பேச்சு:முகம்மது இசுமாயில் சாகிப்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவரது ஒரே பிள்ளையை இந்திய-சீனா போரில் அர்ப்பணித்தவர் என்று இன்று சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்கள் கிடைத்தால் அதனையும் சேர்த்துக்கொள்ளலாம்? -- மாஹிர் 18:01, 6 ஜூன் 2010 (UTC)

Quaid-E-Millat[தொகு]

Quaid-E-Millat என்றால் leader of the nation என்று சில இடங்களில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இங்கு மக்களின் வழிகாட்டி என்றுள்ளது. எது சரி?--Sodabottle 05:52, 10 ஜூன் 2010 (UTC) மக்களின் வழிகாட்டி என்பதே சரி--Hibayathullah 13:59, 10 ஜூன் 2010 (UTC)

ஹிபயத்துல்லா, எனக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை :-). quaid என்ற சொல் பிற பட்டங்களிலும் “தலைவர்” என்ற பொருளில் வருகிறதே? எ.க ஜின்னாவை quaid-e-azam (leader of the nation) என்றழைக்கிறார்கள். ஆங்கில விக்கி reference desk இல் இதை இடுகிறேன் அரேபிய மொழி வல்லுனர் எவரேனும் விளக்கமளிக்கக் கூடும் --Sodabottle 07:56, 11 ஜூன் 2010 (UTC)
இங்கே leader of the nation என்றே கூறுகிறார்கள். quaid (قائد) என்றால் commander என்றும் Millet என்றால் nation என்றும் சொல்லுகிறார்கள். எனவே “தேசத் தலைவர்” என்பதே சரியான மொழி பெயர்ப்பு என நினைக்கிறேன்.--Sodabottle 17:03, 11 ஜூன் 2010 (UTC)
  • ஜின்னாவை quaid-e-azam (leader of the nation) என்றழைக்கிறார்கள். அரபியில் ஆலம் என்பதை ஆஜம் என்றும், ரமதான் என்பதை ரம்ஜான் என்றும் உருதுவில் கூறுவார்கள். தமிழில் ஆலம்,ஆஜம் என்பதை அகிலம், உலகம் என்று தான் குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பில் கூறப்பட்டுள்ளது. quaid (قائد) என்றால் Director என அர்த்தம். நானும் அமீரகத்தில் இராணுவ முகாமில் தான் பணிபுரிகிறேன்.

nation சரியான மொழி பெயர்ப்பு quaid சரியான மொழி பெயர்ப்பு --Hibayathullah 15:04, 12 ஜூன் 2010 (UTC)

ஆலம் (عالم) என்பதை உருதுக்காரரும் ஆலம் என்றே கூறுவதுண்டு. அதன் பொருள் அகிலம் என்பதாகும். ஆஜம் (ஆஸம்) என்று அவர்கள் கூறுவது أعظم என்ற சொல்லைத்தான். அதன் பொருள் மிக்க கண்ணியத்துக்குரியவர் என்பதாகும். யான் அரபு மொழியையும் உருது மொழியையும் கற்றிருக்கிறேன். இலங்கையில் மதரசாக்களில் அரபு மொழியுடன் உருது மொழியும் கற்பிக்கப்படுகிறது. சில இந்தோனேசியர்களும் உருது கற்றிருப்பதைக் காண முடிகிறது.--பாஹிம் (பேச்சு) 01:19, 16 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

மில்லத் (ملة) என்றால் வழி அல்லது நேர்வழி என்று பொருள். திருக்குர்ஆனில் ملة إبراهيم என்று குறிப்பிட்டிருப்பதற்கு இப்றாகீம் நபியின் வழிமுறை என்பது பொருள். அவ்வாறே, இறந்த உடலைப் புதைகுழியில் வைக்கும் போது بسم الله وعلى ملة رسول الله (இறைவனின் பெயராலும், இறைத்தூதரின் வழிமுறையின் மீதும் இதனைச் செய்கிறோம்) என்று கூறப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 01:25, 16 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

மறைந்த தேதி[தொகு]

மக்களவை இரங்கல் செய்திப் படி காயிதெ மில்லத் இறந்த தேதி 4 ஏப்ரல் 1972 என்று ஆ. விக்கியில் நான் எழுதியுள்ளேன். வேறு சில புத்தகங்களும் 1972 என்றே சொல்கின்றன. மாற்றி விடலாமா?--சோடாபாட்டில் 06:48, 31 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

[1]. 4/4/1972 என மாற்றி விடலாம்.--Kanags \உரையாடுக 07:09, 31 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
நன்றி கனக்ஸ், மாற்றி விட்டேன்.--சோடாபாட்டில் 07:30, 31 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]