உள்ளடக்கத்துக்குச் செல்

மின்னூட்டத் துகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்பியலில், மின்னூட்டத் துகள் (Charged particle) என்பது மின்மம் அல்லது மின்னூட்டத்துடன் உடைய துகளைக் குறிக்கும்.[1] புரோட்டான்கள் போன்ற சில கூட்டுத் துகள்கள் மின்னூட்டப்பட்ட துகள்கள் ஆகும். புரோட்டான்களுடன் ஒப்பிடும்போது எலக்ட்ரான்களின் மிகுதி அல்லது பற்றாக்குறையைக் கொண்ட மூலக்கூறு அல்லது அணு ஆகியவற்றிலிருந்து உருவான அயனிகளும் மின்னூட்டப்பட்ட துகள்களாகும். ஒரு மின்னூட்டப்பட்ட துகள் என்பது ஒரு எலக்ட்ரானின் அடிப்படை மின்னூட்டத்தின் அடிப்படையில் அளவிடப்படும் நேர்மறை மின் மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான், பாசிட்ரான், புரோட்டான் அல்லது அயனி எனவும் வரையறுக்கப்படுகிறது.[2]

எதிர் மின்சாரத்தின் மின்னூட்டத் துகள்களின் எண்ணிக்கையானது 1.6 X 10−19 கூலும் ஆக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு மின்னணுவில் (மின்னியில்) உள்ள மின்துகளின் எண்ணிக்கையாகும். அதே போன்று ஒரு கூலும்மில் உள்ள மின்னணுக்களின் எண்ணிக்கை 6 X 1018 என்பதாகும். இதேப் போன்று ஒரு 1 ஆம்பியர் மின்சாரம் என்பது 1 கூலும் துகள்கள் ஒரு நொடிக்கும் செலுத்தப்படுவதாகும். எனவே 1 ஆம்பியர் மின்சாரத்தில் 6 X 1018 மின்னணுக்கள் ஒரு நொடிக்கு செலுத்தப்படுகிறது எனலாம்.

ஒற்றை அயனிய துகள்களில் மின்னணுக்களின் எண்ணிக்கையும், மின்னூட்டின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்கும். ஆனால், இரட்டை அயனிய துகள்களில் மின்னணுக்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்காக மின்னூட்டின் எண்ணிக்கை இருக்கும். இது அயனியின் மின்னூட்டம் எதிராக இருந்தால் அது மின்னணுவின் மின்னூட்டுடைய இடைவெட்டு பெருக்கத்தொகையாகவே அயனியின் மின்னூட்டு காணப்படுவதினால் ஆகும்.


எடுத்துக்காட்டுகள்

[தொகு]

நேர்மின்சுமையுடைய துகள்கள்

[தொகு]

எதிர்மின்சுமையுடைய துகள்கள்

[தொகு]

பூஜ்ய மின்சுமையுடையவை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Frisch, David H.; Thorndike, Alan M. (1964). Elementary Particles. Princeton, New Jersey: David Van Nostrand. p. 54.
  2. "Charged Particle - an overview | ScienceDirect Topics". www.sciencedirect.com. Retrieved 2025-04-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னூட்டத்_துகள்&oldid=4257805" இலிருந்து மீள்விக்கப்பட்டது