institute of Religious Studies. p. 144. In South India, until the 19th century, the 'low caste' men had to pay the 'head tax, and the 'low caste' women had to pay a 'breast tax' ('tala-karam' and 'mula-karam') to the government treasury. The still more shameful truth is that these women were not allowed to wear upper garments in public.
  10. "God's own challenge". The Indian Express. 24 December 2018. பார்க்கப்பட்ட நாள் 27 July 2021.
  11. Keerthana Santhosh. CONDITION OF WOMEN IN PRE-MODERN TRAVANCORE. http://ijrcs.rcsjournals.org/wp-content/uploads/2017/08/201708019.pdf. பார்த்த நாள்: 2021-09-29. 
  12. Robert L. Hardgrave, Jr. (1968). "The Breast-Cloth Controversy: Caste Consciousness and Social Change in Southern Travancore". The Indian Economic & Social History Review 5 (2): 171–187. doi:10.1177/001946466800500205. https://archive.org/details/sim_indian-economic-and-social-history-review_1968-06_5_2/page/171. 
  13. "Women at the Intersection of Caste and Sex: History of Breast Tax". in.makers.yahoo.com (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-07-10.
  14. Cohn 1996.
  15. Hardgrave, Robert L. (1969). The Nadars of Tamilnad (in ஆங்கிலம்). University of California Press. pp. 55-70.
  16. 16.0 16.1 16.2 "The woman who cut off her breasts to protest a tax" (in en-GB). BBC News. 2016-07-28. https://www.bbc.com/news/world-asia-india-36891356. 
  17. Surendranath, Nidhi (21 October 2013). "200 years on, Nangeli's sacrifice only a fading memory". http://www.thehindu.com/news/cities/Kochi/200-years-on-nangelis-sacrifice-only-a-fading-memory/article5255026.ece. 
  18. Singh, Vijay (7 March 2016). "She died fighting 'breast tax', her name lives on". Times of India. பார்க்கப்பட்ட நாள் 15 April 2017.
  19. Pillai, Manu S. (2019). "The woman with no breasts". The Courtesan, the Mahatma and the Italian Brahmin: Tales from Indian History. Chennai: Westland Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789388689786 – via The Hindu.
  20. 20.0 20.1 "The woman who cut off her breasts" (in en-IN). 2017-02-18. https://www.thehindu.com/society/history-and-culture/the-woman-who-cut-off-her-breasts/article17324549.ece. 
  21. "Revisiting Nangeli, the Woman with No Breasts". NewsClick (in ஆங்கிலம்). 2019-11-03. பார்க்கப்பட்ட நாள் 2021-01-15.

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முலை_வரி&oldid=4062527" இலிருந்து மீள்விக்கப்பட்டது