பேச்சு:மின்னூட்டத் துகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின்மத்தில் இருந்து இது எவ்வாறு வேறுபட்டது? --இரா. செல்வராசு (பேச்சு) 21:36, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

electric charge (மின்மம் அல்லது மின்னூட்டம்), charged particle (மின்னூட்டத் துகள்). --பழ.இராஜ்குமார் (பேச்சு) 22:09, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மின்மம் என்பது எப்பொழுதும் எதிர் மின்னூட்டினை கொண்டிருப்பது. மின்னூட்டத் துகள் என்பது நேர், எதிர் மின்னூட்டம் அல்லது மின்னூட்டம் அல்லாத துகள்களை குறிப்பது. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 22:49, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மின்மத் துகள் என்றும் சொல்லலாம் (மின்னூட்டத் துகள் என்றும் சொல்லலாம்). மின்னூட்டம் அல்லாதத் துகளை மின்னூட்டத்துகள் என்றோ மின்மத்துகள் என்றோ சொல்வதில்லையே. அதனை மின்மமற்ற துகள் என்றே சொல்லவேண்டும். //மின்மம் என்பது எப்பொழுதும் எதிர் மின்னூட்டினை கொண்டிருப்பது.// -- இப்படிப் பொருள் இல்லை. மின்மம் என்பது நேர்மின்மமாகவோ எதிர்மின்மமாகவோ இருக்கலாம்- இது மின்ம வகையைப் பொருத்தது அன்று. ஆங்கிலத்தின் electric charge என்கிறார்களே அதற்கு நேர்ச் சொல். இடாய்ச்சு மொழியில் Elektrische Ladung இங்கே Ladung என்பது நாம் தமிழில் சுமை என்போமே அதே. இந்த மின்மம் நேர்மின்மாகவோ (ஒரு வகை), எதிர்மின்மமாகவோ (எதிர்வகைனிருக்கலாம். அந்த மின்மத்தின் அளவு (எந்த வகையாக இருந்தாலும்) கூலாம் என்னும் அலகில் அளக்கப்பெறுகின்றது. இது மின்தன்மையின் 'பருவளவு' (magnitute) பற்றியதுதானே அன்றி மின்மத்தன்மையின் வகையைப் பற்றியதல்ல.--செல்வா (பேச்சு) 02:14, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
மின்மத்தன்மையை "ஏற்று" இருப்பதாகச் கருதுவதால் இடாய்ச்சு மொழியில் Ladung (சுமை) என்பது போலக் குறிக்கின்றார்கள். தமிழ்ப்பாடநூல்களில்கூட சில இடங்களில் மின்சுமை என்று குறித்திருக்கின்றார்கள். ஆனால் மின் சுற்றுகள் பற்றிப் பேசும்பொழுது, மின்னோட்டம் பாய்ந்து அல்லது மின்னழுத்தம் தந்து பணி செய்யும் கருவியை (இக் கருவிக்கு மின் தடைமம் அல்லது தூண்டுமம் அல்லது தேக்கம் அல்லது இவை கொண்ட கூட்டு இயல்பு இருக்கும்) மின் சுமை (electrical load) என்று சொல்ல வரும்பொழுது குழப்பம் ஏற்படும். எனவே எளிய சொல்லாகிய மின்மம் என்பதைப் பயன்படுத்துகின்றோம்.--செல்வா (பேச்சு) 02:19, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி. செல்வா. தற்போது இன்னும் தெளிவாகியுள்ளேன். கட்டுரையில் உங்கள் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு ஒரு வரியை திருத்தியுள்ளேன். வேறேதும் கருத்து தவறுகள் இருந்தால் மாற்றிவிடுங்கள். --பழ.இராஜ்குமார் (பேச்சு) 06:02, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சரி --செல்வா (பேச்சு) 12:06, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]